இன்றைய பரிசுத்த வேத வசனம்
தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபித்து கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயங்கொள்ளுவோம்:
என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள். (சங்கீதம் 129:2)You may check
Meditation on the Word of God...Food for your soul: Meditation >> Lets Meditate
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
உலகரட்சகர் இயேசு கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42) பிரயாணத்தினால் களைப்படைந்த ஆண்டவர் இயேசு, சமாரியா நாட்டில் ஒரு கிணற்றுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த போது, அங்கே கிணற்றில் தண்ணீர் மொள்ள வந்த சமாரியப் பெண்ணிடம் "தாகத்துக்கு தா" என்று கேட்ட போது அந்த பெண் ஆண்வரிடம் தொடர்ந்து உரையாடியதை அவளுடைய கேள்விகளுக்கு ஆண்டவர் அளித்த பதில்களை ( யோவான் 4:4-42) என்ற வேத பகுதியில் காணலாம். அதன் பிறகு, அந்த ஊர் மக்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து அந்தப் பெண் மூலமாக அறிந்து அவரைப் பற்றி சொன்ன சாட்சி தான் மேற்கண்ட பரிசுத்த வேத வசனம். அவர் ஒட்டு மொத்த உலகத்து மக்களுக்கும் இரட்சகர், மனுக்குலம் முழுவதுக்கும் பாவத்தை மன்னித்து நிவர்த்தியாக்கும், கல்வாரி சிலுவையில் பலியாய் தம்மை தாமே ஒப்புக்கொடுத்த, பரிசுத்த பலி. பரிசுத்த வேதம் சொல்கிறது: நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். (1 யோவான் 2:2) மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. (யோவான் 1:29) உலகத்தின் ஒவ்வொரு மனிதனுடைய அத்தனை பாவங்களையும் மன்னித்து, அவனை பரிசுத்தமாக்கும் வல்லமையும் தகுதியும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு மட்டுமே உண்டு. ஏனென்றால், இரத்தம் சிந்தாமல் பாவம் மன்னிக்கப்படவே முடியாது. இதைத் தவிர வேறு எந்த வழியுமே இல்லை, எனவே தான் பரிசுத்த வேதம் இப்படி விளக்குகிறது: ...இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. (எபிரெயர் 9:22) அவருடைய (பிதாவாகிய தேவனுடைய) குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7) அப்படியானால், பாவம் மன்னிக்கப்பட நாம் என்ன செய்ய வேண்டும்: இயேசு கிறிஸ்து நமக்காய் கல்வாரி சிலுவையில் நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையும் சுமந்து நமக்காகத்தான் இரத்தம் சிந்தினார் என்பதை முழு மனதோடு நம்பி ஏற்றுக் கொண்டு விசுவாசிக்க வேண்டும். இதை அப்படியே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடத்தில் சொல்லி, அறிக்கை செய்து "என்னை மன்னியும்" என்று உள்ளத்தின் ஆழத்தில் இருந்து, மனதார வேண்டிகொண்டால் போதும். அளவில்லாத, என்றும் மாறாத, தூய அன்போடு நம்மை நேசிக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை அப்படியே மன்னிப்பார். அத்தனை பாவங்களும், தலைமுறை தலைமுறையாய் செய்த, முன்னோர்கள் செய்த, அறிந்தும் அறியாமலும் செய்த அத்தனை பாவங்களும் மன்னிக்கப்பட்டு நம்மை விட்டகன்று போகும். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை (தண்டனை / நியாத்தீர்ப்பு) அவர்மேல் வந்தது;... (ஏசாயா 53:5) நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; .... (1 பேதுரு 2:24) அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை. (1 யோவான் 3:5) நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். (2 கொரிந்தியர் 5:21) பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; ... (1 தீமோத்தேயு 1:15) அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; (1 பேதுரு 2:22) [குமாரனாகிய] அவருக்குள், (இயேசுவுக்குள்) அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. (கொலோசெயர் 1:14) எனவே தான், பிதாவானவர் குமாரனை (இயேசு கிறிஸ்துவை) உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். (1 யோவான் 4:14) |
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
ஏழு ஏழு ஏழு கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. (வெளிப்படுத்தின விசேஷம் 13:16-18) இந்த பரிசுத்த வேத வசனங்கள், (சாத்தானின் மறு உருவமான) அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சியில், அவன் பூமியின் மனிதர்கள் எல்லோருக்கும் ஒரு முத்திரையை, அதாவது அந்தி கிறிஸ்துவின்
