பாடுகள்..பாடுகள்... ஏன்?


  பாடுகளை இரண்டு வகையாக பிரித்து பார்த்தால்,

  • கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் அனுபவிக்கிற பாடுகள்
  • தன் தன் சுய இச்சையினால் இழுப்புண்டு பாவத்தில், சோதனையில் அகப்பட்டு படுகிற பாடுகள் (யாக்கோபு 1:14)

  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை, இந்த கடைசி காலத்தின் கடைசி நாட்களில் ராஜ்ஜியத்தின் சுவிஷேத்தை பூமியெங்கும் அறிவிக்கும்படி, பிதாவின் சித்தத்தை பூமியில் நிறைவேற்றும்படி நாம் செய்கிற கிரியைகளினிமித்தம், ஊழியங்களினிமித்தம் நாம் பாடுகளை அனுபவிப்பதைக் குறித்து வேதம் கீழ்க்கண்டவாறு வசனங்களின் மூலம் நமக்கு விளக்குகிறது.  கொலோசேயர் 1:24 இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன்.  பிலிப்பியர் 1:29 ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.


  ரோமர் 8:17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.


  1 பேதுரு 4:13 கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.


  2 கொரிந்தியர் 4:10 கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.


  எனவே இக்காலத்து பாடுகளை, நம் கர்த்தருடைய ராஜ்ஜியத்தில் பெறப்போகிற மகிமைக்கு எவ்வளவேனும் ஈடாகாத இக்காலத்து பாடுகளை, நாம் அனுபவிக்கும் போது கீழ்க்காணும் வசனங்கள் நம்மை தேற்றும்.  ரோமர் 12:5 அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.

  1 கொரிந்தியர் 12:27 நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.

  பிலிப்பியர் 1:20 நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.


  ரோமர் 8:36
  கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ,நாசமோசமோ, பட்டயமோ?

  ரோமர் 8:37 இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.

  பாவங்களினாலே, பரிசுத்தமாய் எப்பொழுதும் வாழ வேண்டியதில் உள்ள குறைவுகளினாலே நாம் படும் பாடுகளுக்கு நம் ஆண்டவரை ஒருநாளும் காரணமாக்க முடியாது. காரணம், நாம் மூச்சு விடும் இந்த வினாடி வரை “ நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே... “ (புலம்பல் 3:22). “ ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.” (ரோமர் 5:21). அந்த கிருபையை வீணாக்காமல், கிருபையின் காலமாகிய இந்த நாட்களை விட்டுவிடாமல் கர்த்தருடைய வசனங்களை நம் வாழ்வில் கைகொண்டு அவர் சித்தம் பூமியில் நிறைவேற்றி , முடிவு வரை பரிசுத்தமாய் வாழ்வோம். அவர் வருகைக்கு ஆயத்தமாயிருப்போம். மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம். பரிசுத்த ஆவியானவரே நமக்கு முற்றும் முடிய உதவி செய்வாராக.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக சமீபித்திருக்கிறது.

  Print Email