இன்றைய பரிசுத்த வேத வசனம்
தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபித்து கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயங்கொள்ளுவோம்:
என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள். (சங்கீதம் 129:2)You may check
Meditation on the Word of God...Food for your soul: Meditation >> Lets Meditate
![]() |
இன்றைய தியானம் |
பிதாவின் சித்தம் செய்யவே வந்தேன் என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். (யோவான் 6:38) இந்த நாளின் தியான வசனமான மேற்கண்ட வசனம், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே கூறின வார்த்தையாகும். பிதாவாகிய தேவனுடைய சித்தம் என்ன? உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். (யோவான் 3:17) பிதாவாகிய தேவன், தம்முடைய ஒரே பேரான குமாரனான இயேசு கிறிஸ்துவின் மூலமாக உலகத்தின் மக்கள் யாவருக்கும் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை, பாவ மன்னிப்பாகிய மீட்பை தந்தருளி, அதோடு மட்டுமல்லாமல் என்றென்றைக்கும் தம்மோடு வாழும்படியாக நித்திய ஜீவனையும் தந்தருளவே சித்தங்கொண்டு கிறிஸ்து இயேசுவை பூமிக்கு அனுப்பினார்.பிதாவின் சித்தத்தை நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையிலே தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்து - மரித்து உயிர்த்தெழுந்து - பூரணமாக நிறைவேற்றினார். இந்த பாவ மன்னிப்பாகிய மீட்பை, இரட்சிப்பை நாம் பெற்றுக்கொள்ள நாம் செய்ய வேண்டியதெல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனுடைய ஒரே பேரான குமாரன் என்றும், கல்வாரி சிலுவையில் கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்காகவும் இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்தார் என்றும் விசுவாசித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே சொந்த இரட்சகராக, மீட்பராக, ஒரே தெய்வமாக என்பதை முழு மனதோடு விசுவாசித்து ஏற்று கொண்டு முடிவு வரை அப்படியே நிலைத்திருப்பதே ஆகும். அப்பொழுது, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கீழ்க்கண்ட வார்த்தையின்படியே, நமக்கு இந்த உலக வாழ்விற்கு பிறகு நிரந்தரமான, நித்தியமான வாழ்வு தேவனோடு பரலோகத்தில் நமக்கு உண்டாயிருக்கும். குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார். (யோவான் 6:40) ஒருவேளை, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ளமல் போவதற்கு ஒரே காரணத்தை பரிசுத்த வேதம் கீழ்க்கண்டவாறு விளக்குகிறது. (இயேசு கிறிஸ்து) ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். (யோவான் 3:19-20) அப்படி, ஏற்றுகொள்ளாமல் போனால் என்ன நடக்கும் அல்லது அதன் விளைவு என்ன? என்றென்றுமான தண்டனையாம் நித்திய நரக தீர்ப்பு என்று பரிசுத்த வேதம் எச்சரிக்கிறது. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. (யோவான் 3:18) |
|
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
![]() |
இன்றைய தியானம் |
நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம். (1 யோவான் 4:17) பரிசுத்த ஆவியானவர் மூலமாக நம் இருதயத்தில் ஊற்றப்படும் தேவ அன்பு நம்மில் பூரணப்பட வேண்டியதாயிருக்கிறது. அதன் பலனைத் தான் மேற்கண்ட இந்த நாளின் தியான வசனத்தில் நாம் பார்க்கிறோம். நம்மில் தேவ அன்பு பூரணப்பட, நியாத்தீர்ப்பின் நாளிலே, நம்மை உண்டாக்கின தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நாம் நிற்க நமக்கு தைரியம் உண்டாகிறது. நாம் நியாத்தீர்ப்பைக் குறித்து நாம் பயந்து கலங்கத் தேவையில்லை. மேலும், பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்கு அருளப்படும் ஆவியின் ஒன்பது கனிகளில் அன்பே முதன்மையானது. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.(கலாத்தியர் 5:22-23) இந்த ஆவியின் கனியாகிய அன்பு நமக்குள் பூரணப்பட நாம் பரிசுத்த ஆவியானவருக்கு எவ்வளவு தூரம் கீழ்படிந்து, ஒத்துழைப்பு கொடுக்கிறோமோ அவ்வளவாக அன்பு நம்மில் பூரணப்பட ஆரம்பிக்கும். ஆவியின் கனியாகிய இந்த தேவ அன்பு நமக்குள் பூரணப்பட ஆரம்பிக்கும் போது, அது கீழ்க்கண்ட வேத வசனத்தின் படி நற்குணமாக, நீதியாக, உண்மையாக வெளிப்பட ஆரம்பிக்கும். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். (எபேசியர் 5:9) இப்படியாக தேவனுக்கு மகிமை உண்டாக, நாம் கனி கொடுக்கிறவர்களாக முடிவு வரை வாழும் போது நியாத்தீர்ப்பின் நாளிலே நீதியின் சூரியனாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன் நிற்க நமக்கு தைரியம் உண்டாகும். ஏனெனில், அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; ...(1 யோவான் 4:18) சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். (எபேசியர் 3:19) |