மனிதர்களின் நெற்றியில் அல்லது வலது கையில் தரித்துக் கொள்ளும்படி செய்வான். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக, ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவரே தங்கள் தெய்வம் என்று அறிக்கை செய்து அதற்காக தாங்கள் கொல்லப்படுவோம் என்று தெரிந்தாலும் கூட, சாத்தானின் முத்திரையை ஏற்றுக் கொள்ள மறுக்கிற உண்மையான கர்த்தருடைய பிள்ளைகள் அந்நாட்களில் எதையும் வாங்கவோ விற்கவோ முடியாது. அந்திகிறிஸ்துவின் பெயருடைய எண் 666. ஆனால் இது வெளிப்படையாக கண் காண 666 என இருக்க முடியாது. ஏனென்றால், அது மறைமுகமாக இருக்கும் போது தான் ஞானமுள்ளவர்கள் அதை கணக்கிட்டு அறிந்து கொள்ள முடியும் என்று பரிசுத்த வேதம் எச்சரிக்கிறது. இதைக் குறித்து பரிசுத்த வேதத்தில் வெளிப்படுத்தின விஷேசம் 13,14 அதிகாரங்களில் நாம் வாசித்து அறிந்து கொள்ளலாம். இப்போது, ஆண்டவருடைய இரண்டாம் வருகைக்கு முன்பாக நடக்க இருக்கிற மூன்று முக்கிய காரியங்களை பற்றி சற்று சிந்தித்து பார்ப்போம், பரிசுத்த வேதம் சொல்லுகிறது:
இந்த மூன்று ஏழு காரியங்களும் என்னென்ன? இந்த மூன்று ஏழு காரியங்களும் நடக்கும்போது கர்த்தருடைய பிள்ளைகளுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன் சொந்த தெய்வமாக ஏற்றுக் கொள்ள மறுத்து அந்தி கிறிஸ்துவை (சாத்தானை) தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்களுக்கும், நாம் வசிக்கும் பூமிக்கும், நாம் பார்க்கும் வானத்திற்கும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை அறிந்து கொள்ள முறையே கீழ்க்கண்ட வேத பகுதிகளை வாசித்துப் பாருங்கள்:
வெளிப்படுத்தின விசேஷம் 16:1-2 -ல் ஒரு காரியம் ஒரு குறிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது: 1. அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன். 2. முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று. அதாவது, முதலாம் தேவ தூதன் தேவனுடைய கோப கலசத்தை பூமியில் ஊற்றும் போது, சாத்தானின் மறு உருவமான அந்தி கிறிஸ்துவின் ஆட்சி பூமியில் நடந்து கொண்டிருக்கும் என்பதும், அந்திகிறிஸ்துவின் முத்திரையை மனிதர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதும், தேவ கோப கலசத்தின் விளைவாக அந்திகிறிஸ்துவின் முத்திரையை ஏற்றுக் கொண்டவர்கள் தேவ கோபத்தை தங்களிலும், தாங்கள் வசிக்கும் பூமியிலும் அனுபவிப்பார்கள் என்பதும் விளங்குகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எதிர்பார்க்கும் பரிசுத்த அலங்காரத்தோடு இருக்கும் கர்த்தருடைய பிள்ளைகள், அதாவது கர்த்தருடைய சபையாகிய மணவாட்டி அந்திகிறிஸ்துவின் முதல் மூன்றரை வருட உபத்திரவ காலத்தில் (Tribulation Period) பல்வேறு உபத்திரவங்களுக்கு உட்படுத்தப்பட்டாலும் (வெளிப்படுத்தின விசேஷம் 12:12-17) , ஏழு தேவ கோப கலசங்கள் பூமியில் ஊற்றப்படுவதற்கு முன் அதாவது அந்திகிறிஸ்துவின் இரண்டாவது மூன்றரை வருட மகா உபத்திரவ காலத்திற்கு (Great Tribulation Period) முன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் (Secret Coming / Rapture) எடுத்துகொள்ளப்பட்டு என்றென்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு பரலோகத்தில் மகிழ்ந்திருப்பார்கள். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள். (1 தெசலோனிக்கேயர் 4:15-18) |
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
இரவும் பகலும் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார். மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான். (யாத்திராகமம் 24:12,18) தேவனாகிய கர்த்தர் தம்முடைய அன்பு தாசனும், ஊழியக்காரனுமாகிய மோசேக்கு கட்டளை கொடுத்த போது, தேவ கட்டளையின் படியே மோசே இரவும் பகலும் நாற்பது நாள் மலையின் கொடுமுடியில் தேவனோடு முகமுகமாய் சஞ்சரித்து தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட தேவ கட்டளைகளை, பத்து கற்பனைகளை பெற்று வந்து இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்தார். இதையே மேற்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் தெரிவிக்கிறது. அந்த பத்து கட்டளைகள்:
