இன்றைய பரிசுத்த வேத வசனம்
தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபித்து கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயங்கொள்ளுவோம்:
என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள். (சங்கீதம் 129:2)You may check
Meditation on the Word of God...Food for your soul: Meditation >> Lets Meditate
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
காணிக்கை கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார். (லூக்கா 21:4) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே தேவாலயத்தில் வந்திருந்து, அங்கே காணிக்கை செலுத்துமிடத்தில் நின்று கவனித்த போது, அங்கே காணிக்கை செலுத்தின ஒரு ஏழை விதவைப் பெண்ணை, அந்த பெண் செலுத்தின காணிக்கையை குறித்து சொன்ன வார்த்தைகளே மேற்கண்ட பரிசுத்த வேத வசனம். இதை பரிசுத்த வேதத்தின் இந்த பகுதிகளில் வாசிக்கலாம்: லூக்கா 21:1-4, மாற்கு 12:41-44. அங்கே அநேக ஐசுவரியவான்கள் - பணக்காரர்களும் ஏராளமாய் காணிக்கை செலுத்தினார்கள். ஆனால், இந்த ஏழைப் பெண்ணோ தன்னிடம் இருந்த இரண்டே காசையும் - தன் ஜீவனத்திற்காக வைத்திருந்த இரண்டே இரண்டு காசு முழுவதையும் தேவனுக்கு காணிக்கையாக செலுத்தி விட்டாள். அதாவது, இந்த காணிக்கையை செலுத்தின பின்பு அப்பெண்ணின் கையில் தன் ஜீவனத்திற்கென ஒரு வழியும் இல்லை. எனவே தான், இவை அனைத்தையும் அறிந்திருந்த நம் அருமை இரட்சகர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, ஏராளமாய் செலுத்தின ஐசுவரியவான்களை விட இப்பெண்ணே அதிகமாய் தேவனுக்கு காணிக்கை செலுத்தினாள் என்று உரைத்தார். இச்சம்பவத்திலிருந்து ஒரு காரியத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. அது, காணிக்கை தொகையை அல்ல காணிக்கை செலுத்தும் நம் இருதயத்தை, இருதயத்தின் நோக்கத்தை, இப்பெண்ணைப் போல மிகுந்த தியாகத்தோடு செலுத்தும்போது அந்த தியாகத்தையே தேவனாகிய கர்த்தர் அங்கீகரிக்கிறார். பரிசுத்த வேதம் இதை இப்படியாக விளக்குகிறது: அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். (2 கொரிந்தியர் 9:7) பூமியிலிருந்து மனிதனால் செலுத்தப்பட்ட முதல் காணிக்கையை குறித்து பரிசுத்த வேதத்தில் இப்படியாக விவரிக்கப்படுகிறது: சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். அதாவது, நமக்குள்ளவற்றில் முதன்மையானதும், சிறந்ததுமானதையே கர்த்தருக்கு காணிக்கையாக செலுத்த வேண்டும். அதை இன்னும் சிறப்பாக்க உற்சாகத்தோடும், தியாகத்தோடும், மனிதனுக்கல்ல தேவனாகிய கர்த்தருக்கே காணிக்கை செலுத்துகிறோம் என்ற சரியான இருதய நோக்கத்தோடும் செலுத்தும் போது கர்த்தர் அதை அங்கீகரிக்கிறார். பரிசுத்த வேதத்தில், இப்படியாக, இஸ்ரவேல் மக்கள் உற்சாகமாய், முதன்மையானதும் சிறந்ததுமானதை மகிழ்ச்சியோடு காணிக்கையாக தேவனாகிய கர்த்தருக்கு செலுத்தினதை இந்த வசனங்கள் விவரிக்கிறது : பின்னும் மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு மயிரும், சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும், விளக்குக்கு எண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும், ஆசாரியருடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கத்தக்க கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே. (யாத்திராகமம் 35:4-9) தேவ தாசனாகிய மோசே, இப்படி அறிவித்த பின்பு இஸ்ரவேல் ஜனங்கள் எப்படி கொடுத்தார்கள் என்பதையும், இனி காணிக்கைகளை கொண்டு வர வேண்டாம் என்று அறிவிக்குமளவுக்கு கொடுத்தார்கள் என்பதையும் பரிசுத்த வேதத்தின் இந்த வசனங்கள் விளக்குகிறது: பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். (யாத்திராகமம் 35:21) செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள். (யாத்திராகமம் 35:29) அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்து வேலைகளைச் செய்கிற விவேகிகள் யாவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாய் வந்து, மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள். அப்பொழுது மோசே இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று பாளயம் எங்கும் கூறும்படி கட்டளையிட்டான்; இவ்விதமாய் ஜனங்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது. செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாயும் இருந்தது. (யாத்திராகமம் 36:4-7) பரிசுத்த வேதம், எல்லாவற்றிற்கும் மேலான, மனுக்குலம் முழுவதற்குமாய் செலுத்தப்பட்ட, நாம் எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாத, இணையில்லாத ஒரு காணிக்கையை குறித்து நமக்கு விளக்கி சொல்கிறது : அந்த காணிக்கை உலக இரட்சகரும் (யோவான் 4:42, 1 யோவான் 4:14) நம் கர்த்தரும் மீட்பருமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே. கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். (எபேசியர் 5:2) |
