இன்றைய பரிசுத்த வேத வசனம்
தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபித்து கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயங்கொள்ளுவோம்:
என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள். (சங்கீதம் 129:2)You may check
Meditation on the Word of God...Food for your soul: Meditation >> Lets Meditate
தேவன் அனுப்பினார்
(God sent forth his Son)
(கிறிஸ்துமஸ் தேவ செய்தி - 2022)
டிசம்பர் 2022 (Christmas Message December 2022)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
![]() |
நமக்காக இந்த உலகத்தில் வந்து பிறந்த தேவ குமாரன், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை கொண்டாடுகிற உங்கள் யாவருக்கும் அவருடைய நாமத்தினாலே அன்பின் வாழ்த்துகள்! Merry Christmas & Blessed New year 2023 கிறிஸ்து இயேசுவையே கொண்டாடுவோம்! தேவனுக்கே மகிமையை செலுத்துவோம்! ஆமென். |
![]() |
(கலாத்தியர் 4:5-6) காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
இந்த மகிழ்ச்சியான நேரங்களில் பரிசுத்த வேதம் கிறிஸ்து இயேசுவின் பிறப்பை குறித்து போதிக்கும் சத்தியத்திலிருந்து, ஒரு சிறு துளியை மாத்திரம் நாம் தியானிப்போம். சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துகிற சத்திய ஆவியானவர் நமக்கு பூரணமாக உதவி செய்வாராக. ஆமென்.
நம்முடைய பரிசுத்த வேத தியானத்திற்கான ஆதார வசனங்களை கீழே காண்போம்.
(கலாத்தியர் 4:5-6) காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
பிதாவாகிய தேவன் தம்முடைய ஒரே பேரான சொந்த பிள்ளையை, மகனை - இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திலே அனுப்பின பிரதான நோக்கம் மனுக்குலத்திற்கு இரட்சிப்பை, ஆத்தும மீட்பை, உண்டாக்கி தம்முடனே ஒப்புரவாக்கிகொண்டு மனிதர்களை தம்முடைய பிள்ளைகளாக்கி, அதாவது தேவனுடைய பிள்ளைகளாக்கி தம்முடைய ராஜ்யத்துக்கு உரியவர்களாய் அவர்களை என்றென்றும் தம்மோடு வைத்துக் கொள்ள வேண்டுமென்பதே. இந்த பிரதான நோக்கத்திற்குள் மனிதர்களுக்கு அடங்கியிருக்கிற ஏராளமான பாக்கியங்களில் இரண்டை குறித்து மட்டும் இன்றைக்கு நாம் தியானிப்போம். அவை பாவ மன்னிப்பு மற்றும் நித்திய ஜீவன். காரணம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்ததினால் தான் இது சாத்தியமாயிற்று. இந்த இரண்டு பாக்கியங்களும் மனிதனுக்கு இந்த உலக வாழ்வில் தேவையா? இதை சற்றே தியானிப்போம்.
மனிதனுக்கு இந்த வாழ்வில் சந்திக்கும் இரண்டு கொடிய காரியங்களில் ஒன்று பாவம், மற்றொன்று மரணம். இரண்டுமே மனித குலத்தை அடிமைப்படுத்துகிற காரியங்கள். பாவமும் அதன் பழக்கவழக்கங்களும் நம்மை அடிமைப்படுத்துகிறது. மரண பயம் நம்மை அடிமைப்படுத்துகிறது. இதற்கு நீங்கலாகி தப்பிப் போவது எளிதான காரியமல்ல. பரிசுத்த வேதத்தில் கீழ்க்கண்ட வசனங்களின் மூலமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதை நமக்கு விளக்கிச் சொல்லுகிறார்.
(2 பேதுரு 2:19) ... எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.
(யோவான் 8:34) இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(எபிரெயர் 2:15) ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
(சங்கீதம் 89:48) மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.)
கொடிய பாவங்களினால், பாவ பழக்க வழக்கங்களினால், கொடிய மரண பயத்தினால் நாம் அடிமைகளாக்கப்படும்போது நாம் சுயமாக எதையும் செய்ய நமக்கு அதிகாரம் இல்லை. அதனால் இவற்றிற்கு எதிராக நம்மால் எதுவும் செய்ய முடியாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பாவம் செய்தே ஆக வேண்டும். மரித்துதான் ஆக வேண்டும். காரணம் நாம் அடிமைகள். பாவமும் மரணமும் நமக்கு எஜமானர்களாக இருக்கிறது.
(ரோமர் 6:23) பாவத்தின் சம்பளம் மரணம்; ..
(யாக்கோபு 1:14-15) அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில், நாமாகவே இதிலிருந்து மீள முடியாது. ஒருவர் வந்து தான் நம்மை மீட்க வேண்டும். நம்மை விடுதலையாக்க வேண்டும்.
பிதாவாகிய தேவனால் அனுப்பப்பட்டு இந்த உலகத்திற்கு வந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை எப்படி மீட்டுக் கொள்கிறார், விடுதலையாக்குகிறார் என்பதை குறித்து பரிசுத்த வேதத்திலிருந்து நாம் தியானிப்போம்.
1] பாவ மன்னிப்பு : பாவத்திலிருந்து, பாவ அடிமைத்தனத்திலிருந்து மீட்பு மற்றும் விடுதலை
பாவத்திலிருந்து விடுதலை - அப்பொழுதுதான் பரிசுத்தமாகுதல் என்னும் பலன்:
(தீத்து 3:3) ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.
(1 பேதுரு 4:3) சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.
(எபேசியர் 2:2) அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஒரு மனிதன் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு, தன் பாவங்களுக்குக்காக தான் அவர் சிலுவையில் பாடுபட்டு அவருடைய பரிசுத்த இரத்தம் சிந்தி பாவ பரிகாரத்தை உண்டு பண்ணியிருக்கிறார் என்பதை விசுவாசிக்கும் போது - தன் முழு விருப்பத்தோடும், முழு மனதாக இயேசு கிறிஸ்து ஒருவரையே தன் ஒரே சொந்த தெய்வமாக ஏற்றுக்கொள்ளும் போது அவனுக்கு இரட்சிப்பை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அருளிச் செய்கிறார். இந்த இரட்சிப்புக்குள் பாவ மன்னிப்பின் மூலமாக பாவத்திலிருந்து மீட்பும் விடுதலையும் மனிதனுக்கு அவர் அருளிச்செய்கிறார். அதன் பிறகு பரிசுத்த வேதத்தின் மூலமாகவும், பரிசுத்த ஆவியானவராலும் ஒரு புதிய பரிசுத்த வாழ்வை வாழ அவர் தாமே ஒவ்வொருவருக்கும் உதவி செய்து முடிவு வரை அப்படியே பாதுகாத்து நடத்தி, பரலோகம் கொண்டு சேர்க்கிறார்.
