இன்றைய பரிசுத்த வேத வசனம்
தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபித்து கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயங்கொள்ளுவோம்:
என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள். (சங்கீதம் 129:2)You may check
Meditation on the Word of God...Food for your soul: Meditation >> Lets Meditate
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
கிறிஸ்துவின் சிந்தை கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, ...எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது. (1 கொரிந்தியர் 2:16) பரிசுத்த வேதம், இந்த வசனத்தின் மூலமாக கிறிஸ்துவின் சிந்தை நமக்கு உண்டாயிருக்க முடியும் என்று உறுதியாக சொல்கிறது. அப்படியானால், நாம் எப்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிந்தையை நம்மில் பெற்றுக் கொள்வது? பரிசுத்த வேதம் அதற்கும் நமக்கு தெளிவான பதிலை அளிக்கிறது. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். (1 கொரிந்தியர் 2:10) பரிசுத்த வேதம், மற்றுமொரு வசனத்தில் இப்படியாக கூறுகிறது: அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான். (1 கொரிந்தியர் 6:17) அப்படியானால், பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் நமக்கு நம்முடைய ஆவியில் தெரிவிக்கிறார். ஆனால், நாம் நம் ஆவியில் அறிவிக்கப்பட்ட தேவ காரியங்களை அறிந்து கொள்ள, புரிந்து செயல்பட நம் ஆவியை, நம் ஆவியில் நடக்கும் காரியங்களை உணரக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் கிறிஸ்துவின் சிந்தை அறிந்து, அவருடைய நோக்கங்களை செய்து நிறைவேற்றி நம் ஆண்டவரை மகிழச் செய்ய முடியும். ஒருவேளை இந்த ஆழமான ஆவிக்குரிய நிலையில் நாம் இல்லாவிட்டால் நம் ஆவியில் தேவன் வெளிப்படுத்தின காரியங்களை அறிந்து, கிறிஸ்துவின் சிந்தை அறிந்து செயல்படுவது எப்படி? (The Mind of Christ is in our Spirit, how do we get it in our mind..that is in our Soul?) ஒரு முக்கியமான காரியத்தை இங்கே நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதாவது இருவர் இசைந்து அல்லது ஒத்துப்போகுதல் (Power of agreement). தேவனுடைய ஆவியானவரால் நம் ஆவி (Human spirit)ஆளுகை செய்யப்பட்டு தேவனுக்கு கீழ்படிந்து இருக்கும் போது, நம் ஆவியோடு சேர்ந்து நம் ஆத்துமாவும் (Soul) ஆவியானவருக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். அதாவது நம் ஆவியும், ஆத்துமாவும் தேவனுடைய ஆவியானவரால் ஆளுகை செய்யப்பட்டு முழுமையாக ஆவியானவருக்கு கீழ்படிந்து நடக்கும் போது, நம் ஆவியில் அறிவிக்கப்பட்ட தேவ காரியங்களை, கிறிஸ்துவின் சிந்தையை நோக்கங்களை நம் சிந்தையில் (நம் ஆத்துமாவின் ஒரு பகுதியான நம் சிந்தையில், மனதில்) தெளிவாக நாம் அறிந்து உணர்ந்து புரிந்து கொண்டு அதை செய்து நிறைவேற்ற முடியும். இருவர் ஒருமனப்படுதல் அல்லது ஒத்துப்போகுதல் என்பது இரண்டு தனி நபர்கள் என்று மட்டும் குறிப்பதல்ல, கீழ்காணும் பரிசுத்த வேத வசனம் இன்னும் ஆழமாக இந்த அர்த்தத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது. இருவர் - அதாவது, நம் ஆவியும், ஆத்துமாவும் இசைந்து அல்லது ஒத்துப் போகுதல். அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 18:19) |
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
