இன்றைய பரிசுத்த வேத வசனம்
தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபித்து கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயங்கொள்ளுவோம்:
என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள். (சங்கீதம் 129:2)You may check
Meditation on the Word of God...Food for your soul: Meditation >> Lets Meditate
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
பிழைத்தாலும் மரித்தாலும் (இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் தேவ செய்தி) கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். (1 கொரிந்தியர் 15:17) உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்து எழுந்திருக்கவிட்டால், மனுக்குலம் முழுதும் இன்னும் பாவத்திலேயே இருந்திருக்கும் என்பதையே மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் நமக்கு சொல்கிறது. ஏனென்றால், நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; ... (1 பேதுரு 2:24) நம் பாவங்களை மாத்திரம் அல்ல, நம் வியாதிகள், நோய்கள், சாபங்கள், நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும்படியாக அதற்கான தண்டனை என எல்லாவற்றையும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே சிலுவையில் சுமந்து தீர்த்திருந்தாலும், இவை எல்லாவற்றிக்கும் மூல காரணம் பாவம். எனவே தான் பரிசுத்த வேதம் சொல்கிறது: அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். (ரோமர் 4:25) ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்ததின் மிக பிரதான பலன்களில் ஒன்று நாம் நீதிமான்களாக்கப்படுவதே. இது நம் முயற்சிகளினால் உண்டானதல்ல. தேவ கிருபையினால், கிறிஸ்து இயேசு சிலுவையில் நம் பாவங்களை சுமந்து தீர்த்ததை நாம் விசுவாசித்து அவருடைய நீதியை நாம் பெற்றுக் கொள்வது, சுதந்தரித்துக் கொள்வதாகும். ஏனென்றால் பரிசுத்த வேதம் விளக்குகிறது: இலவசமாய் அவருடைய (தேவனுடைய) கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; (ரோமர் 3:24) ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. (ரோமர் 5:18) அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். (ரோமர் 5:19) நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். (2 கொரிந்தியர் 5:21) இப்படி, உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும், அவருடைய உயிர்த்தெழுதலையும் விசுவாசித்து நாம் நீதிமான்களாக்கபட்டிருக்க நாம் அவருக்காக என்ன செய்ய வேண்டும், என்ன செய்து அவர் உள்ளத்தை மகிழ வைக்க முடியும்? அவருக்கு பிரியமாய் நடக்க முடியும்? அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். (ரோமர் 6:11) மட்டுமல்ல, இனி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக மட்டுமே வாழும்படியாய் அவருடைய கரங்களில் நம்மையும், நம் வாழ்க்கையையும் ஒப்புக் கொடுத்து வாழ வேண்டும் என்பதையும் பரிசுத்த வேதம் நமக்கு போதிக்கிறது: பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம். (2 கொரிந்தியர் 5:15) அப்படி நம்மையும், நம் வாழ்க்கையையும் ஒப்புக் கொடுத்து வாழும்போது: நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். (ரோமர் 14:8) ஒரு வேளை, நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும், அவர் நமக்காக பட்ட அவருடைய சிலுவை பாடுகளையும், அவருடைய உயிர்த்தெழுதலையும் அறிந்து கொண்ட பின்பும், அதாவது சத்தியத்தை உண்மையை அறிந்து கொண்ட பின்பும் துணிந்து, விரும்பி நாம் பாவம் செய்தால் ? சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். (எபிரெயர் 10:26-27) (புனித வெள்ளி செய்தியை இங்கே காணலாம்) நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
யாருக்காக (புனித வெள்ளி செய்தி) கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; ... (1 பேதுரு 2:24) காணக்கூடாதவராகிய சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவன் - மெய்த்தெய்வம் - ஒரே கடவுள் - தன் ஒரே பிள்ளையை, தன் சொந்த குமாரனை மனிதரில் யாவரும் காணக்கூடியவராக, நம்மைப் போல் மனிதனாக இந்த பூமிக்கு இயேசு கிறிஸ்து என்னும் பெயரில் அனுப்பினார். இரண்டாயிரத்து பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனிதனாய் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சகித்த அவமானங்கள், எல்லோருக்கும் நல்லதே செய்தும் அவர் அனுபவித்த தீங்குகள், வியர்வை இரத்தமாய் வரும் அளவிற்கு அவர் அனுபவித்த விளக்க முடியாத துக்கங்கள், பயங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக சிலுவையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பட்ட சொல்லி முடியாத பாடுகள் இவை அனைத்தும் நமக்காக என்பதையே மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் விளக்குகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்காக பட்ட பாடுகளை, சுமந்து தீர்த்தவைகளை, செய்து முடித்தவைகளை விளக்கும் மேலும் சில பரிசுத்த வேத வசனங்கள்:
ஏன் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்காக இத்தனை பாடுகளை சிலுவையில் சுமந்து தீர்க்க வேண்டும்?
