இன்றைய பரிசுத்த வேத வசனம்
தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபித்து கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயங்கொள்ளுவோம்:
என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள். (சங்கீதம் 129:2)You may check
Meditation on the Word of God...Food for your soul: Meditation >> Lets Meditate
2019 - வாக்குத்தத்த செய்தி
புத்தாண்டு தேவ செய்தி - ஜனவரி 2019 (New year Message - January 2019)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று, அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் நன்றியோடு துதித்து இந்த புதிய ஆண்டை ஆரம்பிப்போம். (சங்கீதம் 107:15-16) இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்! |
சாரோனின் ரோஜா ஊழியங்களுக்காக இந்த புதிய வருடத்தில் தேவனாகிய கர்த்தர் தந்திருக்கிற அவருடைய பரிசுத்த வேத வாக்குத்தத்தம்:
(ஏசாயா 45:4-5) வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன். நானே கர்த்தர், வேறொருவர் இல்லை; என்னைத்தவிரத் தேவன் இல்லை.
சத்துருவினால் உண்டான பெரும் தடைகளை, ஒருவராலும் எளிதில் நீக்க முடியாத பலத்த தடைகளை எல்லாம் நீக்கி, நமக்குரிய தேவ கிருபைகளை - அது நம் ஆவிக்குரிய மற்றும் இந்த உலக வாழ்வுக்குரிய நன்மைகள், ஆசீர்வாதங்கள், ஜெயம், விடுதலை, சமாதானம் ஆகிய பொக்கிஷங்களை, புதையல்களை தேவனாகிய கர்த்தர் இந்த வருடத்தில் நமக்கு தந்தருளுவார். ஒரு வேளை, இப்படிப்பட்ட கிருபைகளுக்காக இந்த தடைகளை தாண்டி செல்ல முடியாமல் வெகு காலம் நீங்கள் காத்திருந்தாலும், இந்த வருடத்தில் தேவன் உங்களுக்கு அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களை, ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களை தந்தருளுவார்.
நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட புதையல்களை குறித்து பரிசுத்த வேதத்திலும் சில குறிப்புகள் காணப்படுகிறது (எரேமியா 41:8). மேலும், கோரேசு அரசனுக்கு யுத்தத்தில் துணையாக நின்று தேவனாகிய கர்த்தர் எதிரி நாடுகளின் பொக்கிஷங்களை, புதையல்களை கொள்ளையாக கொடுத்தார் என்று வேத அறிஞர்கள் கூறுகிறார்கள். மட்டுமல்ல இஸ்ரவேல் தேசத்தின் வரலாற்றில், இந்த வார்த்தைகளை தம்முடைய தீர்க்கதரிசி மூலமாக தேவன் அருளிய கால கட்டங்களில், பாபிலோனிய சிறைகள் இப்படிப்பட்ட கடுமையான வெண்கல கதவுகளோடும், பெரிய தாழ்ப்பாள்களோடும் இருந்ததாக வேத அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு விட்டால், மீட்போ, விடுதலையோ அவ்வளவு எளிதான காரியமல்ல. அநேகமாக, அந்த சிறைகளிலேயே வாழ்வு முடிந்து விடும். இன்று நாமும், நமக்குரிய மேற்சொன்ன தேவ கிருபைகளும் கூட இப்படிப்பட்ட சிறையிருப்பிலிருந்து மீட்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு நமக்கு கொடுக்கப்பட வழியில்லாத நிலையில், கர்த்தர் அருளும் இந்த வாக்குத்தத்தை பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபிப்போம். அப்பொழுது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நமக்காக வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து நம்மை, நம் வாழ்வை மீட்டு நமக்குரிய பொக்கிஷங்கள், புதையல்களாகிய , சகல கிருபைகளையும் நமக்கு அருளி செய்வார்.
நாம் செய்ய வேண்டியது, அவரிடத்தில் திரும்ப வேண்டும், அவருடைய வழிகளுக்கு திரும்பவேண்டும். கடந்து வந்த கடினமான பாதைகளால், பட்ட கஷ்டங்களால், சத்துருவினால் உண்டான பாடுகளால், இழப்புகளால் நாம் ஒருவேளை சோர்ந்து, நம்பிக்கை இழந்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விட்டு விலகிப் போய் இருக்கலாம். ஆனால், இன்று அவரிடம் திரும்புவோம். அவருடைய வழிகளுக்கு திரும்புவோம். காரணம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே இதை செய்ய முடியும் என்பதை ஏசாயா 45 -ம் அதிகாரம் முழுவதையும் நாம் படிக்கும் போது அறிந்து கொள்ள முடியும். பரிசுத்த வேதம் போதிக்கிறது:
(சகரியா 9:12) நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.
