IST (GMT+5.5)

AboutPage BaseVerse gray

  • About
  • Sharon Rose Ministries

சாரோனின் ரோஜா ஊழியங்கள்

 

நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவை தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர் (சங் 86:13)

2007 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்கள் ஒன்றில் கர்த்தரின் கிருபையினால் பெற்ற ஒரு நல்ல வேலை, ஆவிக்குரிய வாழ்க்கையில் சன்மார்க்க வாழ்வு. அவ்வளவே. வேலையை விட்டு அடுத்த வேலையில் சேர முயற்சித்த பொழுது, கர்த்தருடைய ராஜ்ஜியத்தின் ஊழியனாக அது கர்த்தரின் வேளையாய் அமைந்தது.
 

அழைப்பு

 

ஒருபுறம் வாழ்க்கை அமைதியாய் போய்க்கொண்டிருக்க, மற்றொரு புறம் வருடக்கணக்காய் கர்த்தரின் புடமிடுதல்… ஏன் என்று முழுவதுமாய் விளங்கிக் கொள்ளமுடியாமல் தவித்தபோது, மிக உறுதியான அழைப்பின் வாயிலாக தெள்ளத்தெளிவாய் இரட்சகராகிய தேவனின் பதில் கிடைக்க, சத்தியத்தை அறிந்து கொள்ள முடிந்தது. அழைத்த உண்மையுள்ளவர் தம் ஆவியினால் அபிஷேகித்தார், வரங்களினால் நிரப்பினார்.

 

அழைப்பைத் தொடர்ந்து


இயேசு அழைக்கிறார் ஊழியங்களின் “வல்லமை ஊழிய பயிற்சி”யின் மூலம் நற்செய்தியாளனாக முதல் அடி எடுத்து வைக்க தேவன் சித்தங்கொண்டார், செய்து முடிக்க கிருபை செய்தார். சிறு சிறு வீட்டு கூட்டங்கள், கிராம ஆலயங்களில் செய்தி மற்றும் ஆராதனை வேளைகளில் பயன்படுத்தி வருகிறார்.

 

இந்த இணையதளம்

 

நான் பெற்ற கிருபையை, கர்த்தர் போதித்து வருகிற ஆழ்ந்த சத்தியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவும், முக்கியமாய் எனக்கு ஒப்புவிக்கப்பட்ட ஊழியத்தை தொழில்நுட்பம் மூலமாக விரைவாக அநேகருக்கு கொண்டு சென்று சேர்க்கவுமே இந்த முயற்சி.

 


அன்புடனும் ஜெபத்துடனும்

 

உங்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம், இந்த இணையதளத்தை தொடர்ந்து பாருங்கள். மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள். உங்கள் கருத்துக்களை, நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களை, உங்கள் ஜெபத்தேவைகளை எனக்கு தெரியப்படுத்துங்கள்.

 

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. (தீத்து 1:2)

 

 

நன்றி.

கிறிஸ்துவுக்குள்,

J. இம்மானுவேல் ஜீவகுமார்

God with us

Print Email