எனவே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து, சிலுவையில் பட்ட பாடுகள் - ஏதோ ஒரு மனிதன், ஒரு சரித்திர புருஷன் அல்லது ஒரு நல்ல மனிதன் சிலுவையில் மரண தண்டனை அனுபவித்து மரித்து உயிர்த்தார் என்பதல்ல. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து - பிதாவாகிய தேவனுடைய குமாரன் (யோவான் 11:27), மனுக்குலத்தின், உலக மக்கள் அனைவரின் பாவம் போக்கும் பரிசுத்த பலி (1 யோவான் 2:2), பாவத்திலிருந்து மீட்கும் மீட்பர், இரட்சகர், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் கர்த்தர், என்றென்றும் அவரோடு வாழச்செய்ய நித்திய ஜீவன் அளிக்கும் தெய்வம். எனவே தான், ஆண்டவர் இயேசு கிறிஸ்து - கிறிஸ்தவர்களின் தெய்வம் மட்டும் அல்ல, அவர் : ...அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் .... (யோவான் 4:42) எனவே தான், பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். (1 யோவான் 4:14) (ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகளை குறித்த செய்தியை இங்கே காணலாம்) நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
பங்கு கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். (லூக்கா 10:42) இந்த பூமியில் நாம் வாழும் நம் நாட்களில் எல்லாம் நாம் நமக்கென தெரிந்துகொள்ள வேண்டிய பங்கை (a Portion or Share) குறித்து - அதாவது தெரிந்து கொள்ள பல பங்குகள் இருந்தாலும் அதில் எது மிகச் சிறந்தது, நம்மை விட்டு என்றும் எடுபட்டு போகாது என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே மார்த்தாள், மரியாள் என்னும் சகோதரிகளை கொண்டு நமக்கு விளக்கி சொல்லும் ஒரு சத்தியமே இந்த பரிசுத்த வேத வசனம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மார்த்தாள், மரியாள் என்னும் சகோதரிகளின் வீட்டுக்கு சென்ற போது, மார்த்தாள் ஆண்டவர் தன் வீட்டுக்கு வந்ததின் காரணமாக அவரை உபசரிக்க தேவையான எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்க, மரியாளோ ஆண்டவர் இயேசுவின் பாதத்தருகே அமர்ந்து ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை, தேவ காரியங்களை அவரிடத்தில் கேட்டுக் கொண்டிருக்க, அப்பொழுது மார்த்தாள் ஆண்டவரிடம் வந்து தான் மட்டுமே தனியாக வேலைகளை செய்து கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாகவும், மரியாளை உதவிக்கு அனுப்பி வைக்க ஆண்டவரிடம் வேண்டிக்கொண்ட போது ஆண்டவர் இயேசு தாமே சொன்ன பதிலே மேற்கண்ட பரிசுத்த வேத வசனம். ஆண்டவரின் இந்த பதிலிலிருந்து, பூமியிலே நமக்கென உள்ள பங்குகளில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும், அதில் ஒன்று மட்டுமே என்றும் நம்மை விட்டு எடுபட்டு போகாமல் - அதாவது பூமியில் இந்த வாழ்க்கை முடிந்த பின்பும் நித்தியமாக வாழும் வாழ்க்கையிலும் அந்த பங்கு என்றும் நம்மோடிருக்கும் என்பதும் நமக்கு விளங்குகிறது. அப்படியானால் பரிசுத்த வேதம் இதைக் குறித்து என்ன சொல்கிறது? இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு. (பிரசங்கி 5:18) மேற்கண்ட இந்த பங்கை குறித்து இதன் தன்மையை குறித்து பரிசுத்த வேதம் மேலும் விளக்குகிறது: தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப்போவான்; அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக்கொண்டுபோவதில்லை. (பிரசங்கி 5:15) மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். (சங்கீதம் 17:14) அப்படியானால், இந்த பங்கு அதாவது - பூமியில் இந்த வாழ்க்கையில் ஆசைப்படுகிற அனைத்து காரியங்களையும், அதானால் உண்டாகும் மகிழ்ச்சியையும் அனுபவித்தாலும் - அதன் எல்லை இந்த உலக வாழ்க்கை மட்டுமே, அதாவது பூமியில் நம் ஆயுளின் அளவு மட்டுமே. இந்த பங்கு இந்த உலக