(சங்கீதம் 31:4) அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண்.
(சங்கீதம் 28:8) கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.
(சங்கீதம் 43:2) என் அரணாகிய தேவன் நீர்; ...
(நீதிமொழிகள் 10:29) கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.
எனவே, தடைகளை நீக்குகிற மீட்பர், நம்மை விடுவிக்கிற நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் முன்னே செல்வதால், நன்றியோடு, நம்பிக்கையோடு நாம் அவர் வழி செல்வோம். அவராலே வெல்வோம். வாழ்ந்திருப்போம்.
(மீகா 2:13) தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.
(2 நாளாகமம் 6:4) ...இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.
தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
2020 கிறிஸ்துமஸ் தேவ செய்தி
டிசம்பர் 2020 (Christmas Message December 2020)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
![]() |
தேவன் நமக்கு அருளிய சொல்லி முடியாத ஈவாகிய, விலை மதிக்க முடியாத வெகுமதியாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவர் நமக்காக இந்த பூமியில் வந்து பிறந்ததை நினைவுகூரும் இந்த நாட்களில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை கொண்டாடும் உங்கள் யாவருக்கும் அன்பின் வாழ்த்துகள். ஆமென். |
![]() |
தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் - 2 கொரிந்தியர் 9:15
இந்த தேவ செய்தியில் மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின்படி பிதாவாகிய தேவன் உலக மனிதர் அனைவருக்காகவும் அளித்த தம் ஒரே சொந்த, நேச குமாரன் - பரிசுத்த பிள்ளை இயேசு கிறிஸ்து எப்படியெல்லாம் விளக்கி சொல்லி முடியாத (unspeakable, indescribable), ஈடு இணையில்லாத ஒரு மாபெரும் பரிசாக, வெகுமதியாக இருக்கிறார் என்பதையே சற்று தியானிக்கப் போகிறோம்.
பரிசுத்த பிதாவாகிய தேவன் உலக மக்கள் யாவரையும் நேசிக்கும் தம் இணையில்லா அன்பை தம் குமாரன் இயேசு கிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பி வெளிப்படுத்தினார், மனிதரில் அன்பு கூர்ந்தார். எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மனிதருக்கு அவர் அளித்த மாபெரும் அன்பின் ஈவு, வெகுமதி ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இந்த தேவ அன்பின் நோக்கமெல்லாம் உலக மனிதரை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே மீட்டு ரட்சித்து தம்மோடு ஒப்புரவாக்கி, தம் அன்பின் உறவில் மீண்டும் இணைத்துக் கொண்டு என்றென்றும் தம்முடனே, தாம் இருக்கும் பரலோகத்திலேயே வைத்துக் கொள்வதேயாகும். எவ்வளவு பெரிய பாக்கியம்!!
(யோவான் 3:16) தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
(ரோமர் 5:8) நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
(யோவான் 3:17) உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
(ரோமர் 5:10) நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
(எபேசியர் 2:8) கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
(ரோமர் 8:32) தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?
ஈவாகிய கிறிஸ்து இயேசுவே கிறிஸ்தவ வாழ்க்கை:
சொல்லி முடியாத ஈவாகிய கிறிஸ்து இயேசுவே கிறிஸ்தவ வாழ்வின் ஆதாரம், அஸ்திபாரம். ஆரம்பம், முடிவு. கிறிஸ்து இயேசு எப்படியெல்லாம் விலைமதிக்க முடியாத, விளக்கி சொல்லி முடியாத வெகுமதியாக நமக்கு இருக்கிறார் என்பதைக் குறித்து பரிசுத்த வேத வசனங்களின் மூலமாக சற்றே தியானிப்போம்.