நம்மை நாமே கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். (1 கொரிந்தியர் 11:31) நம் வழிகளையும், செய்கைகளையும், நோக்கங்களையும், நினைவுகளையும் கூட தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிறுத்தி, அதாவது பரிசுத்தவேத வசனத்தின் வெளிச்சத்தில் நிறுத்தி, உயிருள்ள, நடுநிலையான மனசாட்சியோடு அவைகளை ஒவ்வொரு நாளும் நாம் நிதானித்து, ஆராய்ந்து பார்த்தாலே நாம் எப்படிப்பட்டவர்களென்று தெளிவாக அறிந்து கொள்ள முடியும். அப்படி அறிந்து கொண்ட நிலையை மறைக்காமல் கர்த்தரிடத்தில் அறிக்கை செய்து அவருடைய உதவியை நாடும் போது அவர் நமக்கு எப்பொழுதும் உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா.) (சங்கீதம் 32:5)
நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். (1 கொரிந்தியர் 11:32) கர்த்தருடைய இரண்டாம் வருகைக்குப் பிறகு நியாத்தீர்ப்பின் நாளிலே மற்றவர்களோடு சேர்த்து நம்மையும், அதாவது எவ்வளவு சொல்லியும் பாவ வழிகளை விட்டு திரும்பாத,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக, ஒரே தெய்வமாக ஏற்றுக்கொள்ளாத, கர்த்தருடைய பிள்ளை நான் என்று சொல்லிக்கொண்டு எல்லா பாவ காரியங்களையும் செய்கிற மற்றவர்களோடு சேர்த்து நம்மையும் ஆண்டவர் நரக அக்கினி தண்டனைக்கு தீர்ப்புச் செய்யாமல், நாம் நம்மை அறிந்து கொள்ள வாய்ப்புகள் தந்து, நம்மை தமக்கு பிரியமான பரிசுத்த பிள்ளைகளாக மாற்றும்படியாக ஆண்டவர் நம்மை சிட்சிப்பதைக் குறித்தே மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் நமக்கு விளக்குகிறது. மேலும், அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? (எபிரெயர் 12:5-7) நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. (வெளிப்படுத்தின விசேஷம் 3:19) இப்பொழுது தேவனாகிய கர்த்தர் கிருபையாக நமக்கு கொடுத்திருக்கிற இந்த நேரத்தை வீணாக்கி, நம்மை நாம் நிதானித்து அறிந்து கொள்ள மறுக்கும் போது அல்லது நம்மை நாமே நல்லவர்களாகவும், கர்த்தருக்கு பிரியமானவர்கள் என்று நினைத்துக் கொள்ளும் போது, நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. (1 யோவான் 1:8) எனவே, நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் (இயேசு கிறிஸ்து) உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1 யோவான் 1:9) |
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
இனிய கிறிஸ்து இயேசு உயிர்த்தெழுந்த நன்னாள் வாழ்த்துக்கள்
அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார், சீக்கிரமாய் திரும்ப வருகிறார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்...(மத்தேயு 28:6)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, பிதாவாகிய தேவனுடைய சித்தம் நிறைவேற்ற தன்னையே கல்வாரி சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்து, இறந்து, மூன்றாம் நாளில் தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார். கல்லறையில், அவருடைய உடலுக்கு கந்தவர்க்கங்களை இடச்சென்ற பெண்களை பார்த்து தேவ தூதன் சொன்ன வார்த்தையே பரிசுத்த வேதத்தில் மேற்கண்ட வசனம்.
மெய்யாகவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார். ஆகவே தான் இன்றும் அவர் ஒருவர் மட்டுமே சொல்கிறார்:
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.(வெளிப்படுத்தின விசேஷம் 1:18)
ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நன்னாளை நினைவு கூர்ந்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு சிலுவையில் சம்பாதித்து கொடுத்த ஜெயத்தை, வெற்றியைகொண்டாடும் நாம், ஆண்டவர் இயேசுவின் இந்த இரட்சிப்பின் சுவிசேஷத்தை- நற்செய்தியை (Gospel of Jesus OR Gospel of Salvation) அறிந்திருக்கிற நாம் இங்கே மற்றுமொரு முக்கிய சத்தியத்தை - உண்மையையும் நினைவில் கொள்ளவேண்டியது மிக அவசியம். அது என்ன?