(1 யோவான் 1:7) அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
(எபேசியர் 2:8) கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
(யோவான் 1:12) அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
(எபேசியர் 2:1) அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.
(ரோமர் 6:22) இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
தேவனுக்கு அடிமைகள் என்பது நாம் பரிசுத்தமாக வாழ்வதற்கும், தேவனுடைய நீதியை உடையவர்களாயிருந்து நீதியான கிரியைகளை செய்வதற்கும், தேவ சித்தத்தை நிறைவேற்றவும் தேவனுக்கு கீழ்ப்படிந்திருக்கும்படி நாமே விரும்பி முழு மனதோடு நம்மை தேவனாகிய கர்த்தருக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுப்பதையே குறிக்கிறது.
(ரோமர் 6:19) உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.
(1 பேதுரு 2:16) சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.
மேலும்,
(ரோமர் 6:16) மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?
(ரோமர் 6:18) பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.
(1 கொரிந்தியர் 7:22) கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான்.
(1 கொரிந்தியர் 7:23) நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் பாவத்திலிருந்து மீட்பும் விடுதலையும் நமக்கு எப்படி உண்டானது என்பதை கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் நமக்கு விளக்கிப் போதிக்கிறது.
(1 யோவான் 1:7) ...அவருடைய (தேவனுடைய) குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
(1 கொரிந்தியர் 7:23) நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாவமில்லாத பரிசுத்த இரத்தமே மனிதர்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக. விலைக்கிரயமாக சிலுவையில் சிந்தப்பட்டது. அவருடைய பரிசுத்த இரத்தமே மனிதர்களின் பாவத்திற்கு பரிகாரம். அவரே நம் பரிகாரியாகிய கர்த்தர்.
(தீத்து 3:4-5) நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
(1 கொரிந்தியர் 6:11) உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
(யோவான் 1:12) அவருடைய (இயேசு கிறிஸ்துவினுடைய) நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
இந்த மீட்பும் விடுதலையுமே நம்முடைய இரட்சிப்பின் அனுபவத்திற்கும், ஆத்தும இரட்சிப்புக்கும் அஸ்திபாரம் ஆகும்.
2] நித்திய ஜீவன் : சரீர, ஆத்தும மரண பயத்திலிருந்து விடுதலை
பயம் வேதனையுள்ளது என்று பரிசுத்த வேதம் போதிக்கிறபடி, மரண பயம் என்பது இன்னும் கூடுதலான வேதனை. இறந்து விடுவோமோ என்ற பயம். இந்த உலக வாழ்க்கை முடிந்து போனதோ என்ற கலக்கம். நாம் நேசிக்கிற எல்லோரையும் விட்டு பிரிந்து போக வேண்டுமோ என்ற கொடிய கவலை. மட்டுமல்ல, இந்த உலக வாழ்க்கை முடிந்த பின் என்ன இருக்கிறது, நாம் எங்கே போகிறோம் என எதுவும் தெரியாத நிலை. இப்படி பல வகைகளில் மரண பயம் கொடியது.
இப்படிப்பட்ட கொடிய மரண பயத்தை போக்கவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு மனிதனாக வந்து பிறந்தார்.
மரணம் என்றால் என்ன? மரணத்திற்கு பிறகு வாழ்க்கை இருக்கிறதா? மரணத்திற்கு பிறகான வாழ்க்கை எப்படிப்பட்டது? மரணத்திற்கு பிறகான வாழ்க்கை மனிதர்களுக்கு தேவையான ஒன்றா? அதற்கு மனிதர்கள் என்ன செய்ய வேண்டும்? என எல்லாவற்றையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாக வாழ்ந்த பொழுது போதித்திருக்கிறார்.
பரிசுத்த வேதத்தின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து அதை விளக்கிச் சொல்லுவதை கீழ்க்கண்ட வசனங்களின் மூலமாக சற்றே தியானிப்போம். இந்த சத்தியத்தை அறிந்து கொள்வோம். விசுவாசிப்போம். மரண பயத்தை, மரணத்தை ஜெயிப்போம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு என்றென்றும் வாழும் நிலையான வாழ்விற்குள், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்போம்.
மரணம், அதாவது உடலில் ஏற்படும் மரணம் என்பது ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் (உடல்) என தேவனால் படைக்கப்பட்ட மனிதனுக்குள் இருந்து ஆவியும், ஆத்துமாவுமாகிய உள்ளான மனிதன் உடலை விட்டு பிரிந்து செல்வதே ஆகும்.
இந்த உலகத்தில் நாம் வாழும் பொழுது, சகலத்தையும் படைத்து ஆளுகிற சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய தேவனுடைய வார்த்தைகளை கைக்கொண்டு. அவருடைய வழிகளில் நடந்து பரிசுத்தத்தையும் நீதியையும் விசுவாசத்தையும் நாம் வாழ்வின் முடிவு வரை காத்துக்கொண்டு மரணத்தை சந்திக்கும் பொழுது ஆவியும் ஆத்துமாவும் இணைந்த உள்ளான மனிதன் தேவனிடத்தில் பரலோகம் சென்று அவரோடு என்றென்றைக்குமாய் பரலோகத்தில் வாழும் பாக்கியத்தை பெற்றுக் கொள்கிறான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலே மண்ணோடு மண்ணான உடலும் உயிர்ப்பிக்கபட்டு அழிவில்லாத மறுரூபமாக்கப்பட்டு இணைந்து முழு மனிதானாக நித்திய ஜீவனோடு பரலோகத்தில் அவரோடு என்றென்றும் பரம சந்தோஷத்தோடு வாழுகிறான்.
(சங்கீதம் 68:20) நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு.
(எபிரெயர் 2:14-15) ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், (15) ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
(யோவான் 6:47) என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(யோவான் 5:24) என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(1 யோவான் 5:12) குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
(யோவான் 11:25) இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
(1 கொரிந்தியர் 15:22) ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
(யோவான் 6:39) அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.
(யோவான் 6:40) குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.
(யோவான் 12:50) அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.
(யோவான் 8:51) ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
(யோவான் 10:27-29) என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. (28) நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. (29) அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
(1 யோவான் 5:11) தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.