>>>> உலக இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவால் ஒட்டு மொத்த உலகத்திற்கும் பாவ மன்னிப்பு. மட்டுமல்ல பாவ, சாப மற்றும் இருளின் அடிமைத்தனம், அதிகாரத்திலிருந்து விடுதலையும் ஆகும். இவை எல்லாவற்றையும் செய்து முடித்தது பிறப்பிலிருந்து சிலுவை மரணம் வரை பாவம் அறியாத பரிசுத்தர் இயேசு, உலக மனிதர் அனைவரின் பாவம், சாபம், நோய்களை தம் மீது ஏற்றுக்கொண்டு நமக்காக சிலுவையில் பாவமாகி (2 கொரிந்தியர் 5:21, 1 யோவான் 3:5), சாபமாகி (கலாத்தியர் 3:13) மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தம் மட்டுமே.
(யோவான் 1:29) மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
(யோவான் 1:36) இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
(எபிரெயர் 9:22) நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
(1 பேதுரு 1:19) குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
(1 யோவான் 1:7) ...அவருடைய (தேவனுடைய) குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
(1 யோவான் 2:2) நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.
>>>> ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் இரத்தத்தை விலையாக கொடுத்து மீட்டது தான் நம் ஆத்துமா அல்லது ஆன்மா. இப்படி கிறிஸ்து இயேசு நமக்கு அளித்த ஆத்தும இரட்சிப்பினால் அவரே நம் இரட்சகர், மீட்பர். கர்த்தராகிய அவருக்கு நாம் நம்மை ஒப்புக்கொடுத்து இருப்பதால், அவருடைய ஆளுகை அதாவது கர்த்தத்துவம் நம் மீது இருப்பதால் அவரே நம் கர்த்தர், கர்த்தாதி கர்த்தர். நம் ஆத்துமாவை மீட்டதோடு மட்டுமல்ல உலகத்தில் நாம் வாழும் காலமெல்லாம் நம் ஆத்துமாவை காத்து, போஷித்து முடிவில் பரலோகம் கொண்டு சேர்க்கும் கிறிஸ்து இயேசுவே மணவாட்டி சபையாகிய நம் ஆத்தும மணவாளன்.
(லேவியராகமம் 17:11) மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
(அப்போஸ்தலர் 20:28) ...தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை ....
(வெளிப்படுத்தின விசேஷம் 7:14) அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
(1 கொரிந்தியர் 8:6) பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
(யோவான் 13:13) நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
(பிலிப்பியர் 2:11) பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
(அப்போஸ்தலர் 17:28) ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; ...
(கொலோசெயர் 1:16-17) ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.(17) அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
>>>> கிறிஸ்து இயேசுவே நம் பரிசுத்தம், நம் நீதி
(எரேமியா 23:6) அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.
(1 கொரிந்தியர் 1:31) அவரே (கிறிஸ்து இயேசுவே) தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
(ரோமர் 5:9) இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
(1 கொரிந்தியர் 6:11)...ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
(ரோமர் 5:19) அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
(ரோமர் 5:21) ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.
>>>> பிதாவினிடத்தல் நமக்காக பரிந்து பேசும் கிறிஸ்து இயேசு, இவரே நம் பரிகாரி, இவரே நம் மத்தியஸ்தர், இவரே நம் நித்திய பிரதான ஆசாரியர்.
(எபிரெயர் 9:11-12) கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,(12) வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
(1 தீமோத்தேயு 2:5-6) தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.(6) எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
(எபிரெயர் 10:19-22) ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,(20) அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,(21) தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,(22) துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
>>>> நம் ஆத்துமா நஷ்டப்படாமல் நித்திய ஜீவனை, பரலோக வாழ்வை பெற்றுக்கொள்ள கிறிஸ்து இயேசுவே வாசல், வழி, சத்தியம், ஜீவன், நித்திய ஜீவன், ஜீவ வார்த்தை, ஜீவ அப்பம், ஜீவ ஒளி, உலகத்திற்கு ஒளி, நல்ல மேய்ப்பன், மெய்யான திராட்சை செடி.
(யோவான் 14:6) அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
(யோவான் 17:17) உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
(யோவான் 1:1) ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
(யோவான் 8:12) மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
(1 யோவான் 1:1) ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
(யோவான் 6:48, 51) ஜீவ அப்பம் நானே. (51) நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
(யோவான் 15:1, 5) நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். (5) நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
(யோவான் 10:7, 9) ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (9) நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
(யோவான் 10:11,14-15) நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (14) நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், (15) நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
(ரோமர் 6:23) பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
(1 யோவான் 5:20) அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
(யோவான் 3:36) குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; ....
