இன்றைய பரிசுத்த வேத வசனம்
தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபித்து கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயங்கொள்ளுவோம்:
என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள். (சங்கீதம் 129:2)You may check
Meditation on the Word of God...Food for your soul: Meditation >> Lets Meditate
இந்த வார தியானம் (Meditation for the Week) |
ஆபிரகாமும் அந்நிய பாஷையும் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று. (கலாத்தியர் 3:13-14)
மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று. (கலாத்தியர் 3:13-14) |
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
இந்த வார தியானம் (Meditation for the Week) |
தீப ஆவி கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். (கலாத்தியர் 5:25) மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின் படி, நாம் தேவனுடைய ஆவியினாலே பிழைத்திருந்து, அவரால் நடத்தப்படும் போது தான், வேதத்தின் படி நாம் தேவ ஆவிக்கேற்ற படி நடக்கிறவர்களாக இருப்போம். ஆனால், நாம் அப்படி நடக்க முடியாதபடி தடையாய், இடையுறாக கீழ்கண்ட வாழ்க்கை முறைகள் இருக்கிறது. 1. மாம்சத்தின்படி - அதாவது உடல், உலக ஆசை இச்சைகளின்படி நடப்பது 1.மாம்சத்தின்படி (Physical,Sensual,Fleshly life) முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள். (லூக்கா 8:14) மேற்கண்ட வேத வசனம் இதை தெளிவாக விளக்குகிறது. சிற்றின்பங்கள் (Pleaseures of this Life) அதாவது உடல், உலக ஆசை இச்சைகளுக்கு கீழ்படிந்து, அவைகளை நிறைவேற்றி அவைகளையே மையப்படுத்தி வாழுகிற வாழ்க்கை நாம் தேவ ஆவிக்கேற்ற படி வாழ பெரும் தடையாக இருக்கிறது. 2. ஆத்துமாவின்படி (Soul Life) அதாவது ஆத்துமாவின் ஒரு பகுதியான மனதை மையப்படுத்தி வாழும் வாழ்க்கை. தன் மன விருப்பங்கள், தன் சொந்த கொள்கைகள், நெறிமுறைகள் மற்றும் தன் மன திருப்தி என வாழும் வாழ்க்கை ஆத்தும அல்லது ஆன்மீக வாழ்க்கையாகும். ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைகளின் படி இதை நாம் கட்டாயம் வெறுத்து வாழ வேண்டியதின் அவசியத்தை நமக்கு தெளிவாக சொல்கிறது. அப்பொழுது தான் நாம் கர்த்தருடைய பிள்ளைகளாய் வாழ முடியும் என்பதற்கு வழி காட்டி விளக்குகிறது. பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். (லூக்கா 9:23) இதிலே தனைத்தான் என்ற வார்த்தையின் கிரேக்க மூல மொழி பெயர்ப்பு "ஆத்துமா" என்றே விளக்குகிறது ( The word “himself” is the Greek word "Psuche" - Soul life). மேற்கண்ட இரண்டு வாழ்க்கை முறைகளும் தவறானதும், வேதத்திற்கு விரோதமானதும் ஆகும். ஆனால் நாம் வாழ வேண்டிய வாழ்க்கை முறையை தான் கீழ்கண்ட வேத வசனம் நமக்கு விளக்குகிறது. 3. ஆவிக்குரிய வாழ்க்கை (Spiritual Life - God's life in our Spirit) கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் (Spirit of Life) பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. (ரோமர் 8:2)
மேற்கண்ட வேத வசனங்களின்படி, தேவனுடைய ஜீவன் நமக்குள் வரும்போது, நம் ஆவியில் அது ஒளியாய் நிரம்பும் போது, மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும். (நீதிமொழிகள் 20:27) அப்பொழுது, அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வது போல், ...என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன்.... (ரோமர் 1:9) நாமும் தேவனை ஆவியோடு சேவித்து, தொழுது கொண்டு தேவ ஆவிக்கேற்றபடி நடக்கிறவர்களாயிருப்போம். |
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
![]() |
இந்த வார தியானம் (Meditation for the Week) |
ஜெபம் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, பரிசுத்த வேதத்திலிருந்து ஜெபத்தைக் குறித்த கீழ்க்கண்ட சில வசனங்களைப் பாருங்கள். தேவனாகிய கர்த்தரின் ஜெப கட்டளைகள், ஜெப ஆலோசனைகள் என அனைத்தும் இதில் அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு வசனமும் ஜெபத்தை குறித்து ஒரு விசேஷித்த காரியத்தை விளக்கி போதிக்கிறதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
|
|
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
உலக இரட்சகர் (யோவான் 4:42) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கர்த்தர் தாமே இந்த புதிய ஆண்டில் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும், இந்த கடைசி காலத்தின் கடைசி நாட்களின் எல்லா தீங்குக்கும் விலக்கி, தம்முடைய நித்திய ஜீவ பாதையில் உங்களை காத்து நடத்துவாராக.
இந்த புதிய ஆண்டில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நல் வார்த்தைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள எனக்கு கிருபை செய்கிற என் தேவனாகிய கர்த்தருக்கு கோடான கோடி நன்றி.
கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். (சங்கீதம் 86:11)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நல் வழிகளை அறிந்து, அவருடைய சத்தியத்திலே, உண்மையிலே நாம் நடக்க நமக்கு முக்கியமாக தேவைப்படுகிற ஒரு காரியத்தையே மேற்கண்ட வசனம் நமக்கு விளக்குகிறது.
1) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி ஒருமுகப்படுத்தப்பட்ட இருதயம்
2) அதன் விளைவாக, கர்த்தருக்கு பயப்படும் பயம்.
இந்த வசனத்தில், இருதயம் என்பது நம் உணர்வுகள், நம் சுய விருப்பம் அல்லது சித்தம் மற்றும் நம் அறிவு (Our feelings, our own will and even our intellect) ஆகியவற்றை குறிக்கிறது.
இந்த உலக வாழ்க்கையில், நம் இருதயத்தை கர்த்தருக்கு ஏற்றபடி ஒருமுகப்படுத்த தடையாக, இடையூறாக பல காரியங்கள் உள்ளதை வேதத்தில் ஆண்டவர் தாமே விளக்கி கூறியிருக்கிறார்.
உலகக்கவலை, ஐசுவரியத்தின் மயக்கம் – அதாவது பொருளாசை, பணத்தின் மீதான மயக்கம் (மத்தேயு 13:22), பாவ ஆசைகள், பயம், நம்பிக்கையின்மை, சில நேரத்தில் நம் சொந்த அறிவு போன்றவைகள் அவற்றுள் சில. இந்த தடைகளை எல்லாம் தாண்டி, ஜெயித்து நம் இருதயத்தை தேவனாகிய கர்த்தரை நோக்கி ஒருமுகப்படுத்தும் போது, அதன் விளைவாக முக்கியமான ஒரு காரியம் நமக்குள் நடக்கிறது. அது, உண்மையாகவே கர்த்தருக்கு – அதாவது சர்வ வல்லமையுள்ள தெய்வத்திற்கு பயப்படும் பயம் நமக்குள் உண்டாகிறது.
இந்த தெய்வ பயம் அல்லாத மற்ற எல்லா பயத்தைக் குறித்து பரிசுத்த வேதாகமம் இப்படி சொல்கிறது:
...பயமானது வேதனையுள்ளது... (1 யோவான் 4:18)
ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பயப்படும் பயம் – அதாவது தெய்வ பயம் என்றால் என்ன, அது எப்படிப்பட்டது, அதின் பலன்களை என்ன என்பதைக் குறித்து பரிசுத்த வேதாகமம் கீழ்க்கண்டவாறு விளக்கி கூறுகிறது:
தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; ...(நீதிமொழிகள் 8:13)
The fear of the LORD is to hate evil: pride, and arrogancy, and the evil way, and the froward mouth, do I hate. (Proverbs 8:13)
- கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; (The beginning of Knowledge) நீதிமொழிகள் 1:7
- கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; (Prolongeth Days) நீதிமொழிகள் 10:27
- கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். (Strong Confidence) நீதிமொழிகள் 14:26
- கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். (A Fountain of Life) நீதிமொழிகள் 14:27
- கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது. (Leads to Life) நீதிமொழிகள் 19:23
- தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.(Attaining true Riches and Honors) நீதிமொழிகள் 22:4
- கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது. (Clean and enduring forever) சங்கீதம் 19:9
- பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்.(stability of your times, and strength of salvation) ஏசாயா 33:6
நாம் தேவனாகிய கர்த்தருக்கும் உலகத்திற்கும் பிரியமாக நடக்க முடியாது. காரணம், பரிசுத்த வேதம் கீழ்கண்டவாறு சொல்கிறது.
இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.(மத்தேயு 6:24)
ஒருவேளை நாம் அப்படி இருந்தால் நம் இருதயம் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஒருமுகப்படவும் முடியாது, தெய்வ பயமும் நமக்குள் இராது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நோக்கி நாம் இன்னும் நெருங்கி இருக்கிற இந்த நேரத்தில், நாம் வேதம் சொல்லும் இந்த உலகத்தின் தீமைகளை, பாவ ஆசைகளை வெறுத்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையே நமக்கு முன் வைத்து (சங் 16:8), அவரிடம் வேண்டிக் கொள்ளும்போது அவரே நம் இருதயத்தை தம்மை நோக்கி ஒருமுகப்படுத்துவார். பரிசுத்தஆவியானவர் தாமே இதை நம்மில் தீவிரமாய் நடப்பித்து, கர்த்தருடைய வழியை நமக்கு போதித்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சத்தியத்திலே, உண்மையிலே நம்மை நடத்துவார். அப்பொழுது கர்த்தருக்கு, அவருடைய நாமத்திற்கு பயப்படும் தெய்வ பயத்தின் பலன்களை ஆண்டவர் இயேசு நமக்கு அருளி செய்வது உறுதி.
இந்த ஆண்டு முழுவதும், தேவனாகிய கர்த்தர் தாமே இதை நம்மில் கிருபையாய் நடப்பித்து அவரில் நம்மை காத்து நடத்தி ஆசிர்வதிப்பாராக. தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு, அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து,அவர்களுக்கு நன்மைசெய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன். (எரேமியா 32:39-41)
You may download this Message here as a PDF document.