(1 யோவான் 5:20) அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மேகங்களின் மீது வந்து நின்று முதலாவது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களையும், அடுத்து ஆயத்தமாயிருக்கிற தம் பிள்ளைகளையும் ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாக்கி அழைத்துச் செல்கிற இரகசிய வருகை, அதற்கு பிறகு யாவருடைய கண்களும் காண பகிரங்கமாய் இந்த உலகிற்கு வருகிற அவருடைய இரண்டாம் வருகை மிக சமீபமாய் இருக்கிறதே. ஒவ்வொரு நாளும் கடந்து செல்ல செல்ல, அவருடைய வருகையை ஒவ்வொரு நாளாக நெருங்கிக் கொண்டிருக்கிறோமே. ஒருவேளை, பாவத்திலிருந்து, மரண பயத்திலிருந்து விடுதலையாகாமலேயே இப்பூமியில் வாழ்ந்து முடித்துவிட்டால்....அதன் பிறகு?
ஆவி, ஆன்மா மற்றும் உடலைக் கொண்ட மனிதனின் ஆவி தன்னை தந்த தேவனிடத்திற்கு சென்று சேரும், உடல் மண்ணோடு மண்ணாகும் (ஆதியாகமம் 2:7, சகரியா 12:1, பிரசங்கி 12:7, யோபு 34:14-15).
ஆன்மா அல்லது ஆத்துமாவின் நிலை?
ஆத்தும மரணமாகிய நித்திய நரக தண்டனை. பரிசுத்த வேதம் இதை இரண்டாம் மரணம் என்று அழைக்கிறது.
(மத்தேயு 10:28) ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
(வெளிப்படுத்தின விசேஷம் 21:8) பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே இதை சொல்லியிருக்கிறார்.
(யோவான் 8:47-48) தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார். (48) என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
தேவனுக்கே சகல துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக. ஆமென்.
சிலுவை மரணமும் முதல் உயிர்த்தெழுதலும்…
(உயிர்தெழுதல் நாள் தேவ செய்தி)
ஏப்ரல் 2022 (New year Message - April 2022)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே கொண்டாடுவோம்! |
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும், அவருடைய உயிர்த்தெழுதலையும் பரிசுத்த வேதத்தின் மூலமாக நாம் தியானித்துக் கொண்டிருக்கிற இந்த நாட்களில் இன்னுமொரு பரிசுத்த வேத சத்தியத்தை நாம் இந்த தேவசெய்தியின் வழியாக அறிந்து கொள்ள இருக்கிறோம். சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துகிற சத்திய ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக, ஆமென்.
முதலாவதாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் நம்மை எப்படி சுத்திகரிக்கிறது என்றும், இரண்டாவதாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய உயிர்த்தெழுதலினால் நம்மை எப்படி உயிர்த்தெழச் செய்கிறார் என்றும், மூன்றாவதாக நம்முடைய உயிர்த்தெழுதலை குறித்த நம்முடைய நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்றும், பரிசுத்த வேத வசனங்களின் உதவியோடு சற்று தியானித்து அறிந்து கொள்வோம்.
பரிசுத்த வேதத்தில் நாம் அறிந்திருக்கிறபடி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் (1 யோவான் 1:7), பரிசுத்த ஆவியானவர் (2 தெசலோனிக்கேயர் 2:13,1 கொரிந்தியர் 6:11), கர்த்தருடைய பரிசுத்த அக்கினி (ஏசாயா 6:6-7) மற்றும் அவருடைய உபதேசமாகிய பரிசுத்த வேத வசனங்கள் (யோவான் 17:17) ஆகியவற்றின் மூலமாக நம்முடைய சகல பாவங்கள், அக்கிரமங்கள், மீறுதல்கள் யாவும் நீக்கி நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். ஒரு ஆச்சரியமான வேத சத்தியமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணமும் நம்மை சுத்திகரிக்கிறது என்பதையும், இதற்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைத் தாமே சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார் என்பதையும் இன்று நாம் அறிந்து கொள்ளப் போகிறோம்.
(தீத்து 2:14) அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின்படி, நம்மை சுத்திகரிப்பதற்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையிலே தம்மைத் தாமே நமக்காக ஒப்புக்கொடுத்தார். அவருடைய சிலுவை மரணத்தின் வழியாக நாம் எப்படி சுத்திகரிக்கப்படுகிறோம்?
1) கிறிஸ்து இயேசுவின் சிலுவை மரணமும் நம்முடைய சுத்திகரிப்பும்:
நம்மை சுத்திகரிப்பதற்கு முன்பாக நம்முடைய சகல அக்கிரமங்களிலிருந்தும் நம்மை மீட்டுக் கொள்ளுகிறார். மீட்பு (Redeem) என்கிற இந்த வார்த்தையின் அர்த்தம் நமக்காக அவர் ஒரு விலைக்கிரயத்தை கொடுத்து நம்மை மீட்டுக் கொள்கிறார். அந்த விலைக்கிரயம் அவருடைய இரத்தமே. பரிசுத்த இயேசுகிறிஸ்துவினுடைய பாவமில்லாத இரத்தமே. இப்படி அவர் நம்மை மீட்டுக் கொண்ட பின்பு, முதலாவது நம்மை அவருக்கு சொந்தமான ஜனங்களாக இருக்கும்படி சுத்திகரிக்கிறார். இரண்டாவதாக நற்கிரியைகளை செய்ய நாம் பக்தி வைராக்கியம் உள்ளவர்களாக இருக்கும்படி நம்மை சுத்திகரிக்கிறார். அவருடைய சுத்திகரிப்பிற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதை சற்று விளக்கமாக காண்போம்.
அப்படியானால், தமக்குரிய சொந்த ஜனங்களை குறித்து தேவனாகிய கர்த்தர் பரிசுத்த வேதத்தில் என்ன சொல்லியிருக்கிறார்? தம்முடைய சொந்த ஜனங்களிடத்தில் அவர் என்ன எதிர்பார்க்கிறார்? கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் நமக்கு அதை விளக்கிச் சொல்கிறது:
(யாத்திராகமம் 19:5) இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
(உபாகமம் 7:6) நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்.
(உபாகமம் 14:2) நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.
(உபாகமம் 26:18-19) கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும், (19) நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் ....
(ஏசாயா 43:21) இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.
தேவனாகிய கர்த்தருடைய பரிசுத்த வேதத்தின்படி நடந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு பரிசுத்தமும், நீதியும் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்வதே அவருடைய சொந்த ஜனங்களாக நம்முடைய தலையாய கடமை. இந்தக் கடமையை அனுதினமும் நிறைவேற்றி நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இருதயத்தை மகிழ்விப்போம். அவருக்குரிய சொந்த ஜனங்களாய் மகிழ்வோம்.
