IST (GMT+5.5)

HomePage BaseVerse small

 • SRM-Logo-Carousel-2017
 • Praise Jesus
 • ஸ்தோத்திர பலியிடுகிறவன் தேவனை மகிமைப்படுத்துகிறான்....(சங்கீதம் 50:23)

இன்றைய பரிசுத்த வேத வசனம்

உங்கள் தேவனாகிய கர்த்தருக்கே பயந்து நடப்பீர்களாக; அப்பொழுது அவர் உங்கள் எல்லாச் சத்துருக்களின் கைக்கும் உங்களைத் தப்புவிப்பார் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்தார். (2 இராஜாக்கள் 17:39)

2020 கிறிஸ்துமஸ் தேவ செய்தி


Sharon Rose Ministries

டிசம்பர் 2020 (Christmas Message December 2020)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

christmasOrnam 3

தேவன் நமக்கு அருளிய சொல்லி முடியாத ஈவாகிய, விலை மதிக்க முடியாத வெகுமதியாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவர் நமக்காக இந்த பூமியில் வந்து பிறந்ததை நினைவுகூரும் இந்த நாட்களில், கர்த்தராகிய  இயேசு கிறிஸ்துவை கொண்டாடும்  உங்கள் யாவருக்கும் அன்பின் வாழ்த்துகள். ஆமென்.

christmasOrnam 31

தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் - 2 கொரிந்தியர் 9:15

இந்த தேவ செய்தியில் மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின்படி   பிதாவாகிய தேவன் உலக மனிதர் அனைவருக்காகவும்  அளித்த தம் ஒரே சொந்த, நேச குமாரன் - பரிசுத்த பிள்ளை  இயேசு கிறிஸ்து எப்படியெல்லாம் விளக்கி சொல்லி முடியாத (unspeakable, indescribable), ஈடு இணையில்லாத ஒரு மாபெரும் பரிசாக, வெகுமதியாக இருக்கிறார் என்பதையே சற்று தியானிக்கப் போகிறோம்.

பரிசுத்த பிதாவாகிய தேவன் உலக மக்கள் யாவரையும் நேசிக்கும் தம் இணையில்லா அன்பை தம் குமாரன் இயேசு கிறிஸ்துவை உலகத்திற்கு  அனுப்பி வெளிப்படுத்தினார், மனிதரில் அன்பு கூர்ந்தார். எந்தவித நிபந்தனையும் இல்லாமல்  மனிதருக்கு அவர் அளித்த மாபெரும் அன்பின் ஈவு, வெகுமதி ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இந்த தேவ அன்பின் நோக்கமெல்லாம் உலக மனிதரை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே மீட்டு ரட்சித்து  தம்மோடு ஒப்புரவாக்கி, தம் அன்பின் உறவில் மீண்டும் இணைத்துக் கொண்டு என்றென்றும் தம்முடனே, தாம் இருக்கும் பரலோகத்திலேயே வைத்துக் கொள்வதேயாகும். எவ்வளவு பெரிய பாக்கியம்!!

(யோவான் 3:16) தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

(ரோமர் 5:8) நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

(யோவான் 3:17) உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

(ரோமர் 5:10) நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

(எபேசியர் 2:8) கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

(ரோமர் 8:32) தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

ஈவாகிய கிறிஸ்து இயேசுவே கிறிஸ்தவ வாழ்க்கை:

சொல்லி முடியாத ஈவாகிய கிறிஸ்து இயேசுவே கிறிஸ்தவ  வாழ்வின் ஆதாரம், அஸ்திபாரம். ஆரம்பம், முடிவு. கிறிஸ்து இயேசு எப்படியெல்லாம் விலைமதிக்க முடியாத, விளக்கி சொல்லி முடியாத வெகுமதியாக நமக்கு இருக்கிறார் என்பதைக் குறித்து பரிசுத்த வேத வசனங்களின் மூலமாக சற்றே தியானிப்போம்.

>>>> உலக இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவால் ஒட்டு மொத்த உலகத்திற்கும் பாவ மன்னிப்பு. மட்டுமல்ல  பாவ, சாப மற்றும் இருளின் அடிமைத்தனம், அதிகாரத்திலிருந்து  விடுதலையும் ஆகும். இவை எல்லாவற்றையும் செய்து முடித்தது பிறப்பிலிருந்து சிலுவை மரணம் வரை பாவம் அறியாத பரிசுத்தர் இயேசு, உலக மனிதர் அனைவரின் பாவம், சாபம், நோய்களை தம் மீது ஏற்றுக்கொண்டு நமக்காக சிலுவையில் பாவமாகி (2 கொரிந்தியர் 5:21, 1 யோவான் 3:5), சாபமாகி (கலாத்தியர் 3:13)  மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தம் மட்டுமே.

(யோவான் 1:29) மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

(யோவான் 1:36) இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.

(எபிரெயர் 9:22) நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.

