IST (GMT+5.5)

    _____________________________________________________________________________________________________________________________________________

    இயேசு கிறிஸ்துSharon Rose Ministries

    தேவ செய்தி - ஏப்ரல்  2017 (Message - April 2017)

    தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்

    _____________________________________________________________________________________________________________________________________________

    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 2017 ஆண்டுகளுக்கு முன் பூமிக்கு வந்து, சிலுவையில் அவர் செய்து முடித்த அவருடைய சகல கிரியைகளையும்,  இவற்றிக்கு காரணமான  உலக மக்கள் அனைவரையும் நேசிக்கிற அளவில்லாத தேவ  அன்பையும்  , தியாகத்தையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக, அவருடைய இரத்தத்தின் மூலமாக வெளிப்பட்ட தேவ கிருபையையும் நன்றியோடு நினைத்து. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், அவர் மூலமாய் பிதாவாகிய தேவனுக்கும் நன்றி செலுத்துகிற காலம் இது.  அவருக்குள் நம்மை புதுப்பித்துக் கொள்வோம். அதற்கே இந்த நேரம்.  முழு கிறிஸ்தவ வாழ்க்கையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையிலிருந்தே ஆரம்பிப்பதால்,  சிலுவையில் அவர் பட்ட பாடுகளின் வழியாக அவர் நமக்கு உண்டுபண்ணி வைத்திருக்கிற சகல கிருபைகளையும், பாக்கியங்களையும்  நாம் அவரிடத்தில் வேண்டி பெற்றுக் கொள்ளவோம்.

    இந்த பரிசுத்த வேத சத்தியத்தை சற்றே  தியானிப்போம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து யார், எப்படிப்பட்டவர்  என்பதைக்குறித்து பரிசுத்த வேதம் நமக்கு திட்டமும் தெளிவுமாக போதிக்கிறது:

    (மத்தேயு 1:21) அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

    (யோவான் 1:29) மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

    (யோவான் 1:1-2,14) ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

    (யோவான் 1:4, 9) அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.  உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.

    (ரோமர் 1:5) மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.

    (யோவான் 3:16) தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    (ரோமர் 8:32) தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

    (1 யோவான் 4:10) நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

    (யோவான் 20:31) இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எதற்காக இவ்வுலகத்திற்கு வந்தார்? அவரே விளக்கிச் சொல்கிறார்:

    (யோவான் 6:38) என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.

    (யோவான் 10:10) திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

    (யோவான் 12:46) என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.

    (யோவான் 12:47) ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.

    (யோவான் 18:37) ... சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.

    (யோவான் 6:39) அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.

    (யோவான் 6:40) குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

    (மாற்கு 10:45) அப்படியே, (இயேசு கிறிஸ்து) மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.

    மட்டுமல்ல

    (1 யோவான் 3:8) பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

    (எபிரெயர் 2:14-15) ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,  ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.

    (கொலோசெயர் 2:13-15) உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;  நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.


    சிலுவைப் பாடுகள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு அவரை மீறி, அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை அல்ல. அவரே அதை விரும்பி ஏற்றுக் கொண்டு தம் பிதாவின் சித்தத்தை   நிறைவேற்றினார். அதைப் போலவே சிலுவையில் அவருடைய மரணமும் அதை தொடர்ந்து மூன்றாம் நாள் அவருடைய உயிர்த்தெழுதலும் அப்படியே. இதைக் குறித்து அவரே சொன்ன பரிசுத்த வசனங்களை கவனிப்போம்:

    (யோவான் 12:27) இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.

    (யோவான் 10:17, 18) நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.

    (வெளிப்படுத்தின விசேஷம் 1:18) மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

    (யோவான் 11:25) இயேசு ...: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சொல்லும் கீழ் கண்ட வசனத்தின்படியான அவருடைய பிள்ளைகளாயிருப்போம். அவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாயிருப்போம்.

    (யோவான் 17:8) நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.

    Print Email