பரிசுத்த வேத தியானம்
(Let's Meditate Word of God)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
________________________________________________________________________________________________________________________________
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
உலக இரட்சகரும், கர்த்தரும், பிதாவாகிய தேவனுடைய ஒரே சொந்த பிள்ளையுமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே, உங்கள் அனைவருக்கும் அன்பின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
தம் ஒரே சொந்த குமாரனை, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நமக்காக சிலுவையில் ஒப்புக் கொடுத்து நம்மை இரட்சித்து தம் அன்பின் உறவிலே நம்மை நிலை நிறுத்தின தேவனை பரலோகத்தின் தேவ தூதர்களோடு சேர்ந்து நாமும் துதித்து மகிமைப்படுத்துவோம்.
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். (லூக்கா 2:14)
கீழ்க்காணும் பரிசுத்த வேத வசனத்தின்படியே கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? (ரோமர் 8:32)
________________________________________________________________________________________________________________________________
தேவன் அனுப்பினவர்
அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். (யோவான் 6:28,29)
தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படியாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட மக்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்ன பதிலே மேற்கண்ட பரிசுத்த வேத வசனம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாக வந்து பிறந்ததை நினைவு கூர்ந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையே கொண்டாடும் இந்த நாளில், மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் நமக்கு மிக முக்கியமான காரியத்தை, குறிப்பாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமாக நடக்கும்படியாக, பிதாவாகிய தேவனுக்கு ஏற்ற விதமாக நான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி உள்ளத்தில் இருக்குமானால், ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே உரைத்த இந்த பரிசுத்த வேத வசனம் நமக்கு பதிலை தெரிவிக்கிறது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையை கொண்டாடுகிற இந்த நேரத்தில், அவருடைய இரண்டாம் வருகைக்கு மிக அருகில் இருக்கும் நமக்கு இந்த பரிசுத்த வேத வசன பதில் அவருடைய இரண்டாம் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்த பேருதவியாக இருக்கிறது. இதற்காக நாம் பிதாவாகிய தேவனுக்கு, சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முதலாவது நன்றி செலுத்துவோம்.
தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக (இயேசு கிறிஸ்துவுக்காக) அவருக்கு ஸ்தோத்திரம். (2 கொரிந்தியர் 9:15)
தேவாதி தேவனுடைய, பிதாவாகிய தேவனுடைய ஒரே சொந்த பிள்ளையாகிய இயேசு கிறிஸ்துவை குறித்து, அவரை விசுவாசிப்பதை குறித்து பரிசுத்த வேதத்திலிருந்து சில வசனங்களை இங்கே காண்போம். இந்த பரிசுத்த வேத வசனங்கள் நம்முடைய பல கேள்விகளுக்கும் பதிலாகவும் இருக்கிறதை நாம் அதை கருத்தோடு, பொறுமையாக, மீண்டும் மீண்டும் படிக்கும் போது அறிந்து கொள்ளலாம்.
தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16)
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். (ஏசாயா 9:6)
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். (யோவான் 3:17)
தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. (1 யோவான் 4:9)
குமாரனைக் (இயேசுவை) கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய (பிதாவினுடைய) சித்தமாயிருக்கிறது என்றார். (யோவான் 6:40)
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 6:47)
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; (யோவான் 11:25)
தெய்வமே இல்லை என்றோ, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய ஒரே பேரான சொந்த குமாரன் இல்லை என்றோ நினைத்து, மறுதலிப்பதை குறித்து பரிசுத்த வேதம் கூறுவது என்ன?
தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான். (1 யோவான் 5:10)
குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (யோவான் 3:36)
அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. (யோவான் 3:18)
இறுதியாக,
இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. (யோவான் 20:31)
More Articles …
Subcategories
Messages - Before 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012க்கு முன்
(Meditation on the Word - God's Message - before 2012)
Messages - 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012
(Meditation on the Word - God's Message - 2012)
Messages - 2013
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2013
(Meditation on the Word - God's Message - 2013)
Messages - 2014
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2014
(Meditation on the Word - God's Message - 2014)
Messages - 2015
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2015
(Meditation on the Word - God's Message - 2015)
Messages - 2016
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2016
(Meditation on the Word - God's Message - 2016)
Messages - 2017
Lets Meditate Word of God. Messages - 2017
Messages - 2018
Lets Meditate Word of God. Messages - 2018
Messages - 2019
Lets Meditate Word of God. Messages - 2019
Messages - 2020
Lets Meditate Word of God. Messages - 2020
Messages - 2021
Lets Meditate Word of God. Messages - 2021
Messages - 2022
Lets Meditate Word of God. Messages - 2022
Messages - 2023
Lets Meditate Word of God. Messages - 2023
Messages - 2024
Lets Meditate Word of God. Messages - 2024
Messages - 2025
Lets Meditate Word of God. Messages - 2025
Page 6 of 11
Thou art my King, O God. (Ps 44:4)
Pray

இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். (சங்கீதம் 48:2)
...எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35)