(1 பேதுரு 1:19) குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

(1 யோவான் 1:7) ...அவருடைய (தேவனுடைய) குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

(1 யோவான் 2:2) நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.

>>>>  ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் இரத்தத்தை  விலையாக கொடுத்து மீட்டது தான் நம் ஆத்துமா அல்லது ஆன்மா. இப்படி கிறிஸ்து இயேசு நமக்கு அளித்த ஆத்தும இரட்சிப்பினால்  அவரே நம்  இரட்சகர்,  மீட்பர். கர்த்தராகிய அவருக்கு நாம் நம்மை ஒப்புக்கொடுத்து இருப்பதால், அவருடைய ஆளுகை அதாவது கர்த்தத்துவம் நம் மீது இருப்பதால் அவரே நம் கர்த்தர், கர்த்தாதி கர்த்தர். நம் ஆத்துமாவை மீட்டதோடு மட்டுமல்ல உலகத்தில் நாம் வாழும் காலமெல்லாம் நம் ஆத்துமாவை காத்து, போஷித்து முடிவில் பரலோகம் கொண்டு சேர்க்கும் கிறிஸ்து இயேசுவே மணவாட்டி சபையாகிய நம் ஆத்தும மணவாளன்.

(லேவியராகமம் 17:11) மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.

(அப்போஸ்தலர் 20:28) ...தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை ....

(வெளிப்படுத்தின விசேஷம் 7:14) அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.

(1 கொரிந்தியர் 8:6) பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

(யோவான் 13:13) நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.

(பிலிப்பியர் 2:11) பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

(அப்போஸ்தலர் 17:28) ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; ...

(கொலோசெயர் 1:16-17) ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.(17) அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.

>>>> கிறிஸ்து இயேசுவே நம் பரிசுத்தம், நம் நீதி

(எரேமியா 23:6) அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.

(1 கொரிந்தியர் 1:31) அவரே (கிறிஸ்து இயேசுவே) தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.

(ரோமர் 5:9) இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

(1 கொரிந்தியர் 6:11)...ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

(ரோமர் 5:19) அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

(ரோமர் 5:21) ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

>>>> பிதாவினிடத்தல் நமக்காக பரிந்து பேசும் கிறிஸ்து இயேசு, இவரே நம் பரிகாரி, இவரே நம் மத்தியஸ்தர், இவரே நம்  நித்திய பிரதான ஆசாரியர்.

(எபிரெயர் 9:11-12) கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,(12) வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

(1 தீமோத்தேயு 2:5-6) தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.(6) எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

(எபிரெயர் 10:19-22) ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,(20) அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,(21) தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,(22) துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.

>>>> நம் ஆத்துமா நஷ்டப்படாமல் நித்திய ஜீவனை, பரலோக வாழ்வை பெற்றுக்கொள்ள கிறிஸ்து இயேசுவே வாசல், வழி, சத்தியம், ஜீவன், நித்திய ஜீவன், ஜீவ வார்த்தை, ஜீவ அப்பம், ஜீவ ஒளி, உலகத்திற்கு ஒளி, நல்ல மேய்ப்பன், மெய்யான திராட்சை செடி.

(யோவான் 14:6) அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

(யோவான் 17:17) உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

(யோவான் 1:1) ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

(யோவான் 8:12) மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

(1 யோவான் 1:1) ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.

(யோவான் 6:48, 51) ஜீவ அப்பம் நானே. (51) நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.

(யோவான் 15:1, 5) நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். (5) நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

(யோவான் 10:7, 9) ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (9) நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

(யோவான் 10:11,14-15) நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (14) நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், (15) நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.

(ரோமர் 6:23) பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

(1 யோவான் 5:20) அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

(யோவான் 3:36) குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; ....

(யோவான் 17:3) ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

>>>> இப்படிப்பட்ட விலைமதிக்க முடியாத வெகுமதியாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் இரண்டாம் முறையாக இந்த பூமிக்கு அதி சீக்கிரத்தில் வரப்போகிறார். தாம் இருக்கும் அந்த உன்னதமான இடத்தில், பரலோகத்தில் நாமும் அவரோடு கூட இருக்க விரும்பி நம்மை அழைத்துக்கொண்டு போக வருகிறார். நம் இரட்சிப்பை பூரணப்படுத்த நித்திய ஜீவனை நமக்கு அளிக்க வருகிறார். கர்த்தருடைய இரகசிய வருகைக்கு ஆயத்தமாயிருப்போம்.

(யோவான் 17:24) பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.

(மத்தேயு 24:44) நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.

(ரோமர் 5:17) அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.

தேவனுக்கே சகல துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக. ஆமென்.

Print Email

Thou art my King, O God. (Ps 44:4)

 • Pray for Jerusalem

  இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
  எருசலேமின் சமாதானத்துக்காக
  வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.
  உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும்,
  உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)

 • Sharon-Rose-Ministries-QR- CodeHelp: Scan this image with a QR Code Reader/Scanner from your smart phone / tab.