அது தேவ ராஜ்யத்தின் சுவிசேஷம் (Gospel of Kingdom), அதாவது அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார், மனுக்குலத்தை நியாயந்தீர்க்கும் நியாயாதிபதியாக சீக்கிரமாய் பூமிக்கு மீண்டும் வருகிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு அவர் ஆளுகை செய்யும் அவருடைய ராஜ்யமான பரலோக ராஜ்யம் அவரோடு கூட பூமிக்கு இறங்கி வருகிறது. பூமியை ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆளப்போகிறார். எனவேதான்,
... இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் (Kingdom of Heaven) சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். (மத்தேயு 4:17)
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தம் விலைக்கிரயமாய் கொடுக்கப்பட்டு மீட்கப்பட்ட நாம் (எபேசியர் 1:7, கொலோசியர் 1:14), நம் இரட்சிப்பின் பரிபூரணத்தை அடைய நாம் ஆண்டவர் ஆளுகை செய்யப்போகும் அவருடைய ராஜ்யத்திற்கு நாம் தகுதியுள்ளவர்களாக, என்றென்றும் அவரோடு நாம் வாழ, நாம் அவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாவது மிக முக்கியமாகும்.
அதற்கு, நம்மை முற்றிலுமாய் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு அவர் சித்தம் செய்து, அவர் பெயரை மகிமைப்படுத்தி அவருக்காக வாழ அர்ப்பணிபோம். அப்பொழுது, தேவனாகிய கர்த்தர் தம் பரிசுத்த ஆவியானவரால் நம்மை நிறைத்து, அவர் தம் இரண்டாம் வருகைக்காக நம்மை முத்திரை செய்து (எபேசியர் 4:30) நம்மை ஆயத்தப்படுத்துவார். தேவ ராஜ்யம் நம்மை கொண்டு சேர்ப்பார்.
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். (வெளிப்படுத்தின விசேஷம் 22:20)
|
சிலுவையிலும் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, பிதாவாகிய தேவனுடைய சித்தம் நிறைவேற்ற தன்னையே பிதாவுக்கு ஒப்புக் கொடுத்து, இவ்வுலகின் மனுகுலத்தை பாவத்திலிருந்து, அந்தகார இருளிலிருந்து தம் பரிசுத்த இரத்தத்தால் மீட்டு, மீண்டும் பிதாவின் அன்பின் உறவிலே ஒப்புரவாக்கி நிலைநிறுத்தி தேவ சித்தம் நிறைவேற்றினார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறதினால், நித்திய ஜீவ வாழ்வை என்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுடன் நாம் வாழ நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது, அவர் நமக்காக கல்வாரி சிலுவையில் தம்மையே பழுதற்ற பலியாய் ஒப்புக்கொடுத்து, இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை முழு உள்ளத்தோடு நம்பி விசுவாசித்து ஏற்றுக் கொள்வது தான். நம் அக்கிரமங்கள், பாவங்கள், சாபங்கள்,நோய்கள், பிசாசின் சோதனைகள் எல்லாவற்றையும் நமக்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் மீது ஏற்றுக்கொண்டு, நாம் தண்டனை அனுபவித்து பலியாக வேண்டிய இடத்தில், அவர் நமக்காக பலியானதை முழு உள்ளத்தோடு நம்பி விசுவாசித்து ஏற்றுக் கொள்வது தான். இந்த ஒரு நம்பிக்கை நம் வாழ்வையே மாற்றி நம்மை அவரிடம் கொண்டு சேர்க்கும். இந்த உலகில் வாழும்போதும், இந்த உலகத்தை விட்டு மரணத்தின் வழியாக மறு உலகம் சென்ற பிறகும் என்றும் அவர் நம்முடன் இருப்பார். நாம் அவர் பிள்ளைகளாய் என்றும் அழியா வாழ்வோடு அவருடன் பரலோகத்தில் இருப்போம். முப்பத்து மூன்றரை ஆண்டுகள் இந்த பூமியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மனிதனாக வாழ்ந்த போதும், அவருடைய மனு வாழ்வின் கடைசி வினாடி வரை சிலுவையில் அவருடைய கடைசி சொட்டு இரத்தமும் இந்த பூமியில் சிந்தப்பட்டு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போதும், அந்த மகா பயங்கரமான மரண வேதனையோடும், உடலெல்லாம் நொறுக்கப்பட்டு உடலிலும் சொல்லிமுடியாத வேதனையோடும், ஒட்டுமொத்த மனுக்குலத்தின் பாவ சாபமும் பாரங்களும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தபோதும் அவரிடம் மாறாமல் வெளிப்பட்ட ஒன்று அன்பு. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு. அந்த அன்பு நிறைந்தவராய் சிலுவையில் தொங்கிகொண்டிருந்த போது அவர் மொழிந்த ஏழு திருவார்த்தைகள்: முதல் வார்த்தை: அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். (லூக்கா 23:34) இரண்டாவது வார்த்தை: இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (லூக்கா 23:43) மூன்றாவது வார்த்தை: அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். (யோவான் 19:26-27) நான்காவது வார்த்தை: ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மத்தேயு 27:46) ஐந்தாவது வார்த்தை: அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். (யோவான் 19:28) ஆறாவது வார்த்தை: இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். (யோவான் 19:30) ஏழாவது வார்த்தை: இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். (லூக்கா 23:46) நாம் என்றும் பின்பற்ற வேண்டியவர், என்றும் நமக்கு முன் மாதிரியான அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவரே. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6) |
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
|
ஓசன்னா! (Hosanna - "oh save!", an exclamation of adoration) கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். (மத்தேயு 21:9) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, எருசலேம் நகரத்திற்கு வெளியிலிருந்து நகரத்தை நோக்கி ஒலிவ மலைக்கு அருகே வருகிற பொழுது, திரள் கூட்ட மக்களும், சீஷர்களும் அதுவரை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால் செய்யப்பட்ட அளவற்ற அற்புதங்களை, நன்மைகளை, அவர் தம் போதனைகளை நினைத்து மிகுந்த சந்தோஷத்தோடு மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின்படி ஆண்டவரை துதித்து புகழ்ந்து பாடினார்கள். அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள். (மத்தேயு 21:10-11) ஆனால், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோ எருசலேம் நகரத்திற்குள் நுழைந்தவுடன், அந்த நகரத்தை அந்த நகரத்து மக்களை நினைத்து கண்ணீர் விட்டழுதார். அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. (லூக்கா 19:41-42) காரணம், இந்த எருசலேம் நகரத்தில் வெகு சிலரான மக்களே உண்மையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தங்கள் மேசியா என்றும், மெய்யாகவே பிதாவாகிய தேவனுடைய ஒரே சொந்த பிள்ளையென்றும் நம்பி அவரை முழு உள்ளத்தோடு தங்கள் இரட்சகராக, தெய்வமாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால்,இந்த வெகு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அவரை தங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதராக மட்டுமே அவரை ஏற்றுக் கொண்டார்கள். மதத் தலைவர்களும், வேத பண்டிதர்களும், மத போதகர்களுமோ இன்னும் ஒருபடி மேலே சென்று ஆண்டவர் இயேசுவை சர்வவல்ல தேவனுக்கு எதிரியாக பார்த்து அவரை கொலை செய்யவும் முயன்றார்கள். அவர்கள், ஆண்டவர் இயேசு செய்த அற்புதங்களைக் கூட மிகவும் விமர்சித்து, ஆனால் மறுக்க முடியாத அந்த அற்புதங்களின் உண்மையினிமித்தம் வேறு வழியின்றி அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. பரிசுத்த வேத கட்டளைகளை, நியாயப்பிரமாணத்தை வெறும் சடங்கும், சம்பிரதாயமுமாக கடைப்பிடித்து வந்த அவர்களுக்கு அந்த பரிசுத்த வேதம் முன்னறிவித்த, எத்தனையோ தீர்க்கதரிசிகளின் மூலமாக தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட, காணக்கூடாத சர்வ வல்லமையுள்ள தேவனே இந்த மனுக்குலத்தை மீட்கும் மீட்பராக, தங்கள் சொந்த இரட்சகராக மனிதனாக வெளிப்பட்டு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவாக தங்கள் முன் இருந்ததை அறியமுடியாமல் போனதை நினைத்து, அந்த அறியாமையினால் அவர்கள் சந்திக்கப்போகும் மிகப்பெரும் அழிவையும், பாடுகளையும் நினைத்து ஆண்டவர் மிகுந்த வேதனையோடு கண்ணீர் விட்டழுதார். " உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால்.."