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
பலி கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, சர்வாங்க தகனபலிக்கும் போஜனபலிக்கும் பாவநிவாரண பலிக்கும் குற்றநிவாரண பலிக்கும் பிரதிஷ்டை பலிகளுக்கும் சமாதான பலிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. கர்த்தருக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் புத்திரருக்குச் சீனாய் வனாந்தரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய் மலையில் கட்டளையிட்டார். (லேவியராகமம் 7:37,38) பரிசுத்த வேதத்திலே, பழைய ஏற்பாட்டின்படி பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு சூழ்நிலைகளில் செலுத்தப்படும் பலிகளைக் குறித்து இந்த பகுதிகளில் - லேவியராகமம் 1, 2, 3, 4, 5 - காணலாம். அவைகளில் சிலவற்றை கீழே காணலாம்.
போஜன பலியை தவிர, இந்த பலிகளெல்லாம் பல்வேறு மிருக ஜீவன்களால் செலுத்தப்பட்டது. காரணம், மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. (லேவியராகமம் 17:11) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தம் ஒட்டு மொத்த மனுக்குலத்தின் பாவ நிவாரணத்திற்காக, மீட்புக்காக கல்வாரி சிலுவையில் சிந்தப்பட்ட பின்பு, மேற்கண்ட பலிகளை நாம் செலுத்த வேண்டியதில்லை. ஏனென்றால்: ... யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. (யோவான் 1:29) இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. (மத்தேயு 26:28) ... இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7) அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார். (எபிரெயர் 7:27) வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (எபிரெயர் 9:12) கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். (எபிரெயர் 9:28) எந்த மிருக ஜீவனையும் கொல்லாமல் செலுத்தும் ஒரு விசேஷித்த பலி ஒன்றைக் குறித்தும் பரிசுத்த வேதம் நமக்கு விளக்கிச் சொல்கிறது. அது: ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். (எபிரெயர் 13:15) கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும். (சங்கீதம் 119:108) ...அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம். (ஒசியா 14:2) தேவனாகிய கர்த்தரின் மகிமையை, அவருடைய மகத்துவத்தை, வல்லமையை, அன்பை, இரக்கத்தை, தயவை, மனதுருக்கத்தை, பராக்கிரமத்தை, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவர் அருளிய கிருபையை, பாவ மன்னிப்பை, இரட்சிப்பை, நித்திய ஜீவனை போற்றி, பாடி, துதித்து, அறிக்கை செய்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக பிதாவாகிய தேவனையே உயர்த்தி அவருக்கே துதி கனம் மகிமை யாவும் செலுத்தும் ஸ்தோத்திர பலி. இந்த விசேஷித்த பலியைக் குறித்து பழைய மற்றும் புதிய ஏற்பாடு என இரண்டிலும் காணலாம். ஆனால், பரிசுத்த வேதத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நேரடியாக அங்கிகரித்து சொல்லிய மிக முக்கியமான பலியைக் குறித்து நாம் காணலாம். மேற்கண்ட எல்லாவற்றிலும் இதுவே மிக முக்கியமானது ஆகும். இந்த பலியை நாம் செலுத்தினால், தம் ராஜ்யத்தை இந்த பூமியில் ஏற்படுத்தவும், தம் பிள்ளைகளை தம் ராஜ்யத்தில் தம்மோடு சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு பலனளித்து தம்மோடு ஆளுகை செய்யும்படியாக அவர்களை ஏற்படுத்தவும் அதி சீக்கிரமாக இந்த உலகத்திற்கு இரண்டாம் முறையாக திரும்பி வரப் போகும் நம் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு நாம் ஏற்றவர்களாயிருப்போம். அவரே இதை சொல்லிருக்கிறார். அந்த பலி: முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் (தேவனிடத்தில்) அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான். அவன் விவேகமாய் உத்தரவுசொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். (மாற்கு 12:33,34) |
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