(பிரசங்கி 12:13) காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
(உபாகமம் 10:12-13) இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, (13) நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
அடுத்ததாக, தேவனுக்கேற்ற பக்தி வைராக்கியத்தோடு நீதியாகிய, கனிகளாகிய நற்கிரியைகளை செய்வதைப்பற்றி சற்று தியானிப்போம்.
(எபேசியர் 2:10) ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
(மத்தேயு 5:16) இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
(1 பேதுரு 2:12) புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
(ரோமர் 2:7) சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.
(பிலிப்பியர் 1:5,6) உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, (6) நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
(2 தெசலோனிக்கேயர் 2:17) உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.
(கொலோசெயர் 1:10) சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்...
(தீத்து 3:8) இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.
2) கிறிஸ்து இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலினால் நம்மையும் உயிர்த்தெழச் செய்கிறார், இரட்சிக்கிறார்:
மரித்தோர் உயிர்த்தெழுதலில் முதற்பலனான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாம் உயிர்த்தெழுந்து உலக மக்கள் அனைவருக்கும் தம்முடைய ஒளியை வெளிப்படுத்துகிறார் என்று பரிசுத்த வேதம் நமக்கு போதிக்கிறது:
(அப்போஸ்தலர் 26:23) ... மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுய ஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும்...
மட்டுமல்ல, பரிசுத்த வேதம் சொல்கிறது:
(யோவான் 1:4) அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனுக்குலம் முழுவதற்கும் வெளிப்படுத்திய அவருடைய ஒளி என்பது உண்மையில் அவருடைய ஜீவன். அது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஜீவன். அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாய் இருக்கிறது. எனவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்:
(யோவான் 11:25) இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
மட்டுமல்ல, நம்முடைய இரட்சிப்பின் பாதையில் நாம் நிறைவேற்ற வேண்டிய நீதியாகிய ஞானஸ்நானத்தின் மூலம் அவருடைய சிலுவை மரணத்தின் சாயலிலும், உயிர்த்தெழுதலின் சாயலிலும் நாம் இணைக்கப்பட்டிருக்கிறோம். இதை நமக்கு விளக்கிச் சொல்லும் பரிசுத்த வேத வசனங்களில் சிலவற்றை கீழே காண்போம்:
(1 பேதுரு 3:21) அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;
(ரோமர் 6:4,5) மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். (5) ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
(கொலோசெயர் 2:12) ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.
3. நம்முடைய உயிர்த்தெழுதலை குறித்து நமக்கு இருக்க வேண்டிய நோக்கம், வாஞ்சை என்ன? வேண்டுதல் என்ன?
ஒவ்வொரு நாளும் கடந்து செல்ல செல்ல, நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மேகங்கள் மேல் வருகிற அவருடைய ரகசிய வருகையை நாம் நெருங்கிக் கொண்டே இருக்கிறோம். ஒருவேளை, மரணம் முந்திக் கொண்டாலும் அல்லது கர்த்தருடைய ரகசிய வருகையை எதிர்கொள்வதாக இருந்தாலும், அதுவரை நம் வாழ்வின் ஒரே நோக்கமும் வாஞ்சையும் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு எடுத்துக்கொள்ளப்பட்டு அவருடைய ராஜ்யம், அதாவது பரலோக ராஜ்யம் சென்று சேர்வது மட்டுமே. இதற்கு ஆயத்தமாவதே இனி நமக்கு மீதமுள்ள வாழ்நாளெல்லாம் நம் ஒரே நோக்கம்.
(1 தெசலோனிக்கேயர் 4:15-17) கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. (16) ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். (17) பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் அவரோடு நாம் எடுத்துக் கொள்ளப்படுகிற பாக்கியத்தின் பலனை தேவனாகிய கர்த்தர் பரிசுத்த வேதத்தில் நமக்கு அதை முன்னறிவித்து உறுதிப்படுத்தி இருக்கிறார். கீழ்க்கண்ட பரிசுத்த வேதவசனங்கள் அதை நமக்கு விளக்குகிறது:
(வெளிப்படுத்தின விசேஷம் 20:4-6) அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். (5) மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். (6) முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
(1 கொரிந்தியர் 15:23) அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் நமக்காக பாடுபட்டு, நாம் அவரை விரும்பத்தக்க ரூபமும் அவருக்கு இல்லாமல் போகும் அளவுக்கு நமக்காக அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு தம்முடைய ஜீவனையும் சிலுவையில் நமக்காக தந்த அவருடைய அன்பை, பிதாவாகிய தேவன் தம்முடைய ஒரேபேரான சொந்த குமாரன் என்றும் பாராமல் நமக்காக சிலுவையில் இயேசுவை கிறிஸ்துவை ஒப்புக்கொடுத்த அன்பை நினைத்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு அவரில் அன்பு கூர்ந்து, ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய இரகசிய வருகைக்கு ஆயத்தமாவோம்.
(வெளிப்படுத்தின விசேஷம் 22:11) ...நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
அப்பொழுது நாம் நம்பிக்கையோடு, விசுவாசத்தோடு அறிக்கை செய்யலாம்:
(ரோமர் 8:35-39) உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், (36) கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? (37) இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. (38) மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், (39) உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
நம் இரட்சிப்பின் அதிபதி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக.
நம்முடைய தேற்றரவாளன் பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி செலுத்தி நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் பிதாவாகிய தேவரீர் ஒருவருக்கே சகல துதி, கனம், மகிமை யாவும் செலுத்துகிறேன், ஆமென்.
தேவ நீதியை குறித்து விரிவாக இங்கே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
எந்த ஜனத்திலாயினும்…
(புத்தாண்டு தேவ செய்தி - 2022)
ஜனவரி 2022 (New year Message - January 2022)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
![]() |
எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற உலக ரட்சகராம் இயேசுகிறிஸ்துவைக் கொண்டு சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறின பிதாவாகிய தேவனுக்கு சகல மகிமையும் செலுத்தி இனிய புத்தாண்டு 2022 அன்பின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். |
![]() |
(அப்போஸ்தலர் 10:34-35) அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.
தேவ கிருபையினால் இந்த புத்தாண்டு பரிசுத்த வேத தியானமாக மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தை நாம் சற்றே தியானித்து சத்தியத்தை அறிந்து கொள்வோம். அது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாக நமக்கு உதவி செய்யும். பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.