(யோவான் 17:3) ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
>>>> இப்படிப்பட்ட விலைமதிக்க முடியாத வெகுமதியாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் இரண்டாம் முறையாக இந்த பூமிக்கு அதி சீக்கிரத்தில் வரப்போகிறார். தாம் இருக்கும் அந்த உன்னதமான இடத்தில், பரலோகத்தில் நாமும் அவரோடு கூட இருக்க விரும்பி நம்மை அழைத்துக்கொண்டு போக வருகிறார். நம் இரட்சிப்பை பூரணப்படுத்த நித்திய ஜீவனை நமக்கு அளிக்க வருகிறார். கர்த்தருடைய இரகசிய வருகைக்கு ஆயத்தமாயிருப்போம்.
(யோவான் 17:24) பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.
(மத்தேயு 24:44) நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
(ரோமர் 5:17) அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.
தேவனுக்கே சகல துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக. ஆமென்.
(Part 3 & நிறைவு பகுதி ) 2020 - ஆண்டு தேவ செய்தி
ஜூன் 2020 (Year 2020 Message - Part 3 & final - Jun 2020)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
இம்மானுவேல் என்ற மகிமை நிறைந்த தம்முடைய நாமத்தின்படியே நம்மோடிருக்கும் தேவனாகிய கர்த்தரை நன்றியோடு துதித்து (மத்தேயு 1:23) விசுவாசத்தோடு இந்த கடினமான கால கட்டத்தை கடந்து செல்லுவோம். தேவன் நம்மோடிருக்கிறார். ஆமென். |
(வெளிப்படுத்தின விசேஷம் 22:11) ... நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தையே நாம் தியானித்துக் கொண்டிருக்கிறோம். முந்தைய செய்தியில் "நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்" என்ற பகுதியை தியானித்தோம். இந்த செய்தியில், "பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்" என்ற பகுதியை தியானித்து அறிந்து இந்த சத்திய தியானத்தை நிறைவு செய்வோம். சத்திய ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.
பரிசுத்தம் என்பது நாம் இரட்சிக்கப்பட்ட நாளிலிருந்து அதாவது, நம் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து, தம் இரத்தத்தினால் நம்மை முற்றிலும் கழுவி நம் பாவங்கள் யாவையும் நீக்கி நம்மை இரட்சிக்கிற, நம் இரட்சிப்பின் அனுபவத்தின் ஒரு பகுதியாக தேவனாகிய கர்த்தருடைய கிருபையால், கிறிஸ்து இயேசுவின் கிருபையின் ஈவால் நமக்கு அருளப்படுகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் (1 யோவான் 1:7), பரிசுத்த ஆவியானவர் (1 கொரிந்தியர் 6:11), பரிசுத்த வேத வசனம் (யோவான் 15:3, 17:17), பரிசுத்த அக்கினி (ஏசாயா 6:6-7) ஆகியவற்றால் நாம் கர்த்தரால் பரிசுத்தம் பண்ணப்படுகிறோம்.
தேவனாகிய கர்த்தருடைய கட்டளையின்படியே நம் நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாய் நடக்க (1 பேதுரு 1:15) நாம் கவனமாயிருந்து ஒவ்வொரு நாளும் பரிசுத்தமாக்கப்படுகிறோம். இப்படியே அனுதினமும் நாம் பரிசுத்தமாய் நடந்து நம் பரிசுத்தத்தை பூரணப்படுத்த வேண்டியது அவசியம் (2 கொரிந்தியர் 7:1). பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் (வெளிப்படுத்தின விசேஷம் 22:11).
(லேவியராகமம் 20:26) கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.
(2 கொரிந்தியர் 7:1) இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை எப்படியெல்லாம் பரிசுத்தமாக்குகிறார் என்பதை சற்றே கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்களின் வழியாக அறிவோம்.
(யோவான் 15:3) நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.
(யோவான் 17:17) உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
(யோவான் 17:19) அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.
(ரோமர் 15:15) அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்தஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு,...
(1 கொரிந்தியர் 6:11) உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
(2 தெசலோனிக்கேயர் 2:13) கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
(எபிரெயர் 10:10) இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
(எபிரெயர் 10:14) ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
(யூதா 1:1) ...பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு ....