அதன் பின்பு, மனிதனாக, இரத்தமும் சதையுமான உடலோடு வெளிப்பட்ட தேவனாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து, தாம் பாவமில்லாமல் பிறந்து, வாழ்ந்து பழுதற்ற பலியாய் தன்னை சிலுவையில் ஒப்புக்கொடுக்கும் வரை எல்லா தேவ கட்டளைகளையும், கற்பனைகளையும் கடைப்பிடித்து வாழ்ந்து அதை முழுமையாய் நிறைவேற்றின ஒரே மனிதனாக வாழ்ந்தார். மட்டுமல்ல, இந்த பத்து கட்டளைகளையும் இரண்டே கட்டளைகளாக, பிரமாணங்களாக நமக்கு கொடுத்து அதை நாம் கடைப்பிடித்து வாழ்ந்தாலே மேற்சொன்ன பத்து கட்டளைகளையும் நாம் நிறைவேற்றுகிறவர்களாய் இருப்போம் என்று உரைத்தார். அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். (மத்தேயு 22:35-40) இப்படி போதித்து மனுஷகுமாரனாய் இந்த பூமிக்கு வந்த தேவ குமாரன் இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் இறந்து மூன்று நாள் இரவும் பகலும் பூமியின் இருதயத்தில் இருப்பார் என்பதை அவரே இப்படி உரைத்தார்: யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். (மத்தேயு 12:40) ஒருவேளை, ஒரே மெய்தேவனாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இந்த கட்டளைகளை நாம் கைக்கொண்டு வாழாமல், இந்த உலகத்தின் மாயைகளுக்கும், சிற்றின்பங்களுக்கும் பின் சென்று, ஆண்டவருடைய இரட்சிப்பை ஏற்றுக் கொள்ளாமல் அல்லது நாம் பெற்ற இரட்சிப்பை இழந்து போனால், சீக்கிரத்தில் வெளிப்படப்போகிற அந்திக்கிறிஸ்துவின் (சாத்தானின் மறு உருவம் - AntiChrist) வஞ்சகத்தில் விழுந்து, அவனுடைய முத்திரையை ஏற்றுக்கொண்டுவிட்டால், அதன் பிறகு இரட்சிப்பு என்பதோ, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு என்றென்றும் பரலோக வாழ்வு என்பதோ என்றென்றும் இல்லாமல் போகும். அப்படியானால், வேறு என்ன நடக்கும்? பரிசுத்த வேதம் இப்படி சொல்கிறது: அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது. (வெளிப்படுத்தின விசேஷம் 14:9-11) |
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
வேறொரு இயேசு, வேறொரு ஆவி, வேறொரு சுவிசேஷம் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. (2 கொரிந்தியர் 11:4) அப்.பவுல் கொரிந்து சபைக்கு மேற்கண்ட காரியங்களை பற்றி எழுதுவதன் காரணம், ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். (2 கொரிந்தியர் 11:3)
சபையைப் பற்றிய இந்த பயம் நியாயமானது என்பதற்கு இன்று நம் கண் காண நடந்து கொண்டிருக்கிற காரியங்களே சாட்சி. பரிசுத்த வேதத்திற்கு விரோதமான, வேதப் புரட்டான, மனித உபதேசங்கள் எங்கும் மலிந்து கிடக்கிறது. இது வேகமாய் பெருகியும், பரவியும் வருகிறது.
இன்னும் ஏராளமான வேத வசனங்கள் மேற்கண்ட உண்மைகளுக்கு சாட்சி சொல்கிறது. அவைகளை நாம் தெளிவாக அறிந்து அதில் முடிவு வரை நிலைத்து நிற்பது மிக அவசியம். கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக...(கொலோசெயர் 3:16) மேலும் பரிசுத்த வேதத்திற்கு விரோதமானவைகளை செய்கிறவர்களைக் குறித்தும் பரிசுத்த வேதம் எச்சரிக்கிறது: உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். (கலாத்தியர் 1:6-8) இந்த கடைசி காலத்தின் கடைசி நாட்களில் வாழும் நாம், மிகுந்த விழிப்போடு இருந்து இப்படிப்பட்ட தீங்குகளுக்கு தேவனாகிய கர்த்தர் தாமே நம்மை விலக்கி காக்கும்படியாக அவர் பாதம் பற்றிக் கொள்வோம். பரிசுத்த வேத வசனத்தால் நம் இருதயத்தை நிறைப்போம். தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நம்மைக் முடிவு வரை காத்து நடத்துவார். தேவ ராஜ்யம் கொண்டு சேர்ப்பார். ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். (பிலிப்பியர் 3:18) |
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
இந்த வார தியானம் (Meditation for the Week) |
வெளிப்பாடு என்றால்... (பகுதி 2) கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் தொடர்ந்து வெளிப்பாட்டைக் குறித்து தியானிப்போம். தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, (2 பேதுரு 1:3) மேற்கண்ட வசனத்தில், மூன்று காரியங்களை கவனியுங்கள்: 1. நம்மை அழைத்தவரை அறிகிற அறிவு (epi-gnosis) , 2. ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டியதெல்லாம் , 3. அவருடைய திவ்விய வல்லமை. ஆவிக்குரிய காரியங்கள் எல்லாம் மேற்கண்ட மூன்று காரியங்கள் வழியாகவே நம்மிடத்தில் வருகிறது. எல்லா உண்மையும் அல்லது எந்த ஒரு காரியத்தைக் குறித்த மெய்யான நிலையையும் ஆவிக்குரிய பரிமாணத்திலேயே நாம் அறிந்து பெற்றுக் கொள்ளமுடியுமே தவிர இந்த இயற்கை உலக அறிவின், சிந்தையின் பரிமாணத்தில் அல்ல. எந்த ஒரு காரியத்தைக் குறித்த மெய்யான நிலையையும் தேவ ராஜ்யத்தின் ஆவிக்குரிய மண்டலத்தின் வழியாகவே நாம் அறிந்து உணர்ந்து கொள்ள முடியுமே தவிர நம் சிந்தையிலிருந்து அல்ல. நம்முடைய