IST (GMT+5.5)
Logo_Tamil_big_235x235

இந்த வார தியானம்

(Meditation for the Week)


ஜெபம்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

பரிசுத்த வேதத்திலிருந்து ஜெபத்தைக் குறித்த கீழ்க்கண்ட சில வசனங்களைப் பாருங்கள். தேவனாகிய கர்த்தரின் ஜெப கட்டளைகள், ஜெப ஆலோசனைகள் என அனைத்தும் இதில் அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு வசனமும் ஜெபத்தை குறித்து ஒரு விசேஷித்த காரியத்தை விளக்கி போதிக்கிறதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

அதோடு மட்டுமல்ல, ஒரு வேளை ஜெபம் செய்யாதிருந்தால், மற்றவர்களுக்காக தேவனிடத்தில் விண்ணப்பம் செய்யாதிருந்தால் என்ன என்பதைக் குறித்தும் வேதம் போதிக்கிறது. மேலும், ஜெபக்குறைவு என்பது ஆவிக்குரிய வாழ்வில் ஒரு குறை அல்லது இருக்க கூடாத காரியம் என்பதையும் வேதம் சுட்டிக்காட்டுகிறது. இந்த வாரம் முழுவதும் இந்த வசனங்களை தியானித்து பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்து ஜெபத்தைக் குறித்த வேத சத்தியங்களினால் நம் இருதயத்தை நிறைத்து காப்பாராக.

  • இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள். (கொலோசெயர் 4:2)
  • நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். (மத்தேயு 26:41)
  • அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். (மாற்கு 13:33)
  • ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். (லூக்கா 21:36
  • எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். (1 பேதுரு 4:7)
  • எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். (எபேசியர் 6:18)
  • நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். (ரோமர் 12:12)
  • இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:17)
  • நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். (பிலிப்பியர் 4:6)
  • சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார். (லூக்கா 18:1)
  • அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார். (சங்கீதம் 55:17)

 

  • நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர். (யோபு 15:4)
  • நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ... (1 சாமுவேல் 12:23)

 


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email