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குள் வந்து தங்கி நம்மில் என்றும் வாசமாயிருக்க நாம் அவருடைய ஆலயமாயிருப்பதும், அந்த ஆலயம் பரிசுத்தமாயிருப்பதும் அவசியம். நம் முயற்சி என்பது - நாம் நம் நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாய் நடந்து கொள்கிறோம். ஆனால், நம் நடக்கையினால் நாம் பரிசுத்தவானல்ல, பரிசுத்தராகிய தேவன், இயேசு கிறிஸ்து நமக்குள் வந்து வாசம் பண்ணுவதால் நாம் பரிசுத்தவான்களாகிறோம். ஆகவே, பரிசுத்தத்தை நோக்கிய நம் முயற்சியெல்லாம் பரிசுத்த தெய்வத்தை, நம்மை பரிசுத்தமாக்குகிற பரிசுத்தரை நமக்குள் கொண்டிருப்பதைப் பற்றியதேயாகும்.
(லேவியராகமம் 20:8) என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
(லேவியராகமம் 22:32) என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
(ஏசாயா 48:11) என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.
(1 கொரிந்தியர் 3:17) ... தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
(2 கொரிந்தியர் 6:16) ... நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
(சங்கீதம் 93:5) ...கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.
(சங்கீதம் 132:14) இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம்பண்ணுவேன்.
(1 பேதுரு 3:15) கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; ...
(1 கொரிந்தியர் 1:31) அவரே (கிறிஸ்து இயேசுவே) தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
நாம் பரிசுத்தமாய் நடக்க முயற்சி செய்யும் போது, நமக்கு எதிராக முன்னால் நிற்கும் மூன்று காரியங்கள் - பாவம், மாம்சம் மற்றும் பிசாசு. பாவம் நமக்குள் - அதாவது நம் சரீரத்தில், மாம்சத்தில், ஐம்புலன்களில் வாசமாயிருக்கும் போது (ரோமர் 7:17-20) நம்மால் பரிசுத்தமாய் வாழ முடியாது. எனவே தான் பரிசுத்த வேதம் நமக்கு போதிக்கிறது :
(ரோமர் 6:12) ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
எனவே, நாம் செய்ய வேண்டியது :
(ரோமர் 6:13) நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
இப்படி நாம் நம் சரீர அவயவங்களை தேவனுக்கு ஒப்புக் கொடுக்கும்போது, பாவம் நம்மை மேற்கொள்ள முடியாது. நம் சரீரத்தில் பாவம் ஆளுகை செய்ய முடியாது.
(ரோமர் 6:14) நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
(ரோமர் 6:18) பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.
(ரோமர் 6:22) இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
(ரோமர் 6:23) பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
மட்டுமல்ல, பரிசுத்த வேதம் பிசாசுக்கு எதிராக நாம் ஜெயங்கொள்வது எப்படி என்பதையும் போதிக்கிறது:
(யாக்கோபு 4:7) ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
(எபேசியர் 4:27) பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.
(எபேசியர் 6:11) நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
(1 பேதுரு 5:8-9) தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்;...
பரிசுத்தமும், தேவபக்தியும், நீதியும் ஒன்றோடறொன்று தொடர்புடையது, ஒன்றையொன்று சார்ந்தது.
(1 கொரிந்தியர் 6:11) உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
பரிசுத்தமில்லாமல் தேவ பக்தியுள்ளவர்களாக முடியாது, நீதியான கிரியைகளை நடப்பிக்காமல் பரிசுத்தமாய் நடப்பதும் முடியாது. கர்த்தர் போதிக்கும் கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் பரிசுத்த ஆவியானவரால் நம் வாழ்க்கையில் உண்மையாக்கப்படும்போது மட்டுமே பரிசுத்தமும், தேவபக்தியும், நீதியும் சாத்தியம். கீழ்க்காணும் பரிசுத்த வேத வசனங்களில், முதலாவது சொல்லப்பட்டிருக்கிற "புதிய மனுஷன்" நம் ஆத்துமாவிலும் இரண்டாவதாக சொல்லப்பட்டிருக்கிற "புதிய மனுஷன்" நம் ஆவியிலும் உண்டாக வேண்டிய மெய்யான அனுபவங்களாகும்.