|
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
![]() |
இன்றைய தியானம் |
நான் தேவனுக்கு அடிமை ...எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே. (2 பேதுரு 2:19) இந்த நாளின் மேற்கண்ட தியான வசனம், இந்த உலகத்தில் நாம் அடிமைகளாயிருக்க எத்தனையோ காரியங்களும், வாய்ப்புகளும் உண்டென்பதை உறுதியாக தெரிவிக்கிறது. அது, நம் சொந்த பழக்க வழக்கங்கள், கொள்கைகள், பாவ பழக்கங்கள், நேரடியாக பிசாசின் பிடியில் வல்லமையில் அகப்பட்டு அடிமையாயிருத்தல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், பரிசுத்த வேதம் நமக்கு, ஒரு அடிமைத்தனத்தை குறித்து விளக்குகிறது. ஆச்சரியப்படத்தக்க விதத்தில் அது நமக்கு மிகவும் வேண்டியதாயும் இருக்கிறது. நாம் தேவ சித்தத்தை முழுமையாக நிறைவேற்றவும், தேவனாகிய கர்த்தருக்கு முழுமையாக நம்மை அர்பணித்து கீழ்படிவதற்கும் இந்த அடிமைத்தனம் மிக அவசியமாயிருக்கிறது. அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்.... (லூக்கா 1:38) தேவாதி தேவன் மனுஷனாக, இயேசு கிறிஸ்துவாக இந்த உலகத்தில் வந்து பிறந்து மனுக்குலத்தை இரட்சிக்க, தனக்கு ஒரு சரீரத்தை உருவாக்கி பிறக்க கன்னிகையாகிய மரியாளை தம் சித்தத்தின் படி தெரிந்து கொண்டபோது, அதற்கு மரியாள் தன்னை முற்றிலுமாய் அர்பணித்து தேவ சித்தம் தன் மூலமாய் நிறைவேற தன்னை முற்றிலும் தேவனுக்கு அடிமையாக அர்பணித்தார்கள். நம் ஒவ்வொருவரைக் குறித்தும் தேவ சித்தம் நிறைவேற, நம் மூலமாய் தேவ சித்தம் நிறைவேற நாமும் இதையே செய்வது அவசியமாய் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் இதைத்தான் செய்திருக்கிறார். வேதம் சொல்கிறது, கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். (பிலிப்பியர் 2:5-7) மனிதனை பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி மீட்கும்படியாக, பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு தன்னை முற்றிலும் ஒப்புக்கொடுத்து, அர்பணித்து தேவனுடைய ரூபமாயிருந்தும் மனிதனைப் போல அடிமையின் ரூபம் கொண்டார். தேவனாகிய கர்த்தருக்கு அடிமையாயிருக்க, தேவ சித்தத்தை நிறைவேற்ற நாம் நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, நமக்கு மற்றுமொரு மிகப்பெரும் பாக்கியம் உண்டாகிறது. பரிசுத்த வேதத்தில் நம் கர்த்தர் இதை நமக்கு வாக்கு பண்ணுகிறார். அது இந்த பூமியில் பரிசுத்தமாய் வாழ்வதும், அதன் பின்பு கர்த்தரோடு என்றென்றும் வாழ நித்திய ஜீவனுமாகும். இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். (ரோமர் 6:22) |
|
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
![]() |
இன்றைய தியானம் |
அன்பு இல்லாமல் தேவனை அறிந்து கொள்ள முடியாது "அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்." (1 யோவான் 4:8)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ள, நமக்கு அன்பு இன்றியமையாத தேவையாகும். மேற்கண்ட வேத வசனம் இதை கூறுகிறது. மிக சமீபமாக இருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நோக்கி இருக்கிற நமக்கு, ஆண்டவராகிய இயேசுவே சொன்ன அவருடைய வார்த்தை இப்படி சொல்கிறது. அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். (மத்தேயு 24:12) கர்த்தருடைய வருகையை நோக்கிய இந்த கடைசி காலத்தின் கடைசி நாட்களில், ஆண்டவர் சொன்னபடியே மேற்கண்ட வசனம் நம் கண் முன்னே நிறைவேறுவதை நாம் பல வழிகளில் காண்கிறோம். மனிதன் தன் சுபாவத்திலேயே அன்பை இழந்து விடுவான் என்பதைக் குறித்து வேதம் இப்படி எச்சரிக்கிறது: மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள்.. சுபாவ அன்பில்லாதவர்களாயும்,.. (2 தீமோத்தேயு 3:1-3) ஆனால், தேவ அன்பு நமக்குள் பரிசுத்த ஆவியானவரால் நம் இருதயத்தில் ஊற்றப்பட்டிருக்கும் போது தேவ அன்பின் தன்மைகள் எப்படிப்பட்டது என்பதையும் வேதம் நமக்கு தெளிவாக விளக்குகிறது. