IST (GMT+5.5)

இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)


வெளிப்பாடு என்றால்...  (பகுதி 2)


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

நாம் தொடர்ந்து வெளிப்பாட்டைக் குறித்து தியானிப்போம்.

தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, (2 பேதுரு 1:3)

மேற்கண்ட வசனத்தில், மூன்று காரியங்களை கவனியுங்கள்: 1. நம்மை அழைத்தவரை அறிகிற அறிவு (epi-gnosis) ,  2. ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டியதெல்லாம் , 3. அவருடைய திவ்விய வல்லமை.

ஆவிக்குரிய காரியங்கள் எல்லாம் மேற்கண்ட மூன்று காரியங்கள் வழியாகவே நம்மிடத்தில் வருகிறது. எல்லா உண்மையும்  அல்லது எந்த ஒரு காரியத்தைக் குறித்த மெய்யான நிலையையும் ஆவிக்குரிய பரிமாணத்திலேயே நாம் அறிந்து பெற்றுக் கொள்ளமுடியுமே தவிர இந்த இயற்கை உலக அறிவின், சிந்தையின் பரிமாணத்தில் அல்ல.

எந்த ஒரு காரியத்தைக் குறித்த மெய்யான நிலையையும் தேவ ராஜ்யத்தின் ஆவிக்குரிய மண்டலத்தின் வழியாகவே நாம் அறிந்து உணர்ந்து கொள்ள முடியுமே தவிர நம் சிந்தையிலிருந்து அல்ல.

நம்முடைய நோக்கமெல்லாம் நாம் ஆவியில் வளருவதைப் பற்றியே இருக்க வேண்டும். நம் அறிவில்,சிந்தையில் அல்ல. இந்த உலகத்தில் நாம் இரண்டு முறையில் வாழலாம். ஒன்று நம் ஆவியின் வழியில் - அதாவது நம் ஆவியில் தேவ வழி நடத்துதலின்படி. அல்லது நம் சிந்தையை பின் பற்றி வாழலாம். இன்னும் விளக்கி சொன்னால், நம் சிந்தை, அறிவு காரியங்களை ஆராய்ந்து நம்மை வழி நடத்தும் அல்லது நம் ஆவி தேவனுடைய சிந்தையின்படி கட்டளையின் படி நம்மை நடத்தும் (Either your mind directs you through analytical thought, or your spirit directs you through spontaneous thoughts from God).

நாம் நம் இயற்கை சிந்தையை வளர்த்து வந்தால் அப்படியே இயற்கை அறிவிலேயே வாழுகிறவர்களாய் இருந்து விடுவோம், அந்த இயற்கை அறிவே நம்மிலிருந்து வெளிப்படும். ஆனால் நாம் நம் ஆவியில் தேவனுக்குள் வளர்ந்தால் நம்மிலிருந்து ஜீவன் புறப்படும், அதாவது தேவனுடைய ஜீவன் நம்மிலிருந்து வெளிப்படும்.

ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். (1 கொரிந்தியர் 2:14)

தேவனுடைய மெய்யான காரியங்கள் பரிசுத்த வேதத்தின் மூலமாகவோ அல்லது ஆண்டவர் இயேசுவினிடத்திலிருந்து  நேரடி வெளிப்பாடுகளாகவோ நம்மை வந்து சேருகிறது.

எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். (1 கொரிந்தியர் 2:9-10)

அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். (யோவான் 5:19)

நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30)

True knowledge and understanding is gained through revelation, which is light and power and has the ability to impart insight into the true nature of things.

பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. (யாக்கோபு 3:17)

(James 3:17) But the wisdom (insight into the true nature of things) that is from above is first pure, then peaceable, gentle, and easy to be entreated, full of mercy and good fruits, without partiality, and without hypocrisy.

This word wisdom in this verse is the Greek word Sophia which means insight into the true natures of things. This can only come from God by revelation; Note: it comes from above. Our mind has an important place in God but the natural mind is an enemy of God, it need to be re-educated through revelation from God in order for the knowledge it contains to be truth.

Revelation carries with it faith to attain to it and power to activate it.

(பகுதி 1) 


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email