(எபேசியர் 4:22-24) அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
(கொலோசெயர் 3:9-10) ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.
எனவே தேவனிடத்தில் மேற்கண்ட பரிசுத்த வேத வசனங்களின்படியே கருத்தாய் வேண்டிக்கொள்வோம். கர்த்தர் நமக்கு அருளிச் செய்வார். தம்முடைய வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துவார். அவருடைய வருகையில் நம்மை எடுத்துக் கொண்டு தம் நித்திய ராஜ்யம் கொண்டு சேர்ப்பார்.
(2 பேதுரு 1:3-11) தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது. இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான். ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.
(வெளிப்படுத்தின விசேஷம் 22:11) ... நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
தேவனுக்கே சகல துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக. ஆமென்.
2020 - புத்தாண்டு தேவ செய்தி
ஜனவரி 2020 (New year Message - January 2020)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
Part 2, Part 3 2020- ஆண்டு தேவ செய்திகள்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
இம்மானுவேல் என்ற மகிமை நிறைந்த தம்முடைய நாமத்தின்படியே நம்மோடிருக்கும் தேவனாகிய கர்த்தரை நன்றியோடு துதித்து, விசுவாசத்தோடு இந்த புதிய ஆண்டை ஆரம்பிப்போம். (மத்தேயு 1:23) அன்பின் புத்தாண்டு நல் வாழ்த்துகள்! |
இந்த புதிய வருடத்திற்குரிய பரிசுத்த வேத சத்திய தியானமாக நாம் கீழ்காணும் வேத வசனங்களை சற்றே விரிவாக தொடர் செய்திகளாக தியானிக்க இருக்கிறோம். சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துகிற சத்திய ஆவியானவர் (யோவான் 16:13) தாமே நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக.
(மத்தேயு 1:23) ... அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
(வெளிப்படுத்தின விசேஷம் 22:11) ... நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
மேற்கண்ட பரிசுத்த வேத வசனங்களில், முதல் வசனம் நமக்கு மெய்யான அனுபவமாயிருக்குமானால் மட்டுமே இரண்டாவது வசனத்திற்கு நாம் கீழ்படிந்து நடப்பதும், பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம், பரிசுத்த வேதத்தின்படி இன்னும் அதிக நீதியான கிரியைகள் என நம் வாழ்வில் மெய்யாவதும் சாத்தியம்.
பரிசுத்தம் என்பது நம் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் என மூன்று வகையிலும் தொடர்புடையது. அதே போல், பரிசுத்தத்திற்கு எதிரான காரியங்களும், அசுத்தங்களும் அவ்வாறே தொடர்புடையது. எனவே தான் பரிசுத்த வேதம் போதிக்கிறது:
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. (1 தெசலோனிக்கேயர் 5:23)
அடுத்ததாக, தேவனுடைய பார்வையில் நீதி என்பது என்ன? தேவ நீதி என்றால் என்ன, அது எப்படிப்பட்டது என்பதையும் தேவ நீதிக்கு, நீதியின் கிரியைகளுக்கு எதிரான சுய நீதி எப்படிப்பட்டது என்பதையும் தியானிக்க இருக்கிறோம். பரிசுத்த வேதத்தில் சுய நீதியைக் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது:
நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது. (ஏசாயா 64:6)
இந்நிலையில், பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம், பரிசுத்த வேதத்தின்படி இன்னும் அதிக நீதியான கிரியைகள் என கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு தயாராவதைக் குறித்த சத்தியத்தை அடுத்தடுத்த செய்திகளில் தொடர்ந்து விரிவாக காண்போம்.
தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
(Part 2) 2020 - புத்தாண்டு தேவ செய்தி
பிப்ரவரி 2020 (New year Message - Part 2 - February 2020)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
இம்மானுவேல் என்ற மகிமை நிறைந்த தம்முடைய நாமத்தின்படியே நம்மோடிருக்கும் தேவனாகிய கர்த்தரை நன்றியோடு துதித்து, விசுவாசத்தோடு இந்த புதிய ஆண்டை தொடர்வோம். (மத்தேயு 1:23) |
(வெளிப்படுத்தின விசேஷம் 22:11) ... நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தையே நாம் தியானித்துக் கொண்டிருக்கிறோம். இந்த செய்தியில், கீழ்காணும் ஒரு பகுதியை தியானித்து அறிந்து கொள்வோம். சத்திய ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.