தாம் படைத்த மனிதர்களிடத்தில் எந்த பாரபட்சமும் இல்லாத நம் தேவனாகிய கர்த்தர், தம் ஈடு இணையில்லாத அன்பினால் அனைவரையும் நேசிக்கும் கர்த்தர், எந்த ஜனத்திலும் தமக்கு யார் உகந்தவர்கள் (who is accepted with him) என்பதையே மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின் மூலம் நமக்கு விளக்கி சொல்கிறார். அதாவது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களாக இருந்தாலும், அவரை அறிந்து கொள்ளும்படி உண்மையான வாஞ்சையோடு தேடுகிற, அவருக்கு பயந்து தெய்வ பயத்தோடு வாழ விரும்புகிற, யாருக்கும் தீங்கு செய்யாமல் தன்னால் ஆன மட்டும் மற்றவர்களுக்கு நன்மை செய்து வாழுகிற ஒவ்வொருவரும் தேவனுக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு உகந்தவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்வோம். ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.
மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எதிர்பார்க்கிற இரண்டு காரியங்களை குறித்து முதலாவது நாம் அறிந்து கொண்டு, அதன் பிறகு அவருக்கு உகந்தவர்கள் என்ற நிலையிலிருந்து இன்னும் மேலான உறவின் நிலையாகிய தேவனுடைய பிள்ளைகளாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து கொள்வோம்.
1] தேவனுக்கு பயந்திருந்து:
அடிப்படையில் தீமையை வெறுத்து அதை விட்டு விலகுவதே கர்த்தருக்கு பயப்படும் பயம் என்று பரிசுத்த வேதம் நமக்கு போதிக்கிறது. மட்டுமல்லாமல், இது தேவ கட்டளையுமாகும். எனவே இதைக் குறித்து கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்களின் உதவியோடு சற்றே அறிந்து கொள்வோம்.
(நீதிமொழிகள் 8:13) தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; ...
(நீதிமொழிகள் 3:7) ... கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.
(நீதிமொழிகள் 14:2) நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான்.
(நீதிமொழிகள் 16:6) கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
(சங்கீதம் 34:9) கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
(சங்கீதம் 19:9) கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; ...
(நீதிமொழிகள் 28:14) எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.
எல்லாத் தீமைகளையும் தொடர்ந்து செய்து கொண்டே, நான் கர்த்தருக்கு பயப்படுபவன் என்று சொல்லிக்கொள்வது என்பது பரிசுத்த வேதம் போதிக்கும் உபதேசம் அல்ல, மாறாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் மனுஷனின் சொந்த போதனை.
(ஏசாயா 29:13) இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
கர்த்தருக்கு பயந்து நடப்பதின் மேன்மைகள்:
(நீதிமொழிகள் 1:7) கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
(நீதிமொழிகள் 10:27) கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.
(நீதிமொழிகள் 14:26) கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
(நீதிமொழிகள் 14:27) கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
(நீதிமொழிகள் 15:33) கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
(நீதிமொழிகள் 19:23) கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.
(நீதிமொழிகள் 22:4) தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.
2] நீதியை செய்வது:
நம்முடைய பிரதானமான நீதியின் கிரியை, கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனத்தின்படி நம்முடைய விசுவாசம்.
(ரோமர் 4:5) ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்பட்ட தேவ நீதியை விசுவாசித்து கிருபையினால் நாம் நீதிமான்களாக்கப்படுவது ஒருபுறம் (ரோமர் 1:17, 3:22, 3:24). பரிசுத்த வேத கட்டளைகளை, நியாயங்களை கைக்கொண்டு நற்கிரியைகளை செய்து நீதியாய் நடப்பது அல்லது நீதியை செய்வது என்பது மற்றொருபுறம். சுருக்கமாக சொல்வதானால், நாம் நீதிமான்களாக்கப்படுதல் ஒருபுறம், நாம் நீதியை நடப்பிப்பது மற்றொரு புறம்.
எனவே, தேவ நீதியை விசுவாசிப்பதினால் - அதாவது கிறிஸ்து இயேசுவை விசுவாசிப்பதினால் கிருபையைக் கொண்டு நாம் தேவனால் நீதிமான்களாக்கப்படுகிறோம். அதன் பிறகு பரிசுத்த வேத கட்டளைகளை கைக்கொண்டு நீதியை நடப்பிக்கிறோம். இந்த இரண்டையும் நாம் செய்ய வேண்டியது மிக அவசியம். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போல, பரிசுத்த வேதம் போதிக்கும் நீதியின் இரண்டு பக்கங்கள் இவை.
கிறிஸ்து இயேசு சிலுவையில் உலக மனிதர்கள் யாவருக்காகவும் செய்து முடித்த எல்லாவற்றையும் எனக்காக அவர் செய்து முடித்தார் என விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அது நீதியாகவே எண்ணப்படும் என்று பரிசுத்த வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது.
(ரோமர் 4:3) வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
(ரோமர் 4:5) ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
(ரோமர் 4:23) அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காக மாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
நாம் நீதியை, நீதியின் கிரியைகளை செய்வதை குறித்து இன்னும் சற்று அறிந்து கொள்வோம். நீதி என்பது தேவனாகிய கர்த்தர் அருளிய பரிசுத்த வேதத்தில் அவர் நமக்கு போதித்து சொல்லியிருக்கிறவைகளை, அதாவது அவருடைய கட்டளைகள் (statutes), அவருடைய கற்பனைகள் (commandments), அவருடைய நியாயங்கள் (judgements), அவருடைய சாட்சிகள் (testimonies) அடங்கிய அவருடைய பரிசுத்த வேதத்தை கைக்கொண்டு நற்கிரியைகளை செய்வதும், நிறைவேற்றுவதுமே ஆகும். எளிமையாக சொல்வதானால், பரிசுத்த வேதம் மற்றும் பரிசுத்த ஆவியானவருக்கு முன்பாக நீங்கள் நின்று உங்களை சோதித்து பார்க்கும் போது உங்களை குற்றவாளியாக்காத செயல்களை செய்வது என்பதே நீதியை நடப்பிப்பது அல்லது நீதியை செய்வது ஆகும்.
(சங்கீதம் 19:9) ... கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.
(சங்கீதம் 119:138) நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
(சங்கீதம் 23:3) அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
(1 யோவான் 2:29) அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.
(1 யோவான் 3:7) பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
(1 யோவான் 3:10) இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.
(சங்கீதம் 106:3) நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச்செய்கிறவர்களும் பாக்கியவான்கள்.
(லூக்கா 1:6) அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
(எசேக்கியல் 18:5-9) என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
நீதியான கிரியைகளுக்கு ஓரிரு உதாரணங்களையும் பரிசுத்த வேதத்திலிருந்து காண்போம்.
(சங்கீதம் 112:9) வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
(சங்கீதம் 82:3-4) ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
(மத்தேயு 3:14-15) யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
(1 பேதுரு 3:14) நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; ...