வாழ்க்கைக்கு பிறகு - அதாவது ஒன்று மரணத்திற்கு பின்பு அல்லது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு பின்பு என்றும் வாழும் நித்திய வாழ்க்கைக்கு இந்த பங்கை எடுத்து செல்லவும் முடியாது, வேறு வார்த்தையில் சொன்னால் நித்திய வாழ்விற்கும் இந்த பங்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. முன்னமே சொன்னது போல், இதன் எல்லை இந்த உலக வாழ்வு வரை மட்டுமே. ஆனால், மரியாள் தெரிந்து கொண்ட நல்ல பங்கு என்ன, அதன் சிறப்பு என்ன? மரியாள் தெரிந்து கொண்ட நல்ல பங்கு இந்த உலக வாழ்வின் ஈர்ப்போ, அதன் மகிழ்ச்சியோ அல்ல. மரியாள் தெரிந்து கொண்ட நல்ல பங்கு தன்னை விட்டு எடுபடாத ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை - அதாவது தேவனுடைய வார்த்தையாம் (யோவான் 1:1,14) ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே. அவர் தான் சத்தியம், நித்திய வாழ்வு மற்றும் அதை அடைய வழி. இந்த நல்ல பங்கு - ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்றும் நம்மை விட்டு நீங்குவதில்லை - இவ்வுலக வாழ்விலும், என்றென்றும். கர்த்தர் இயேசு கிறிஸ்துவையே நம் பங்காக நாம் தெரிந்து கொண்டால் நம்மை விட்டு அவரையும், அவரை விட்டு நம்மையும் எதுவும் பிரிக்க முடியாது. அப்படியாக கர்த்தர் நம்மை தம்மோடு தம் பிள்ளைகளாக உறவாக்கி, கல்வாரி சிலுவையில் நமக்கென தாம் சிந்தின தம் பரிசுத்த இரத்தத்தினால் நம்மை தம் உரிமையாக்கி என்றென்றும் தம்மோடு, தமக்குள் வைத்துக் கொள்வார். பரிசுத்த வேதம் இவைகளை கீழ்காணும் வசனங்கள் மூலம் விளக்குகிறது: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; ... (யோவான் 14:6) நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; .... (1 கொரிந்தியர் 7:23) குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. (1 பேதுரு 1:19) மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். (ரோமர் 8:38-39) எனவே தான், தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற அவருடைய அன்பின் தாசனாகிய தாவீது மூலமாக பரிசுத்த ஆவியானவர் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பங்கை குறித்து இந்த பரிசுத்த வேத வசனங்களின் மூலம் நமக்கு போதிக்கிறார். கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன். (சங்கீதம் 142:5) ... கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன். (சங்கீதம் 119:57) கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன். (புலம்பல் 3:24) நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
கூடாரம் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான். இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் ஸ்தாபனம்பண்ணப்பட்டது. (யாத்திராகமம் 40:16-17) பரிசுத்த வேதத்திலே, தேவனாகிய கர்த்தர் தம்முடைய தாசனாகிய மோசேக்கு கொடுத்த கட்டளைகள் மற்றும் வழிமுறைகளின் படி, இஸ்ரவேல் மக்கள் நடுவே தேவனாகிய கர்த்தர் வாசம் பண்ண ஒரு வாசஸ்தலத்தை கட்டி முடித்து ஸ்தாபித்ததையே மேற்கண்ட வசனம் நமக்கு விளக்குகிறது. மோசேயின் கூடாரம் இஸ்ரவேல் மக்கள் தாங்கள் அடிமைப்பட்டு இருந்த எகிப்து தேசத்தை விட்டு தேவனாகிய கர்த்தர் தம் தாசனாகிய மோசேயை கொண்டு அவர்களை விடுதலையாக்கி, வனாந்திர வழியாக அவர்களை நடத்தி வரும்போது அவர்கள் நடுவிலே தான் வாசம்பண்ணும்படியாக இப்படி செய்தருளினார். இது ஆசரிப்பு கூடாரம் என்ற அழைக்கபட்டதோடு இந்த ஆசரிப்பு கூடாரத்தை இஸ்ரவேல் மக்கள் தாங்கள் போகும் இடமெங்கும் தங்களுடனே கூட எடுத்து சென்று தாங்கள் தங்கும் இடங்களிலெல்லாம் இதை ஸ்தாபிப்பார்கள். இஸ்ரவேல் மக்களுக்கு நடுவில் தாம் வாசம் பண்ணவும், அவர்கள் தம்மை தொழுது வணங்கி