IST (GMT+5.5)

    நிறைவேறியதா?

     


    "மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு (கர்த்தராகிய இயேசு கிறிஸ்து) விவரித்துக் காண்பித்தார்." (லூக்கா 24:27)


    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையை (அவர் இந்த பூமியில் பிறந்து வாழ்ந்து, கல்வாரி சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த வாழ்கையை) குறித்து பரிசுத்த வேதத்தின் பழைய ஏற்பாட்டில் (Old Testament) சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களெல்லாம், புதிய ஏற்பாட்டின் காலத்தில் (New Testament) எவ்வாறு நிறைவேறின என்பதை வேத வசனங்களின் ஆதாரத்தோடு இங்கே நீங்கள் காணலாம். அதாவது,இயேசு கிறிஸ்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பிறப்பதற்கும் முன்னதாக கிட்டத்தட்ட பல நூறு ஆண்டுகளுக்கும் (Between 4000BC and 4 BC*) முன்பதாக பழைய ஏற்பாட்டின் காலத்தில் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களெல்லாம், புதிய ஏற்பாட்டின் காலத்தில் (New Testament) எப்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பால் (அதாவது முதல் வருகையால்) எப்படி நிறைவேறியது என்பதை வேத வசனங்களின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.

    முதல் வருகை இவ்வளவு துல்லியமாய் நிறைவேறியிருந்தால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே உரைத்த அவர் தம் இரண்டாம் வருகையும் அவர் சொன்ன படியே நிறைவேறுவது எவ்வளவு உறுதி, நிச்சயம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மிக சமீபித்திருக்கிறது.

    நாம் ஆயத்தமாயிருப்போம், மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம்.

    * (Source: Josephus: Complete Works; by Josephus (Joseph Ben Matthias), written shortly after 100 A.D., age abt. 63; translated by William Whiston, Pub. by Kregel Publications, © 1981, p 365)


    Please wait till the page gets loaded with the PDF document. Thank You.

    You need Acrobat Reader to view this PDF document

    Print Email