(யாக்கோபு 3:18) நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.
இப்படி தேவனுக்கு உகந்தவர்களாக வாழும் நிலையிலிருந்து இன்னும் மேலான நிலையில் தேவனோடு உறவாடுகிற அவருடைய பிள்ளைகளாக, தேவனுடைய பிள்ளைகளாக வேண்டும் என்பதே நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இதய விருப்பம், தேவ சித்தம்.
கர்த்தர் நமக்கு போதித்திருக்கிறபடி தேவனுடைய பிள்ளைகளாக நாம் செய்ய வேண்டியவைகள்:
3] இரட்சிப்பின் அனுபவம்
பழைய பாவ வாழ்க்கைக்கு மனம் வருந்தி, மனந்திருந்தி, பிதாவாகிய தேவனுடைய ஒரே பேரான, சொந்த குமாரன், நேச குமாரன் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முழு மனதோடு விசுவாசித்து, நம் ஆவி, ஆன்மா மற்றும் உடல் என நம்மை முற்றிலும் அவர் கரங்களில் ஒப்புக்கொடுத்து, இந்த வினாடி வரை நாம் செய்த சகல பாவங்களும் நமக்கு மன்னிக்கப்பட பாவ மன்னிப்பை அவரிடத்தில் வேண்டி, அவர் இரத்தத்தினால் நாம் முற்றிலும் சுத்திகரிக்கப்பட வேண்டிக்கொண்டு அவரை நம் இருதயத்தில் நம் சொந்த இரட்சகராக, மீட்பராக, நம் ஒரே மெய் தெய்வமாக ஏற்றுக்கொள்கிற இரட்சிப்பின் அனுபவம். இதை தேவனிடத்தில் வாஞ்சித்து கேட்போம்.
(அப்போஸ்தலர் 10:43) அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
(அப்போஸ்தலர் 4:12) அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
(யோவான் 1:12) அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
4] கிறிஸ்துவின் சபையில் சேர்க்கப்படுதல்
கிறிஸ்துவின் சரீரமாகிய அவருடைய சபையில் ஐக்கியம் கொள்வது.
(மத்தேயு 16:18)...இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
(அப்போஸ்தலர் 2:41,42) அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். (42) அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
(எபிரெயர் 10:25) சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
5] ஞானஸ்நானம்
தேவனைப்பற்றும் நல் மனசாட்சியின் உடன்படிக்கையாகிய ஞானஸ்நானம் பெறுவது.
(1 பேதுரு 3:21) அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;
(ரோமர் 6:4,5) மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். (5) ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
(கலாத்தியர் 3:27) ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
6] இயேசு கிறிஸ்துவின் திருவிருந்து
நமக்காக பிட்கப்படுகிற, மெய்யான போஜனமாகிய இயேசு கிறிஸ்துவின் சரீரம், நமக்காக சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய, மெய்யான பானமாகிய அவருடைய இரத்தம் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நினைவுகூர்ந்து அவருடைய பந்தியில் பங்கு பெறுதல்.
(மத்தேயு 26:26-28) அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். (27) பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; (28) இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
(லூக்கா 22:19,20) பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். (20) போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.
7] பரிசுத்தஆவியானவர்
கர்த்தரே ஆவியானவராய் நமக்குள் வந்து என்றும் நம்மோடு வாசம் பண்ணுகிற மெய்யான நிலையாகிய பரிசுத்த ஆவியானவரை நமக்குள் பெற்றுக் கொள்ளுதல்.
(2 கொரிந்தியர் 3:17) கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
(யோவான் 14:26) என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
தேவனுடைய பிள்ளைகள் என்கிற தேவனோடு இருக்கும் இந்த உறவு இந்த உலக வாழ்வோடு மட்டும் முடிந்து போகிற ஒன்றல்ல. இது இந்த உலக வாழ்க்கைக்கு பிறகும் என்றும் நிலைத்து நிற்கும் ஒரு உன்னதமான, ஈடு இணையில்லாத தேவன் நமக்கு அருளும் பாக்கியம். அவர் இருக்கும் பரலோகத்தில் நம்மை கொண்டு சேர்க்கும் தேவனுடைய ஈவு.
(யோவான் 1:12) அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
(1 யோவான் 3:1) நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
(எபேசியர் 2:4-8) தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, (5) அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். (6) கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, (7) கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.(8) கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
இரட்சிப்பின் அதிபதி நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக.
தேவனுக்கே சகல துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக. ஆமென்.
தேவ நீதியை குறித்து விரிவாக இங்கே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
கிருபையும் சத்தியமும்
(கிறிஸ்துமஸ் தேவ செய்தி)
டிசம்பர் 2023 (Christmas Message December 2023) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
|
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
![]() |
நம்முடைய கர்த்தரும், உலக ரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து முதல் முறை நமக்காக இந்த உலகத்தில் வந்து மனிதனாக பிறந்ததை கொண்டாடுகிற இந்த பண்டிகை காலத்தில் கிறிஸ்து பிறப்பு நன்னாளின் அன்பின் வாழ்த்துகளை சாரோனின் ரோஜா ஊழியங்களின் சார்பாக உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். Merry Christmas & Blessed New year 2024 கிறிஸ்து இயேசுவையே கொண்டாடுவோம்! தேவனுக்கே மகிமையை செலுத்துவோம்! ஆமென். |
![]() |
(யோவான் 1:17) ...கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தை குறித்தே இப்பொழுது சற்று தியானிக்கப்போகிறோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மனித குலத்திற்கு வெளிப்படுத்தப்பட்ட தேவ கிருபை. உலக இரட்சகராம் கிறிஸ்து இயேசுவின் மூலமாக இந்த தேவ கிருபையை, சத்தியத்தை எந்த வகையில்லெல்லாம் நாம் பெற்று, அனுபவித்து, வாழ்ந்து வருகிறோம்? இவ்வுலக வாழ்க்கைக்கு பிறகான நித்திய ஜீவனை நாம் பெற்றுக்கொள்ளவும் இந்த தேவ கிருபையும், சத்தியமும் நமக்கு என்ன செய்கிறது? இவற்றை முழுவதுமாக இந்த ஒரே செய்தியில் விளக்கி சொல்வது கடினம் என்றாலும், அவற்றில் சிலவற்றை கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் மூலமாக நாம் விளங்கிக்கொள்ளலாம்.
(click here to expand)
(யோவான் 3:16) தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
(2 கொரிந்தியர் 9:15) தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.
(யோவான் 4:10) இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.
(ரோமர் 6:23) பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
(1 பேதுரு 1:4-5) அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். (5) கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
(ரோமர் 5:9) இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
(ரோமர் 5:15) ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
(ரோமர் 8:32) தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?
கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்து
(நீதிமொழிகள் 16:6) கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
பரிசுத்த வேதத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து போதித்த அவருடைய போதனைகளிலெல்லாம் கிருபையும் சத்தியமுமாகிய இவ்விரண்டும் இணைந்தே நிறைந்து நிற்பதை நாம் தெளிவாக காணலாம். சத்தியத்தை போதிக்காத, வெறும் கிருபை கிருபை என்று கூச்சலிடுகிற நவீன கால போதனைகள், இரட்சிக்கப்பட்ட பின்பும் எத்தனை பாவம் செய்தாலும், பழைய பாவ வழியிலேயே வாழ்க்கை தொடர்ந்தாலும் அவைகள் ஒன்றுமில்லை, கிருபையினாலே பரலோகம் செல்வோம் என்பது போன்ற போதனைகள் கிறிஸ்து இயேசுவினுடயதல்ல, சத்தியமுமல்ல. கவனம், அது வஞ்சகம், அதில் விழாதிருப்போமாக. தேவ கிருபையின் மேன்மையை, அவசியத்தை குறித்து போதிக்காமல், சத்தியத்தின் பெயராலே எப்பொழுதும் கடிந்துகொண்டே இருப்பதுமான பார சுமையான, கிருபையை நிராகரிக்கிற கிரியை மட்டுமே போதிக்கிற போதனையும் பரிசுத்த வேதம் போதிக்கும் ஒன்றல்ல.
(click here to expand)
(சங்கீதம் 85:10) கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், ...
(சங்கீதம் 26:3) உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன்.
(சங்கீதம் 145:17) கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.
(யோவான் 5:14) அதற்குப்பின்பு இயேசு அவனைத் தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
(குணமாக்கப்பட்டது கிருபை, அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்ற எச்சரிப்பு சத்தியம்.)
(யோவான் 8:10-11) இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
(11) அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
(விபச்சார பாவத்தை ஆண்டவர் இயேசு மன்னித்தது கிருபை, இனிப் பாவஞ்செய்யாதே என்ற எச்சரிப்பு சத்தியம்.)
(பிரசங்கி 8:11) துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.
(பிரசங்கி 11:9) ...உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
(பிரசங்கி 12:14) ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
(அப்போஸ்தலர் 17:30) அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
(2 கொரிந்தியர் 5:10) ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
(ரோமர் 2:16) என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.
(மத்தேயு 16:27) மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
நாம் செய்த எண்ணற்ற பாவங்கள் மன்னிக்கப்பட தேவ கிருபை, பெற்ற மன்னிப்பை காத்துக்கொண்டு பரிசுத்தமும், தேவ நீதியையே நம்முடைய நீதியாக கொண்டு, நீதியின் கிரியயைகளை செய்து தேவனுக்கு பிரியமான வாழ்க்கையை நாம் வாழ வேத சத்தியம் என இவை (கிருபையும், சத்தியமும்) இரண்டுமே இணைந்து, நிறைந்து நிற்பதே கிறிஸ்தவ வாழ்க்கை. முடிவு பரியந்தம் நிலைத்து நின்று இரட்சிக்கப்பட கிருபையும் சத்தியமும் நமக்கு அருளப்பட்டிருக்கின்றன.
(சங்கீதம் 85:10) கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
(சங்கீதம் 26:3) உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன்.
தேவனாகிய கர்த்தர் படைத்த முதல் மனுஷனாகிய ஆதாமும், மனுஷியாகிய ஏவாளும் அவருடைய கட்டளையை சாத்தானின் வஞ்சகத்தினால் மீறி செய்த பாவத்தினால், பாவமும் அந்த பாவத்தினால் மரணமும் உலகத்தில் பிரவேசித்தது. மட்டுமல்ல அந்த பாவம், பூமி சபிக்கப்படவும் காரணமாகி, அந்த சாபத்திற்குள்ளனது இந்த உலகம். இதன் விளைவாக மனிதகுலமும், மனித வாழ்க்கையும் அதாவது உலகம் முழுவதும் சகலவிதமான பாவங்களினாலும், தீங்குகளாளும், சாத்தானின் கிரியைகளாலும் நிறைந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலைக்குள்ளிருந்து கொண்டு தான் மனித குல பாவம் மன்னிக்கப்பட்டு, இனி பாவம் செய்யாத பரிசுத்த வாழ்வு வாழவும், வேத சத்தியத்தை கைக்கொண்டு நீதிமானாகவும் வாழ வேண்டும். இது அவ்வளவு எளிதானதல்ல என்பதுமட்டுமல்ல, சற்றேறக்குறைய இயலாததும் ஆகும். இதை நம்முடைய ஒரு நாள் வாழ்வை நிதானமாக, கர்த்தருக்கு முன்பாக உண்மையாக நினைத்து பார்த்தாலே நமக்கு தெளிவாக விளங்கும்.
இந்த நிலையில், நமக்கு
- நிபந்தனைகளற்ற இரக்கத்தை, அந்த இரக்கத்தை பெற்றுக்கொள்ள தகுதியற்ற நமக்கு கிருபையாக அருளவும் (Unmerited favour of God is grace)
- அந்த கிருபையினாலே, கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியே நம்முடைய நீதி என்கிற சத்தியத்தை (the ultimate truth) நமக்கு அருளிச்செய்து, அந்த வேத சத்தியம் போதிக்கும் நீதியின் கிரியைகளை இந்த உலக வாழக்கையில் நாம் செய்து வாழ
பிதாவாகிய தேவன் கிருபையையும் சத்தியத்தையும் உலக மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக உண்டாக்கி அருளிச்செய்தார். கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்து இயேசுவினாலே வேத சத்தியத்தின்படி எல்லாவற்றையும் இந்த உலக வாழ்க்கையில் நாம் செய்து வாழ நமக்கு பெலன் உண்டு. பரிசுத்தமாக வாழவும், கர்த்தர் போதிக்கிற நீதியின் கிரியைகளை செய்யவும் நமக்கு பெலன் உண்டு. அப்படி வாழும் பொழுது, பிதாவாகிய தேவனுக்கு முன்பாக கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் பரிசுத்தவான்கள், நீதிமான்கள் (1 கொரிந்தியர் 1:31).