ஆராதிக்க, தம் கட்டளைகள், கற்பனைகள், பண்டிகைகள் நிறைவேற்ற, தாம் அவர்களை வழி நடத்த இந்த ஆசரிப்பு கூடாரத்தில் தேவனாகிய கர்த்தர் வாசம் பண்ணினார். இது மூன்று பகுதிகளை கொண்டிருந்தது, அவைகள் - வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் என்பதாகும். இதில் மகா பரிசுத்த ஸ்தலத்தில், தேவனாகிய கர்த்தர் மோசேக்கு தம் விரலினால் தாமே எழுதிக் கொடுத்த பத்து கட்டளைகள் (அல்லது) சாட்சி பிரமாணம், உடன்படிக்கை பெட்டி, கிருபாசனம் இருந்தன. இவைகளைக் குறித்து பரிசுத்த வேதத்தில் - யாத்திராகமம் 25:10-22, யாத்திராகமம் 40 - இங்கே நாம் விளக்கமாக அறிந்து கொள்ளலாம். ஆனால் இந்த கூடாரத்திற்குள் எல்லோரும் செல்லவோ, எப்பொழுதும் சென்று தேவனை தொழுது கொள்ளவோ முடியாது. இந்த கூடாரத்தின் வெளிப்பிரகாரம் தவிர பரிசுத்த ஸ்தலமும், மகா பரிசுத்த ஸ்தலமும் திரை சீலைகளால் மூடி மறைக்கப்பட்டிருந்தது. பிரதான ஆசாரியன் என்னும் தேவனாகிய கர்த்தர் ஏற்படுத்தின ஊழியனே வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தன்னை பரிசுத்தப்படுத்திக் கொண்ட பின் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் சென்று தேவ ஊழியத்தை நிறைவேற்ற முடியும். தாவீதின் கூடாரம் இதற்கு பிறகு, தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு தாம் வாக்கு பண்ணின தேசத்தை அவர்களுக்கு தந்து, அதை அவர்கள் சுதந்தரிக்கும்படியாக செய்த பின் அவர்கள் விரும்பி கேட்டபடியே அவர்களுக்கு அவர்களை ஆள ராஜாக்களை ஏற்படுத்தின பின்பு, தேவனுடைய தாசனாகிய தாவீது ராஜா தேவனாகிய கர்த்தருக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். ஆனால் இந்த கூடாரத்தில் எல்லாருடைய கண்களும் காண கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி வைக்கப்பட்டது. கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார். (சங்கீதம் 132:13) ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று. (2 சாமுவேல் 5:7) தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான். (2 சாமுவேல் 6:12) அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான். (2 சாமுவேல் 6:17) இந்த தாவீதின் கூடராம், பின்னாளில் வெளிப்பட்ட நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், அவர் மூலமாக பிதாவாகிய தேவனை எங்கும் தொழுதுகொள்ளும் காலம் வருகிறதை முன்னறிவிக்கும் ஒரு தீர்க்கதரிசன அடையாளமாக இருந்தது. அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார். (ஆமோஸ் 9:12) கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார். (ஏசாயா 16:5) நாமே கூடாரம் நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? (1 கொரிந்தியர் 3:16) என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். (யோவான் 14:26) எனவே தான், இன்று இந்த உடன்படிக்கை பெட்டி கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்குள் இருக்கிறது. அதாவது கர்த்தருடைய கற்பனைகளும், கட்டளைகளுமாகிய பரிசுத்த வேதத்தை, சத்தியத்தை நம் இருதயத்தில் கொண்டிருந்தால் நாமே தேவனுடைய ஆலயமாய், தேவனுடைய கூடாரமாய் இருக்கிறோம். இந்த காரியத்தை தேவனுடைய ஆவியாகிய சத்திய ஆவியானவர் நமக்குள் செய்கிறார். இப்பொழுது நம்மை காண்கிற யாவரும் சீயோனில் இருந்த தாவீதின் கூடாரத்தில் வெளியரங்கமாக்கப்பட்ட கர்த்தருடைய மகிமையை நம்மில், நம் மூலமாக காண வேண்டும். அப்படி காணும் போது தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக சமீபித்திருக்கிற இந்த நாட்களில் நாம் கடைசியான ஒரு மிகப்பெரிய ஆத்தும அறுவடையை கர்த்தருக்காய் செய்து நிறைவேற்ற முடியும். எண்ணில்லாத ஆத்துமாக்களை நரக அக்கினிக்கு தப்புவித்து பரலோகத்திற்கு, தேவ ராஜ்யத்திற்கு நேராக நடத்த முடியும். தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். (யாக்கோபு 5:20) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நமக்கு கிருபை செய்து, தம் பரிசுத்த ஆவியானவராலே இதை நம்மைக் கொண்டு செய்து முடிப்பாராக. தேவனாகிய கர்த்தருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. பரிசுத்த வேதம் இப்படியாக சொல்கிறது: நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ... வந்து சேர்ந்தீர்கள். (எபிரெயர் 12:23-24)