(வெளிப்படுத்தின விசேஷம் 22:11) ... நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; ...
சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்பட்ட தேவ நீதியை விசுவாசித்து கிருபையினால் நாம் நீதிமான்களாக்கப்படுவது ஒருபுறம் (ரோமர் 1:17, 3:22, 3:24), பரிசுத்த வேத கட்டளைகளை, நியாயங்களை கைக்கொண்டு நீதியாய் நடப்பது அல்லது நீதியை செய்வது என்பது மற்றொருபுறம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாம் நீதிமான்களாக்கப்படுதல் ஒருபுறம், நாம் நீதியை நடப்பிப்பது மற்றொரு புறம். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளுகிற மிக முக்கியமான பரிசுத்த வேத சத்தியம் என்னவென்றால் நாம் செய்கிற அல்லது நடப்பிக்கிற நீதியினால், நீதியான கிரியைகளினால் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நாம் நீதிமான்களாவது என்பது என்றும் இயலாத காரியம். காரணம்,
(ஏசாயா 64:6) நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.
(தானியேல் 9:18) என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்...நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.
எனவே, தேவ நீதியை விசுவாசிப்பதினால் - அதாவது கிறிஸ்து இயேசுவை விசுவாசிப்பதினால் கிருபையைக் கொண்டு நாம் தேவனால் நீதிமான்களாக்கப்படுகிறோம். அதன் பிறகு பரிசுத்த வேத கட்டளைகளை கைக்கொண்டு நீதியை நடப்பிக்கிறோம். இந்த இரண்டையும் நாம் செய்ய வேண்டியது மிக அவசியம். நாம் எப்படி நீதிமான்களாக்கப்படுகிறோம்? இதை விளக்கும் பரிசுத்த வேத வசனங்களில் சிலவற்றை கீழே காண்போம்.
(ஏசாயா 50:8) என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; ...
(எரேமியா 33:16) ... அவர் எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
(1 கொரிந்தியர் 1:31) அவரே (கிறிஸ்து இயேசுவே) தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
(ரோமர் 3:22) அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.
(ரோமர் 3:24) இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
(1 கொரிந்தியர் 6:11) உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
(ரோமர் 8:30) எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.
(ரோமர் 8:33) தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
(ரோமர் 5:1) இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
(ஏசாயா 41:10) ...என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
(ஏசாயா 53:11) ...என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.
(ரோமர் 1:17) விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.
(பிலிப்பியர் 3:9,11) நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,... அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.
(ரோமர் 5:21) ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.
அடுத்ததாக, அநீதியும், பொல்லாங்கும் நிறைந்த (1 யோவான் 5:19) இந்த உலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையில் நாம் நீதிமானாயிருந்து, நீதியை நடப்பிப்பது என்பது அனுதின சவால் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், இதை முற்றிலும் நமக்குள்ளும், நமக்கு வெளியிலும் சாத்தியமாக்குவது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு எளிதான காரியம். மட்டுமல்ல, உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாகிய நம்முடைய விசுவாசத்தினால் (1 யோவான் 5:4,5) நீதியை நடப்பிக்க நம்மால் முடியும் என்றும் ஆண்டவரே சொல்வதையும் கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்களில் காண்போம்.
(எரேமியா 32:27) இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?
(மத்தேயு 17:20) அதற்கு இயேசு: ...கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாதகாரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(ரோமர் 10:10) நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
கிறிஸ்து இயேசு சிலுவையில் செய்து முடித்த எல்லாவற்றையும் எனக்காகவே செய்து முடித்தார் என விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அது நீதியாகவே எண்ணப்படும் என்று பரிசுத்த வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது.
(ரோமர் 4:3) வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
(ரோமர் 4:5) ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
(ரோமர் 4:23) அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காக மாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
நாம் நீதியை, நீதியின் கிரியைகளை செய்வதை குறித்து இன்னும் சற்று அறிந்து கொள்வோம். நீதி என்பது தேவனாகிய கர்த்தர் அருளிய பரிசுத்த வேதத்தில் அவர் நமக்கு போதித்து சொல்லியிருக்கிறவைகளை, அதாவது அவருடைய கட்டளைகள் (statutes), அவருடைய கற்பனைகள் (commandments), அவருடைய நியாயங்கள் (judgements), அவருடைய சாட்சிகள் (testimonies) அடங்கிய அவருடைய பரிசுத்த வேதத்தை கைக்கொண்டு செய்வதும், நிறைவேற்றுவதுமே ஆகும்.