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியாத நிலைமையிலிருந்து, அழியாத வித்தாகிய பரிசுத்த வேத வசனத்தினாலே, போதனையினாலே பழைய பாவ வாழ்க்கையிலிருந்து மனந்திரும்பி, நம் சொந்த ரட்சகராக, மீட்பராக, ஒரே தெய்வமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு உண்மையான இரட்சிப்பை பெற்றுக்கொண்ட பின்பும், மேலே சொல்லியிருக்கிற இதே உலகத்தில் தான் நம்முடைய ஆயுளின் காலம் வரை அல்லது கர்த்தருடைய இரண்டாம் வருகை வரை வாழப்போகிறோம். இந்த சூழ்நிலையில், பரிசுத்தமாகவும் தேவ நீதியின்படி வாழவும் நாம் அனுதினமும் முயற்சி செய்து வாழும்போது ஏற்படும் சறுக்கல்கள், தோல்விகள், சோதனைகளிலெல்லாம் நாம் தோற்று விடாமல், தேவ கோபத்திற்கு ஆளாகிவிடாமல், பிரச்சனைகள் நம்மை ஜெயித்து விடாமல், பிசாசினால் அழிந்து விடாமல் நம்மை தாங்கி நின்று மீண்டும் நாம் ஜெயம் பெற்று, நம் பரிசுத்த வாழ்வை கிறிஸ்து இயேசுவுக்குள் தொடரச்செய்வது அவர் மூலமாக உண்டான தேவ கிருபை மற்றும் சத்தியம்.
(click here to expand)
(சங்கீதம் 25:10) கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்.
(யோவான் 1:1) ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
(யோவான் 1:14) அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
(1 யோவான் 1:1) ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
(வெளிப்படுத்தின விசேஷம் 19:13) இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
(1 தீமோத்தேயு 3:16) அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ...
(யோவான் 18:37) ... இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
தேவ கிருபை (Grace of God)
(சங்கீதம் 145:17) கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.
(எபேசியர் 4:7) கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.
(லூக்கா 4:22) எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.
(யோவான் 1:16) அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
(click here to expand)
(அப்போஸ்தலர் 14:3) அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்.
(ரோமர் 5:15) ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
(ரோமர் 5:16-17) மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது. (17) அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.
(ரோமர் 5:20) மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.
(ரோமர் 6:23) பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
(2 தீமோத்தேயு 2:1) ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.
(1 தீமோத்தேயு 1:14) நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.
(2 தீமோத்தேயு 1:9) அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
(2 தீமோத்தேயு 1:10) நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.
(அப்போஸ்தலர் 20:24) ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
(தீத்து 3:6) தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக,
(எபிரெயர் 10:19) ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,… (எபிரெயர் 4:16) ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
(எபிரெயர் 13:9) பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; ...
(2 பேதுரு 3:18) நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
(1 பேதுரு 1:13) ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.
சத்தியம் – உண்மை, உண்மையின் உச்சம் (the ultimate Truth)
-
-
- கர்த்தருடைய வார்த்தை, வேதம் சத்தியம். சமூலமும் சத்தியம். சத்திய வசனம் ( சங்கீதம் 119:142, 43, 160)
- அவருடைய வழிகள் சத்தியம் (வெளிப்படுத்தின விசேஷம் 15:3)
- அவருடைய செய்கைகள் சத்தியம் (சங்கீதம் 33:4)
- அவருடைய காரத்தின் கிரியைகள் சத்தியம் (சங்கீதம் 111:7)
- அவருடைய வசனமே சத்தியம் . (யோவான் 17:17)
-
(click here to expand)
(சங்கீதம் 69:13) ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரககாலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.
(சங்கீதம் 85:10) கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
(2 சாமுவேல் 7:28) இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; ...
(சங்கீதம் 19:7) கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
(சங்கீதம் 25:5) உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.
(சங்கீதம் 26:3) உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன்.
(சங்கீதம் 33:4) கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.
(யோவான் 14:6) அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
(எபேசியர் 1:13) நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
(யோவான் 17:17) உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
(யாக்கோபு 1:18) அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.
(1 பேதுரு 1:23) அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. (லூக்கா 8:11) ...விதை தேவனுடைய வசனம்.
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
(ரோமர் 5:2) ...மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் பெற்றிருக்கிற கிருபையினாலே, தேவ சத்தியமாகிய
(கொலோசெயர் 3:16) கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக;
முடிவுபரியந்தம் இடைவிடாமல் அவருடைய சத்தியத்தின்படி செய்ய நம் இருதயத்தை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாயிருப்போம் (மத்தேயு 24:44)
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக பிதாவாகிய தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
அன்பின் கிறிஸ்து பிறப்பு நன்னாள் மற்றும் இனிய புத்தாண்டு 2024 நல்வாழ்த்துகள்.
கிறிஸ்து பிறப்பு - பரிசுத்த வேத சத்தியம்
கிறிஸ்துமஸ் தேவ செய்திகள்
![]() |
தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்த பிதாவாகிய தேவனுக்கு மகிமையை செலுத்தி, நன்றி செலுத்தி தம்மைத் தாமே பழுதற்ற பலியாக, கிருபாதர பலியாக பிதாவின் திருவுள சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து இந்த பூமிக்கு வந்த உலக இரட்சகராம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே கொண்டாடுவோம். அவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படுவோம், மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம். உங்கள் யாவருக்கும் கிறிஸ்து இயேசு பிறப்பு நன்னாள், புத்தாண்டு 2025 அன்பின் வாழ்த்துகள்! |
![]() |
|
|
![]() தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் |
|
|
|
Merry Christmas & Blessed New year 2025
More Articles …
Subcategories
Messages - Before 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012க்கு முன்
(Meditation on the Word - God's Message - before 2012)
Messages - 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012
(Meditation on the Word - God's Message - 2012)
Messages - 2013
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2013
(Meditation on the Word - God's Message - 2013)
Messages - 2014
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2014
(Meditation on the Word - God's Message - 2014)
Messages - 2015
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2015
(Meditation on the Word - God's Message - 2015)
Messages - 2016
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2016
(Meditation on the Word - God's Message - 2016)
Messages - 2017
Lets Meditate Word of God. Messages - 2017
Messages - 2018
Lets Meditate Word of God. Messages - 2018
Messages - 2019
Lets Meditate Word of God. Messages - 2019
Messages - 2020
Lets Meditate Word of God. Messages - 2020
Messages - 2021
Lets Meditate Word of God. Messages - 2021
Messages - 2022
Lets Meditate Word of God. Messages - 2022
Messages - 2023
Lets Meditate Word of God. Messages - 2023
Messages - 2024
Lets Meditate Word of God. Messages - 2024
Messages - 2025
Lets Meditate Word of God. Messages - 2025
Page 11 of 11
Thou art my King, O God. (Ps 44:4)
Pray

இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். (சங்கீதம் 48:2)
...எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35)