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
காலம் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். (எபேசியர் 5:16) மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் மிக முக்கியமான ஒரு ஆலோசனையை மட்டுமல்ல, மிகவும் அருமையான தேவ வழி நடத்துதலையும் நமக்கு சொல்லுகிறது. ஒவ்வொரு புதிய வருடத்திற்குள் நாம் அடியெடுத்து வைக்கும் போதும். நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நோக்கி நெருங்கிக்கொண்டே இருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே தான், இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்பதையும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பரிசுத்த வேதம் மேற்கண்ட வசனத்தில் மூலம் நமக்கு போதிக்கிறது. பரிசுத்த வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன் மற்றும் அதற்கு பின் நடக்க இருக்கும் சம்பவங்களை நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. அப்பொழுது, மேற்கண்ட வசனத்தை நாம் முழுமையாக அறிந்து கொள்ள, அதன் தீவிரத்தை உணர்ந்து கொள்ள அது உதவியாயிருக்கும். பரிசுத்த வேத வசனம் விளக்கும் அந்த ஏழு நிகழ்வுகள் என்பது என்ன? அவைகள் நடந்தேறும் நாட்கள், காலங்கள் எது? இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் குறித்து பரிசுத்த வேதத்தில் ஏராளமான குறிப்புகளும், விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் ஓரிரு வசனங்களை மாத்திரமே இங்கே குறிப்பிடுகிறேன். 1. அந்திகிறிஸ்துவின் வருகை (Coming of Antichrist) 2 தெசலோனிக்கேயர் / 2 Thessalonians 2:1-10 2. (a) உபத்திரவ காலம் - 3 ½ ஆண்டுகள் (Tribulation Period) வெளிப்படுத்தின விசேஷம் / Revelation 12:1,2,13 3. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை அல்லது மத்திய வானத்தில் வருதல் (Rapture / Secret Coming) 1 கொரிந்தியர் / 1 Corinthians 15:51-52 2. (b) மகா உபத்திரவ காலம் - 3 ½ ஆண்டுகள் (Great Tribulation Period) மத்தேயு / Matthew 24:29 4. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை (Second Coming of Lord Jesus) அப்போஸ்தலர் / Acts 1:9-11 5. கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சி (Millennial Reign of Lord Jesus Christ) வெளிப்படுத்தின விசேஷம் / Revelation 20:4 6. நித்திய நியாயத்தீர்ப்பு அல்லது வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு (Eternal Judgement / White Throne Judgement) தானியேல் / Daniel 12:2 7. புதிய வானம், புதிய பூமி, புதிய எருசலேம் (A New Heaven, A New Earth and the Holy City New Jerusalem) 2 பேதுரு / 2 Peter 3:10
