IST (GMT+5.5)

இந்த வார தியானம்Logo Tamil 253x253

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


பலியாகிய தேவ ஆட்டுக்குட்டி


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

...இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. (யோவான் 1:29)

பாவ நிவர்த்திக்கான சர்வாங்க தகனபலி (Burnt Offering to make atonement)

நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்த வேண்டும். அவன் செலுத்துவது மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் கொண்டுவந்து, அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். (லேவியராகமம் 1:2-5)

பாவ நிவாரண பலி (Sin Offering)

நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது: அபிஷேகம் பெற்ற ஆசாரியன், ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவஞ்செய்தால், தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையைப் பாவநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன். அவன் அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன். அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரத்தில் கொண்டுவந்து, தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்கக்கடவன். (லேவியராகமம் 4:2-6)

இப்படியாக, செய்யும் ஒவ்வொரு தவறை, குற்றத்தை, பாவத்தை நிவர்த்தி செய்ய பலவித  பலியிடும் வழிமுறைகள் தேவனாகிய கர்த்தரால், இஸ்ரவேல் மக்களுக்கு அளிக்கப்பட்டது, அவர்களும் அப்படியே செய்து வந்தார்கள். தேவனாகிய கர்த்தரை அறியாத மற்ற ஜனங்கள் இந்த பலியிடுதலை செய்யவில்லையே தவிர  பழைய ஏற்பாட்டின் படி இதுவே பாவம் நிவர்த்தி செய்யப்பட, பாவம் மன்னிக்கப்பட வழியாக இஸ்ரவேல் மக்கள் மூலமாக உலக மனுக்குலத்திற்கு தேவனால் அறிவிக்கப்பட்டது.

பரிசுத்த வேதத்தில் கர்த்தர் இதை குறித்து சொல்கிறார்:

மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. (லேவியராகமம் 17:11)

நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்;இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. (எபிரெயர் 9:22)

ஆனால், இன்றைக்கு நாம் செய்யும் ஒவ்வொரு தவறை, குற்றத்தை, பாவத்தை நிவர்த்தி செய்ய பலியிட வேண்டியிருந்தால், ஒவ்வொருவருக்காகவும், ஒவ்வொரு நாளும் எத்தனை பலிகள், எத்தனை இரத்தம்? ஆனால், இதற்கெல்லாம், பிதாவாகிய தேவன் தாமே தம் கிருபையினால் ஒட்டு மொத்த உலக மக்களுக்கும் உண்டுபண்ணின ஒரே வழி, ஒரு புதிய ஏற்பாடு:

தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்து (Jesus Christ is the Lamb of God). பரிசுத்த வேதத்தில் கர்த்தர் இதைக்குறித்து இப்படி சொல்கிறார்:

கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார். (ரோமர் 3:26)

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை (இயேசு கிறிஸ்துவை) நமக்காகப் பாவமாக்கினார். (2 கொரிந்தியர் 5:21)

அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. (ரோமர் 3:22)

அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். (ரோமர் 8:3)

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே (இயேசு கிறிஸ்துவே); நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். (1 யோவான் 2:2)

இப்படி, உலக மக்களின் பாவமெல்லாம் நிவர்த்தி செய்யப்பட, மன்னிக்கப்பட, தம்மைத் தாமே கல்வாரி சிலுவையில் தேவ ஆட்டுக்குட்டியாக இரத்தம் சிந்த, உடல் அடித்து கிழிக்கப்பட பழுதற்ற பலியாய் ஒப்புக் கொடுத்த இயேசு கிறிஸ்து ஒருவரே ஒரே வழி. அவருடைய பரிசுத்த இரத்ததிற்கே அந்த வல்லமை உண்டு. அதையே பரிசுத்த வேத வசனம் உறுதி செய்கிறது.

... அவருடைய (தேவனுடைய) குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)

ஒருவேளை கிறிஸ்து இயேசுவை நம் பாவம் தீர்க்கும் ஒரே வழியாக, நமக்காக பலியிடப்பட்ட பலியாக நம்பி, விசுவாசித்து அவரை ஏற்றுக்கொள்ளாமல் போனால், நம் பாவங்கள் மன்னிக்கப்படாமலே போகும். அதன் பிறகோ, நீதியான நியாத்தீர்ப்பின்படி என்றென்றும் நம் ஆன்மா நரக அக்கினியில்.

அவரை (இயேசு கிறிஸ்துவை) விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. (யோவான் 3:18)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email