(சங்கீதம் 19:9) ... கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.
(சங்கீதம் 119:138) நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
(உபாகமம் 6:25) நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.
(சங்கீதம் 23:3) அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
(1 யோவான் 2:29) அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.
(அப்போஸ்தலர் 10:35) எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.
(1 யோவான் 3:7) பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
(1 யோவான் 3:10) இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.
(சங்கீதம் 5:8) கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.
(நீதிமொழிகள் 21:21) நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.
(சங்கீதம் 106:3) நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச்செய்கிறவர்களும் பாக்கியவான்கள்.
(லூக்கா 1:6) அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
(ஏசாயா 48:18) ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.
(எசேக்கியல் 18:5-9) என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
நீதியான கிரியைகளுக்கு ஓரிரு உதாரணங்களையும் பரிசுத்த வேதத்திலிருந்து காண்போம்.
(சங்கீதம் 112:9) வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
(சங்கீதம் 82:3-4) ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
(மத்தேயு 3:14-15) யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
(1 பேதுரு 3:14) நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; ...
(யாக்கோபு 3:18) நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.
(யோவான் 7:18) ...தன்னை அனுப்பினவரின் (பிதாவாகிய தேவனுடைய) மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
நீதியாய் நடப்பது, நீதியை செய்வது என்ற இந்த பாதையில், கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் ஒரு எச்சரிக்கையையும் நாம் அறிந்து கொண்டு அதை என்றும் மனதில் வைத்துக் கொள்வது அவசியம். அது:
(2 பேதுரு 2:21) அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே, நம் ஒவ்வொருவரையும் தம்முடைய நீதிமான்களாக்கி, நம்மை தம்முடைய பரிசுத்த வேதத்தின்படி நீதியை செய்கிறவர்களாக தம் வருகை வரையிலும் காத்து நடத்தி, தம்முடையை இரகசிய வருகைக்கு, எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு (1 தெசலோனிக்கேயர் 4:16-17) ஆயத்தப்படுத்துவாராக. தம் வருகையில் எடுத்துக்கொண்டு நீதியின் கிரீடத்தை, நித்திய ஜீவனை நமக்கு அருளிச் செய்வாராக.
(2 தீமோத்தேயு 4:8) இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
(நீதிமொழிகள் 12:28) நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.
(ஏசாயா 56:1) கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது.
தேவனுக்கே சகல மகிமையும் உண்டாவதாக. மாரநாதா, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சீக்கிரமாய் வாரும், ஆமென்.
(இந்த தேவ செய்தியின் நிறைவு பகுதி அடுத்த மாத செய்தியில்)
More Articles …
Subcategories
Messages - Before 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012க்கு முன்
(Meditation on the Word - God's Message - before 2012)
Messages - 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012
(Meditation on the Word - God's Message - 2012)
Messages - 2013
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2013
(Meditation on the Word - God's Message - 2013)
Messages - 2014
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2014
(Meditation on the Word - God's Message - 2014)
Messages - 2015
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2015
(Meditation on the Word - God's Message - 2015)
Messages - 2016
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2016
(Meditation on the Word - God's Message - 2016)
Messages - 2017
Lets Meditate Word of God. Messages - 2017
Messages - 2018
Lets Meditate Word of God. Messages - 2018
Messages - 2019
Lets Meditate Word of God. Messages - 2019
Messages - 2020
Lets Meditate Word of God. Messages - 2020
Messages - 2021
Lets Meditate Word of God. Messages - 2021
Messages - 2022
Lets Meditate Word of God. Messages - 2022
Messages - 2023
Lets Meditate Word of God. Messages - 2023
Messages - 2024
Lets Meditate Word of God. Messages - 2024
Messages - 2025
Lets Meditate Word of God. Messages - 2025
Page 10 of 11
Thou art my King, O God. (Ps 44:4)
Pray

இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். (சங்கீதம் 48:2)
...எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35)