நாம் கொண்டாடும் இந்த 2014ம் ஆண்டில், ஒரு உதாரணத்திற்கு அல்லது எளிதாக புரிந்து கொள்வதற்காக - நாம் ஒரு சிறு கணக்கீட்டை செய்து பார்ப்போம். ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் இரண்டாம் வருகை 2025 ஆண்டில் சம்பவிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு முன்பதாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் முதல் மூன்று நிகழ்வுகள் நடந்து முடிய வேண்டும். அதாவது, 2019ம் ஆண்டில் இருந்து 7 வருடங்கள் அந்திக் கிறிஸ்துவின் ஆட்சி (அந்திகிறிஸ்துவின் வருகை, உபத்திரவ காலம் - 3 ½ ஆண்டுகள், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை, மகா உபத்திரவ காலம் - 3 ½ ஆண்டுகள்). அப்படியானால், இந்த உதாரணத்தின் படி இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே நாம் கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாக நமக்கு உள்ளது. அதன் பிறகு, இறுதியான ஒரு சோதனை (வெளிப்படுத்தின விசேஷம் 13:16-18) அந்திகிறிஸ்துவின் நாட்களில் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு உண்டு. அது, என்ன நடந்தாலும் முடிவுவரை - கர்த்தாகிய இயேசுவையே தெய்வமாக வணங்கி அவருடைய பிள்ளையாகவே வாழ்ந்து முடிப்பது (வெளிப்படுத்தின விசேஷம் 14:13) அல்லது சாத்தானை, சாத்தானின் மறு உருவமாகிய அந்திகிறிஸ்துவை வணங்குவது (வெளிப்படுத்தின விசேஷம் 14:9). இதில் கர்த்தருடைய பிள்ளைகளாய் முடிவரை நிலைத்திருக்கும் போது மட்டுமே நித்திய ஜீவன் - அதாவது பரலோகில் ஆண்டவரோடு என்றென்றும் வாழ்வு. இல்லாவிட்டால், பரிசுத்த வேதத்தில் காண்கிறபடி என்றென்றும் சாத்தானுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் (மத்தேயு 25:41) என உண்டாக்கப்பட்ட நித்திய அக்கினி தண்டனையான நரகம் (வெளிப்படுத்தின விசேஷம் 14:9-11). எனவே, கிருபையாக தேவனால் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த காலங்களை பிரயோஜனப்படுத்திக் கொண்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி பணிந்து கொள்வோம். அவர் தம் பிள்ளைகளாகவே முடிவுரை வாழுவோம். பரிசுத்த ஆவியானவர் தாமே நம்மை அப்படியாக காத்து நடத்துவாராக. அப்பொழுது நியாயத்தீர்ப்பின் நாளிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை பார்த்து சொல்வார்: அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். (மத்தேயு 25:32-34) |
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
More Articles …
Subcategories
Messages - Before 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012க்கு முன்
(Meditation on the Word - God's Message - before 2012)
Messages - 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012
(Meditation on the Word - God's Message - 2012)
Messages - 2013
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2013
(Meditation on the Word - God's Message - 2013)
Messages - 2014
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2014
(Meditation on the Word - God's Message - 2014)
Messages - 2015
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2015
(Meditation on the Word - God's Message - 2015)
Messages - 2016
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2016
(Meditation on the Word - God's Message - 2016)
Messages - 2017
Lets Meditate Word of God. Messages - 2017
Messages - 2018
Lets Meditate Word of God. Messages - 2018
Messages - 2019
Lets Meditate Word of God. Messages - 2019
Messages - 2020
Lets Meditate Word of God. Messages - 2020
Messages - 2021
Lets Meditate Word of God. Messages - 2021
Messages - 2022
Lets Meditate Word of God. Messages - 2022
Messages - 2023
Lets Meditate Word of God. Messages - 2023
Messages - 2024
Lets Meditate Word of God. Messages - 2024
Messages - 2025
Lets Meditate Word of God. Messages - 2025
Page 7 of 11
Thou art my King, O God. (Ps 44:4)
Pray

இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். (சங்கீதம் 48:2)
...எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35)