பரிசுத்த வேத எழுத்துக்கள் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். (2 தீமோத்தேயு 3:15) மேற்கண்ட வசனத்தில் நாம் காணும் ஒரு விசேஷம் "பரிசுத்த வேத எழுத்துக்கள்" என்று தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் இந்த பரிசுத்த வேதத்தை அழைக்கிறதை நாம் காணலாம். ஏன் இது பரிசுத்த வேத எழுத்துக்கள் என்றழைக்கப்படுகிறது? ஏனென்றால் இது நேரடியாக தேவனாகிய கர்த்தரால், அவருடைய கரத்தால் எழுதி கொடுக்கப்பட்டது. சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார். (யாத்திராகமம் 31:18) என்ன எழுதி கொடுத்தார்? பத்து கட்டளைகள். அந்த பத்து கட்டளைகள்:
காணக்கூடாத, மகா பரிசுத்தமுள்ள தேவன், காணக்கூடியவராக, மனிதனாக இயேசு கிறிஸ்து என்ற பெயரில் இந்த பூமிக்கு வந்த போது மேற்கண்ட பத்து கட்டளைகளையும் இரண்டே பிரமாணங்களாக அவர் தாமே தம் வாயினால் உரைத்த பரிசுத்த வசனங்கள் தாம் இவை : இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். (மத்தேயு 22:35-40) இந்த பரிசுத்த வேத எழுத்துக்களை தேவனுடைய பரிசுத்த ஆவியானவரும் நமக்கு அருளியிருக்கிறார் என்பதை குறித்து பரிசுத்த வேதத்தில் நமக்கு விளக்கப்பட்டிருக்கிறது. வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; ...(2 தீமோத்தேயு 3:16) மனுக்குலம் முழுவதிற்கும், இந்த பூமியில் நாம் வாழும் வாழ்க்கைக்கு தேவையான தேவனாகிய கர்த்தரின் எல்லா ஆலோசனைகளையும், கட்டளைகளையும், பிரமாணங்களையும், கற்பனைகளையும் மற்றும் அளவற்ற, எல்லையில்லாத ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும், நமக்கான பாதுகாப்பையும் உள்ளடக்கியதே இந்த பரிசுத்த வேத எழுத்துக்களாலாகிய பரிசுத்த வேதம். இதை விளக்கும் சில வேத வசனங்கள்: அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:17) உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. (சங்கீதம் 119:105) தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. (எபிரெயர் 4:12) இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 6:17) அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். (மத்தேயு 4:4)
வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும். (லூக்கா 16:17) இந்த மகிமைக்கு காரணம் என்ன தெரியுமா? ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. (யோவான் 1:1) இதை ஒரு வரியில் விளக்கிச் சொல்வதானால், எழுதப்பட்ட இயேசு கிறிஸ்துவே பரிசுத்த வேத எழுத்துக்கள். தேவனாகிய கர்த்தர், ஆண்டவர் இயேசு கிறிஸ்து மற்றும் தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் என திரித்துவ தேவன் நமக்கு அருளியிருக்கிற இந்த பரிசுத்த வேத எழுத்துக்களை, பரிசுத்த வேதத்தை நிராகரித்து, ஏற்றுக் கொள்ள மறுக்கும்போது என்ன நடக்கும்? என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். (யோவான் 12:48) |
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
வந்து சேர்ந்தேன் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக. (உபாகமம் 26:3) தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலின் முற்பிதாக்களுக்கு வாக்குப் பண்ணினபடியே, இஸ்ரவேல் ஜனங்களை நாற்பது வருடமாய் நடத்தி இறுதியில் வாக்குப்பண்ணப்பட்ட கானான் தேசத்தில் கொண்டு வந்து சேர்த்து அதில் அவர்கள் வாசம்பண்ணும் பொழுது இப்படி செய்யச் சொல்லி கட்டளையிடுகிறார். இதை பரிசுத்த வேதத்தில் உபாகமம் 26:1-11 என்ற பகுதியில் காணலாம். அதாவது தேவனாகிய கர்த்தர் வாக்குப் பண்ணினபடியே செய்து முடிக்க, அதின் பலனை அனுபவிக்கும் போது மறவாமல் " வாக்குப்பண்ணி இதை செய்து முடித்தவர் தேவனாகிய கர்த்தரே என்று அறிக்கை செய்து, அதை நினைவு கூர்ந்து கர்த்தர் கொண்டு வந்து சேர்த்த தேசத்தின் நிலத்தில் பயிரிடும்போது அதன் முந்தின பலனை கர்த்தருக்கு செலுத்தி நன்றி செலுத்த" தேவனாகிய கர்த்தர் கட்டளையிடுகிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இதைக்குறித்து பரிசுத்த வேதத்தில் கூறியிருப்பதை நாம் காணமுடியும். முதலாவதாக குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனை (மத்தேயு 8:1-4) (லூக்கா 5:12-14) ஆண்டவர் இயேசு அற்புதமாய் குணமாக்கின பின்பு இப்படியாக கூறினார்: இயேசு அவனை நோக்கி: ... ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார். (மத்தேயு 8:4) அவர் அவனை நோக்கி: ... போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலி செலுத்து என்று கட்டளையிட்டார். (லூக்கா 5:14) பரிசுத்த வேதத்தில், குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்ட பத்து மனிதர்களை (லூக்கா 17:11-19) ஆண்டவர் இயேசு அற்புதமாய் சுகமாக்கின பின்பு, அந்த பத்து பேரில் ஒரே ஒரு மனுஷன் மட்டும் வந்து அவருக்கு நன்றி செலுத்திய போது ஆண்டவர் இயேசு உரைத்த திரு வார்த்தைகள் இவை: தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, (லூக்கா 17:18) நம்முடைய வாழ்க்கையிலும், எத்தனையோ முறை ஆண்டவரிடத்தில் அற்புதம், சுகம், விடுதலை, சமாதானம், உதவி என இவைகளுக்காய் வேண்டி கொள்ளும் போதெல்லாம் நம் கர்த்தராகிய இயேசு கிருபையாய் இரங்கி, மனதுருகி தம் வாக்குத்தத்தங்கள், வார்த்தைகள் அருளி எத்தனையோ அற்புதங்களை, உதவிகளை செய்து நம்மை வாழ வைத்து இருக்கிறார். இப்பொழுதும் வாழ வைக்கிறார், இனிமேலும் வாழ வைப்பார். ஆனால், நாம் ஒரு நாளும் இவைகளை செய்த ஆண்டவருக்கு நன்றி செலுத்த, அவரை மகிமைப் படுத்த, ஆண்டவர் இயேசுவையே உயர்த்தி அறிக்கை செய்ய ஒரு நாளும் தவறக் கூடாது, மறந்து விடவும் கூடாது. கர்த்தர் செய்த அற்புதங்கள், உதவி, கொடுத்த சுகம், விடுதலை, சமாதானம் இவைகளையும் மறந்து விடக் கூடாது. தேவனாகிய கர்த்தரின் தாசன் தாவீது மூலமாய் பரிசுத்த ஆவியானவர் இதை நமக்கு இப்படியாக அறிவுறுத்துகிறார்: கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன். (சங்கீதம் 77:11-12) மட்டுமல்லாமல், குறிப்பாக சோர்வின் நேரங்களிலே, விசுவாசம் குறைந்து போகும் நேரங்களிலே மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின்படி நாம் தியானிக்கும் போது உண்மையில் நம் விசுவாசத்தை கர்த்தர் பெருகச் செய்வார். சோர்வுகளை அகல செய்வார். கர்த்தருடைய ஆவியானவர் நமக்கு மிகுந்த உற்சாகம் தந்து தொடர்ந்து நம்மை தேவனுடைய வழியில் அவர் தம் பிள்ளைகளாய் நடத்தி செல்வார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாம் அருளி செய்கிற தம் வாக்குத்தத்தங்கள், வார்த்தைகளை நிறைவேற்றி நம்மை வாழ வைக்கும் போது நாம் அவைகளை மறவாமல் "நீர் வாக்குபண்ணின ஆசீர்வாதங்களுக்குள் வந்து சேர்ந்தேன், அற்புதங்களை பெற்றுக் கொண்டேன் - ஆண்டவரே நான் இன்று உம்மால் வாழ்ந்திருக்கிறேன்" என்று சொல்லி அவர் பாதம் பணிந்து நன்றி செலுத்த வேண்டுமே. காரணம், பரிசுத்த வேதம் இப்படி சொல்கிறது: ....நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். (கொலோசெயர் 3:15) |
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
தேவ கிருபை கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். பிதாவாகிய அன்பின் தேவனுடைய, அவர் தம் ஒரே பேரான சொந்த குமாரனாம் அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக நமக்கு வெளிப்படுத்தப்பட்ட மிகப் பெரும் தேவ மகிமையின் மிக முக்கியமான ஒரு சத்தியம் தேவ கிருபை. இந்த தேவ கிருபையின் மூலமாக நாம் பெற்ற மிகப் பிரதானமான ஒரு அற்புதம், நாம் பெற்ற மிகப் பிரதான பலன் நம்முடைய இரட்சிப்பு, இந்த இரட்சிப்பினால் நாம் பிதாவின் அன்பின் உறவிலே மீண்டும் இணைக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளானதே ஆகும். இதைக்குறித்த பரிசுத்த வேதத்தின் சில வசன விளக்கங்கங்களை இங்கே பார்ப்போம். ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, (தீத்து 2:11) அவருடைய (தேவனுடைய) கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய (இயேசு கிறிஸ்துவினுடைய) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் (இயேசு கிறிஸ்துவுக்குள்) நமக்கு உண்டாயிருக்கிறது. (எபேசியர் 1:7) ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். (எபிரெயர் 8:12) அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், (கலாத்தியர் 1:15) அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; (எபேசியர் 2:5,8) உங்களுக்குப் புத்திசொல்லும்படிக்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதி, எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன். (1 பேதுரு 5:12) தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, (தீத்து 3:6) பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம், அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது; (கொலோசெயர் 1:4,6) நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. (புலம்பல் 3:22) ....ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார். (ஏசாயா 54:8) அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. (சங்கீதம் 106:1) நம் தேவனாகிய கர்த்தர் நமக்கு அருளிச் செய்கிற இரட்சிப்பின் பரிபூரணமாம் நித்திய ஜீவனும் தேவ கிருபையே: பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (ரோமர் 6:23) ....உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள். (1 பேதுரு 3:7)
கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது. (எபேசியர் 4:7) இந்த தேவ கிருபை நமக்குள்ளே பெருக வேண்டுமா? எப்படி பெருக வேண்டும்? நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று. (1 தீமோத்தேயு 1:14) தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது. (2 கொரிந்தியர் 4:15) ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு. (2 தீமோத்தேயு 2:1) நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென். (2 பேதுரு 3:18) இந்த தேவ கிருபையை இன்னும் பெற்றுக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். (எபிரெயர் 4:16) அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. (யாக்கோபு 4:6) இந்த கிருபையை பெற்று தேவ பிள்ளைகளான நாம் என்ன செய்ய வேண்டும்? ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். (எபிரெயர் 12:28) இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (எபேசியர் 3:11) நாம் இந்த தேவ கிருபையைக் குறித்து ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஈடு இணையில்லாத இந்த தேவ கிருபையை இழந்து போக நேரிடும் என்று பரிசுத்த வேதம் எச்சரிக்கிறது: பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். ...கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; .... (எபிரெயர் 13:9) பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள். (யோனா 2:8) ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது. (யூதா 1:4) தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். (எபிரெயர் 10:29) அன்பின் பிதாவாகிய தேவன் தாமே, நம் அருமை இரட்சகர், நம் கர்த்தர், அதி சீக்கிரத்தில் மீண்டும் இந்த உலகத்திற்கு வரப்போகும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்குள் நம்மை தம் பிள்ளைகளாக கிருபையினால் முடிவு வரை காத்து கொள்வாராக. ஆமென். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். (2 தெசலோனிக்கேயர் 3:18) நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (2 தெசலோனிக்கேயர் 1:2) நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென். (எபேசியர் 6:24) |
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
Subcategories
Messages - Before 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012க்கு முன்
(Meditation on the Word - God's Message - before 2012)
Messages - 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012
(Meditation on the Word - God's Message - 2012)
Messages - 2013
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2013
(Meditation on the Word - God's Message - 2013)
Messages - 2014
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2014
(Meditation on the Word - God's Message - 2014)
Messages - 2015
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2015
(Meditation on the Word - God's Message - 2015)
Messages - 2016
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2016
(Meditation on the Word - God's Message - 2016)
Messages - 2017
Lets Meditate Word of God. Messages - 2017
Messages - 2018
Lets Meditate Word of God. Messages - 2018
Messages - 2019
Lets Meditate Word of God. Messages - 2019
Messages - 2020
Lets Meditate Word of God. Messages - 2020
Messages - 2021
Lets Meditate Word of God. Messages - 2021
Messages - 2022
Lets Meditate Word of God. Messages - 2022
Messages - 2023
Lets Meditate Word of God. Messages - 2023
Messages - 2024
Lets Meditate Word of God. Messages - 2024
Messages - 2025
Lets Meditate Word of God. Messages - 2025
Page 3 of 11
Thou art my King, O God. (Ps 44:4)
Pray

இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். (சங்கீதம் 48:2)
...எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35)