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். (1 கொரிந்தியர் 13:4-7) இந்த தேவ அன்பு நம்மை நிரப்ப தேவனிடத்தில் நாம் ஊக்கமாய் வேண்டிகொள்வோம். மிகுந்த கிருபையோடு தேவனாகிய கர்த்தர் நமக்கு சம்பூரனமாய் அருள் செய்வார். அப்பொழுது, தேவனிடத்தில் அவருடைய கற்பனைகளை கைகொண்டு அவரில் அன்பு கூறுவதும், நம்மை போல பிறரையும் நேசிப்பதும் சாத்தியமாகும். ஏனெனில், தேவ அன்பிலே நிறைந்து அந்த அன்பிலே நிலைத்திருக்கும் போது தேவனும் நம்மிலே நிலைத்திருக்கிறார். அன்பு ஒருக்காலும் ஒழியாது. ... (1 கொரிந்தியர் 13:8) தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். (1 யோவான் 4:16) சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். (எபேசியர் 3:19) |
|
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
![]() |
இன்றைய தியானம் |
அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. (1 கொரிந்தியர் 13:1-2) நேற்றைய தியானத்தில், அன்பிலே நாம் வேருன்றி இருப்பதை தேவனாகிய கர்த்தர் நம்மிடத்தில் வாஞ்சையோடு எதிர்பார்ப்பதை குறித்து பார்த்தோம். "மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்," (ரோமர் 5:5) என்ற வேத வார்த்தையின் படி தேவ அன்பினால் நிரப்பப்பட நாம் ஊக்கமாய் ஜெபிப்போம். மனிதனின் அன்பு காரண காரியங்களை பொறுத்து இருக்கும், மாறும். ஆனால் தேவ அன்பு என்றென்றும் மாறாத தூய அன்பு. அந்த அன்பு தான் நம்மை இரட்சித்து தேவ பிள்ளைகளாக்கி இருக்கிறது. இந்நிலையில், நாம் நிறைவேற்ற வேண்டிய தேவனாகிய கர்த்தருடைய கற்பனைகளை கிழ்க்கண்ட வேத வார்த்தைகள் நமக்கு சொல்கிறது. இந்த வார்த்தைகளை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நமக்கு சொல்லிருக்கிறார்.
இந்த நாளின் தியான வசனமாகிய 1 கொரிந்தியர் 13:1-2 -படி, நாம் எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும் தேவ அன்பு நமக்குள் இராவிட்டால் நாம் ஒன்றுமில்லை. பரிசுத்த ஆவியானவர் மூலமாக நம் இருதயத்தில் ஊற்றப்படும் தேவ அன்பினாலேயே இந்த கற்பனைளை நாம் நிறைவேற்ற முடியும். சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். (எபேசியர் 3:19) |
|
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |
More Articles …
Subcategories
Messages - Before 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012க்கு முன்
(Meditation on the Word - God's Message - before 2012)
Messages - 2012
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2012
(Meditation on the Word - God's Message - 2012)
Messages - 2013
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2013
(Meditation on the Word - God's Message - 2013)
Messages - 2014
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2014
(Meditation on the Word - God's Message - 2014)
Messages - 2015
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2015
(Meditation on the Word - God's Message - 2015)
Messages - 2016
பரிசுத்த வேத தியானம் - தேவ செய்திகள் - 2016
(Meditation on the Word - God's Message - 2016)
Messages - 2017
Lets Meditate Word of God. Messages - 2017
Messages - 2018
Lets Meditate Word of God. Messages - 2018
Messages - 2019
Lets Meditate Word of God. Messages - 2019
Messages - 2020
Lets Meditate Word of God. Messages - 2020
Messages - 2021
Lets Meditate Word of God. Messages - 2021
Messages - 2022
Lets Meditate Word of God. Messages - 2022
Messages - 2023
Lets Meditate Word of God. Messages - 2023
Messages - 2024
Lets Meditate Word of God. Messages - 2024
Messages - 2025
Lets Meditate Word of God. Messages - 2025
Page 2 of 11
Thou art my King, O God. (Ps 44:4)
Pray

இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். (சங்கீதம் 48:2)
...எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35)