IST (GMT+5.5)
  • Meditation
  • Let's Meditate
  • Messages - 2013
  • வேறொரு இயேசு, வேறொரு ஆவி, வேறொரு சுவிசேஷம்

இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


வேறொரு இயேசு, வேறொரு ஆவி, வேறொரு சுவிசேஷம்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. (2 கொரிந்தியர் 11:4)

அப்.பவுல் கொரிந்து சபைக்கு மேற்கண்ட காரியங்களை பற்றி எழுதுவதன் காரணம்,

ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். (2 கொரிந்தியர் 11:3)

  • வேறொரு இயேசு
  • வேறொரு ஆவி
  • வேறொரு சுவிசேஷம்

சபையைப் பற்றிய இந்த பயம் நியாயமானது என்பதற்கு இன்று நம் கண் காண நடந்து கொண்டிருக்கிற காரியங்களே சாட்சி. பரிசுத்த வேதத்திற்கு விரோதமான, வேதப் புரட்டான, மனித உபதேசங்கள் எங்கும் மலிந்து கிடக்கிறது. இது வேகமாய் பெருகியும், பரவியும் வருகிறது.

  • பிதாவின் ஒரே சொந்த குமாரானாம் நம் கர்த்தர் இயேசு கிறிஸ்துவை நிராகரிக்கும், மறுதலிக்கும், மட்டுபடுத்தும் எந்த உபதேசமும் பரிசுத்த வேதத்தின்படியானதல்ல. (யோவான் 1:1-3,14)
  • பிதாவின் வாக்குத்தத்தத்தின்படி, ஆண்டவர் இயேசு பிதாவினிடத்தில் வேண்டி நமக்கு அருளுகிற தேவனுடைய பரிசுத்த ஆவியானவரை நிராகரிக்கும், மறுதலிக்கும், மட்டுப்படுத்தும் எந்த உபதேசமும் பரிசுத்த வேதத்தின்படியானதல்ல. (லூக்கா 24:49, யோவான் 16:7)
  • பிதாவின் ஒரே பேரான சொந்த குமாரானாம் நம் கர்த்தர் இயேசு கிறிஸ்து, மனுஷ குமாரனாக பூமிக்கு இறங்கி வந்து கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்து பரலோகம் சென்று, பூமியை நியாந்தீர்க்க, பூமியில் தேவ ராஜ்யம் அமைக்க மீண்டும் இரண்டாம் முறையாக அதி சீக்கிரத்தில் வர இருக்கிறார் என்ற இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே தம் வாயினால் உரைத்த தேவ ராஜ்யத்தின் சுவிசேஷத்திற்கு விரோதமான, கலப்படமான, வேதப் புரட்டான எந்த சுவிசேஷமும் தேவனுடையதல்ல, பரிசுத்த வேதத்தின்படியானதல்ல. (கலாத்தியர் 1:7, மத்தேயு 24:14)

இன்னும் ஏராளமான வேத வசனங்கள் மேற்கண்ட உண்மைகளுக்கு சாட்சி சொல்கிறது. அவைகளை நாம் தெளிவாக அறிந்து அதில் முடிவு வரை நிலைத்து நிற்பது மிக அவசியம்.

கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக...(கொலோசெயர் 3:16)

மேலும் பரிசுத்த வேதத்திற்கு விரோதமானவைகளை செய்கிறவர்களைக் குறித்தும் பரிசுத்த வேதம் எச்சரிக்கிறது:

உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். (கலாத்தியர் 1:6-8)

இந்த கடைசி காலத்தின் கடைசி நாட்களில் வாழும் நாம், மிகுந்த விழிப்போடு இருந்து இப்படிப்பட்ட தீங்குகளுக்கு தேவனாகிய கர்த்தர் தாமே நம்மை விலக்கி காக்கும்படியாக அவர் பாதம் பற்றிக் கொள்வோம். பரிசுத்த வேத வசனத்தால் நம் இருதயத்தை நிறைப்போம். தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நம்மைக் முடிவு வரை காத்து நடத்துவார். தேவ ராஜ்யம் கொண்டு சேர்ப்பார்.

ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். (பிலிப்பியர் 3:18)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email