IST (GMT+5.5)

இந்த வார தியானம்Logo Tamil 253x253

(Meditation for the Week)


வெளிப்பாடு என்றால்...


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன? (1 கொரிந்தியர் 14:6)

சத்தியத்தை நான்கு விதங்களில் அறிவிக்கிறதை குறித்து அப்.பவுல் மூலமாக பரிசுத்த ஆவியானவர் மேற்கண்ட வசனத்தில் விளக்குகிறார். அவைகள் :

  1. இரகசியங்களை வெளிப்படுத்துதல் (by Revelation)
  2. அறிவுண்டாக்குதல் (by Knowledge)
  3. தீர்க்கதரிசனத்தை அறிவித்தல் (by prophesying)
  4. போதகத்தைப் போதித்தல் (by doctrine)

தொடர்ந்து அடுத்த வசனங்களையும் பார்ப்போம்.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், (எபேசியர் 1:17)

தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;(எபேசியர் 1:18)

தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். (எபேசியர் 1:19)


That the God of our Lord Jesus Christ, the Father of glory, may give unto you the spirit of wisdom and revelation in the knowledge of him: (Ephesians 1:17)

The eyes of your understanding being enlightened; that ye may know what is the hope of his calling, and what the riches of the glory of his inheritance in the saints,(Ephesians 1:18)

இதில் வெளிப்பாடு (Revelation) என்கிற வார்த்தைக்குரிய கிரேக்க வார்த்தையின் விளக்கம் அல்லது முழு அர்த்தம் "தெய்வீக வெளிப்பாடு"  (The word revelation has the meaning of divine disclosure.)

அறிவு (Knowledge) என்ற வார்த்தைக்கு மூல மொழியான கிரேக்கத்தில்  இரண்டு வெவ்வேறு வார்த்தைகள் பரிசுத்த வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவைகள் :

GK "gnosis" - which means intellectual knowledge learnt through the mind and study.
              (கல்வி மற்றும் நம் மூளை அறிவைக் கொண்டு கற்றறிந்து கொள்ளுதல்)

Gk "epi-gnosis" - which is knowledge gained through an encounter with the source of knowledge.
        (அறிவுக்கு ஆதாரமும், மூலமுமாக இருப்பதிடம் இருந்து நேரடியான சந்திப்பின் மூலம் அறிந்து கொள்ளுதல்)


முதலாவது வார்த்தை கல்வி மற்றும் அனுபவத்தின் மூலம் மூளை அறிவாக கற்றறிந்து கொள்ளுதலை குறிப்பிடுகிறது.


இரண்டாவது வார்த்தை அறிவுக்கு மூலமாக இருப்பவரிடம் இருந்து நேரடியான தெய்வீக சந்திப்பின் மூலம் ஒரு வெளிப்பாடாக பெற்று அறிந்து கொள்வதை குறிக்கிறது.

விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு (gnosis) இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும். (1 கொரிந்தியர் 8:1)

தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற (Not according to epi-gnosis) வைராக்கியமல்ல. (ரோமர் 10:2)

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான (epi-gnosis) ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், (எபேசியர் 1:17)

தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி (epi-gnosis) புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே. (கொலோசெயர் 3:10)

நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் போல மாற ஆண்டவருடனான நேரடியான சந்திப்பின் மூலமாக இத்தகைய வெளிப்பாடுகள் நமக்குத் தேவை. இவை நம்மை கிறிஸ்து இயேசுவை போல் நம்மை மாற்றும். புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யார், எப்படிப்பட்டவர் என்கிற இத்தகைய வெளிப்பாடுகளின் மூலமாகவே நாம் தரித்துக் கொள்ள முடியும்.

வெளிப்பாடு என்பதின் சாராம்சம் அடிப்படையில் இது வெளிச்சம் மற்றும் வல்லமையுமாகும். மெய் வெளிச்சமும், சர்வ வல்லவருமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுடனான நேரடி சந்திப்புகள் (encounter) நம்மை முற்றிலும் மாற்றிவிடும். மூளை அறிவினால் கற்றறிந்து கொள்ளுதலுக்கு நம்மை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் போல் மாற்றும் வல்லமை இல்லை.

கிறிஸ்து இயேசுவில் உள்ள மெய் வெளிச்சத்தோடு இப்படிப்பட்ட நேரடியான சந்திப்புகளும் (Encounter) அதன் மூலம் வெளிப்பாடுகளும் (Revelation) நமக்கு நிச்சயமாக தேவை.

(தொடர்ந்து அடுத்த வாரமும் தியானிப்போம்...)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email