நோக்கமெல்லாம் நாம் ஆவியில் வளருவதைப் பற்றியே இருக்க வேண்டும். நம் அறிவில்,சிந்தையில் அல்ல. இந்த உலகத்தில் நாம் இரண்டு முறையில் வாழலாம். ஒன்று நம் ஆவியின் வழியில் - அதாவது நம் ஆவியில் தேவ வழி நடத்துதலின்படி. அல்லது நம் சிந்தையை பின் பற்றி வாழலாம். இன்னும் விளக்கி சொன்னால், நம் சிந்தை, அறிவு காரியங்களை ஆராய்ந்து நம்மை வழி நடத்தும் அல்லது நம் ஆவி தேவனுடைய சிந்தையின்படி கட்டளையின் படி நம்மை நடத்தும் (Either your mind directs you through analytical thought, or your spirit directs you through spontaneous thoughts from God). நாம் நம் இயற்கை சிந்தையை வளர்த்து வந்தால் அப்படியே இயற்கை அறிவிலேயே வாழுகிறவர்களாய் இருந்து விடுவோம், அந்த இயற்கை அறிவே நம்மிலிருந்து வெளிப்படும். ஆனால் நாம் நம் ஆவியில் தேவனுக்குள் வளர்ந்தால் நம்மிலிருந்து ஜீவன் புறப்படும், அதாவது தேவனுடைய ஜீவன் நம்மிலிருந்து வெளிப்படும். ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். (1 கொரிந்தியர் 2:14) தேவனுடைய மெய்யான காரியங்கள் பரிசுத்த வேதத்தின் மூலமாகவோ அல்லது ஆண்டவர் இயேசுவினிடத்திலிருந்து நேரடி வெளிப்பாடுகளாகவோ நம்மை வந்து சேருகிறது. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். (1 கொரிந்தியர் 2:9-10) அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். (யோவான் 5:19) நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30) True knowledge and understanding is gained through revelation, which is light and power and has the ability to impart insight into the true nature of things. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. (யாக்கோபு 3:17) (James 3:17) But the wisdom (insight into the true nature of things) that is from above is first pure, then peaceable, gentle, and easy to be entreated, full of mercy and good fruits, without partiality, and without hypocrisy. This word wisdom in this verse is the Greek word Sophia which means insight into the true natures of things. This can only come from God by revelation; Note: it comes from above. Our mind has an important place in God but the natural mind is an enemy of God, it need to be re-educated through revelation from God in order for the knowledge it contains to be truth. Revelation carries with it faith to attain to it and power to activate it. |
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
More Articles …
Subcategories
Messages - Before 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012க்கு முன்
(Meditation on the Word - God's Message - before 2012)
Messages - 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012
(Meditation on the Word - God's Message - 2012)
Messages - 2013
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2013
(Meditation on the Word - God's Message - 2013)
Messages - 2014
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2014
(Meditation on the Word - God's Message - 2014)
Messages - 2015
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2015
(Meditation on the Word - God's Message - 2015)
Messages - 2016
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2016
(Meditation on the Word - God's Message - 2016)
Messages - 2017
Lets Meditate Word of God. Messages - 2017
Messages - 2018
Lets Meditate Word of God. Messages - 2018
Messages - 2019
Lets Meditate Word of God. Messages - 2019
Messages - 2020
Lets Meditate Word of God. Messages - 2020
Messages - 2021
Lets Meditate Word of God. Messages - 2021
Messages - 2022
Lets Meditate Word of God. Messages - 2022
Messages - 2023
Lets Meditate Word of God. Messages - 2023
Messages - 2024
Lets Meditate Word of God. Messages - 2024
Messages - 2025
Lets Meditate Word of God. Messages - 2025
Page 4 of 11
Thou art my King, O God. (Ps 44:4)
Pray

இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். (சங்கீதம் 48:2)
...எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35)