(லூக்கா 19:43). ஒருவேளை நாமும் இந்த நிலையிலிருந்தால், உண்மையாய் ஆண்டவர் இயேசுவை அறிந்து, அவரையே நம் சொந்த இரட்சகராக, கர்த்தராக ஒரே தெய்வமாக முழுமையாய் ஏற்றுக் கொண்டு அவரை தொழுதுகொள்ளாமல், பழக்கத்திற்காகவோ பாரம்பரியத்திற்காகவோ அவரை தொழுது கொண்டால் அல்லது எத்தனை முறையோ ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைக் குறித்து கேள்விப்பட்டும் அவரை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் போனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மையும் பார்த்து அன்று போலவே இன்றும் கண்ணீர் விட்டழுகிறார். மாறாத, அளவற்ற அதே உண்மை அன்போடு இன்று நம்மை அழைக்கிறார். அதிசீக்கிரமாக இரண்டாம் முறையாக இந்த உலகிற்கு நியாதிபதியாக வரப்போகும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடத்தில் அப்பொழுது நாம் இரக்கத்தையும், மனதுருக்கத்தையும், தயவையும் எதிர்பார்க்க முடியாது. காரணம், அப்பொழுது அவர் நீதியுள்ள நியாதிபதியாய் இந்த உலகத்தை நியாயந்தீர்க்க வருகிறார். இந்த உலக மக்கள் அனைவருக்காகவும் தன்னையே கல்வாரி சிலுவையில் பாவத்தை போக்கும் பலியாய் அற்பணித்தும் தன்னை நிராகரித்த, மறுதலித்த உலகத்தை நியாயந்தீர்க்க வருகிறார். ...இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள். (2 கொரிந்தியர் 6:2) தாமதமின்றி இன்றே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக, கர்த்தராக ஒரே தெய்வமாக முழுமையாய் ஏற்றுக்கொண்டு, அவர் தம் பரிசுத்த வழியில் அவருடைய கட்டளைகளை கைகொண்டு அவரில் அன்பு கூர்ந்து அவர் பிள்ளைகளாய் முடிவு வரை நடப்போம். அப்பொழுது ஆண்டவர் இயேசு கிறிஸ்து இரண்டாம் முறை வரும் போது நாமும் தைரியமாய் துதிக்கலாம், கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா (மத்தேயு 21:9) |
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
More Articles …
Subcategories
Messages - Before 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012க்கு முன்
(Meditation on the Word - God's Message - before 2012)
Messages - 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012
(Meditation on the Word - God's Message - 2012)
Messages - 2013
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2013
(Meditation on the Word - God's Message - 2013)
Messages - 2014
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2014
(Meditation on the Word - God's Message - 2014)
Messages - 2015
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2015
(Meditation on the Word - God's Message - 2015)
Messages - 2016
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2016
(Meditation on the Word - God's Message - 2016)
Messages - 2017
Lets Meditate Word of God. Messages - 2017
Messages - 2018
Lets Meditate Word of God. Messages - 2018
Messages - 2019
Lets Meditate Word of God. Messages - 2019
Messages - 2020
Lets Meditate Word of God. Messages - 2020
Messages - 2021
Lets Meditate Word of God. Messages - 2021
Messages - 2022
Lets Meditate Word of God. Messages - 2022
Messages - 2023
Lets Meditate Word of God. Messages - 2023
Messages - 2024
Lets Meditate Word of God. Messages - 2024
Messages - 2025
Lets Meditate Word of God. Messages - 2025
Page 5 of 11
Thou art my King, O God. (Ps 44:4)
Pray

இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். (சங்கீதம் 48:2)
...எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35)