IST (GMT+5.5)

    இந்த வார தியானம்Sharon Rose Ministries

    (Meditation for the Week)

    தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


    காலம்


    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

    நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். (எபேசியர் 5:16)

    மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் மிக முக்கியமான  ஒரு ஆலோசனையை மட்டுமல்ல, மிகவும் அருமையான தேவ வழி நடத்துதலையும் நமக்கு சொல்லுகிறது.

    ஒவ்வொரு புதிய வருடத்திற்குள் நாம் அடியெடுத்து வைக்கும் போதும். நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நோக்கி நெருங்கிக்கொண்டே இருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே தான், இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்பதையும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பரிசுத்த வேதம் மேற்கண்ட வசனத்தில் மூலம் நமக்கு போதிக்கிறது.

    பரிசுத்த வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன் மற்றும் அதற்கு பின் நடக்க இருக்கும் சம்பவங்களை நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. அப்பொழுது, மேற்கண்ட வசனத்தை நாம் முழுமையாக அறிந்து கொள்ள, அதன் தீவிரத்தை உணர்ந்து கொள்ள அது உதவியாயிருக்கும்.

    பரிசுத்த வேத வசனம் விளக்கும் அந்த ஏழு நிகழ்வுகள் என்பது என்ன? அவைகள் நடந்தேறும் நாட்கள், காலங்கள் எது? இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் குறித்து பரிசுத்த வேதத்தில் ஏராளமான குறிப்புகளும், விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் ஓரிரு வசனங்களை மாத்திரமே இங்கே குறிப்பிடுகிறேன்.

    1. அந்திகிறிஸ்துவின் வருகை (Coming of Antichrist)

    2 தெசலோனிக்கேயர் / 2 Thessalonians 2:1-10

    2. (a) உபத்திரவ காலம் - 3 ½ ஆண்டுகள் (Tribulation Period)

    வெளிப்படுத்தின விசேஷம் / Revelation 12:1,2,13

    3. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை அல்லது மத்திய வானத்தில் வருதல் (Rapture / Secret Coming)

    1 கொரிந்தியர் / 1 Corinthians 15:51-52
    1 தெசலோனிக்கேயர் / 1 Thessalonians 4:16-17
    யாக்கோபு / James 5:7,8
    மத்தேயு / Matthew 24:40

    2. (b) மகா உபத்திரவ காலம் - 3 ½ ஆண்டுகள் (Great Tribulation Period)

    மத்தேயு / Matthew 24:29
    வெளிப்படுத்தின விசேஷம் / Revelation 15,16

    4. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை (Second Coming of Lord Jesus)

    அப்போஸ்தலர் / Acts 1:9-11
    வெளிப்படுத்தின விசேஷம் / Revelation 1:7
    சகரியா / Zecharia 14:4-5

    5. கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சி (Millennial Reign of Lord Jesus Christ)

    வெளிப்படுத்தின விசேஷம் / Revelation 20:4

    6. நித்திய நியாயத்தீர்ப்பு அல்லது வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு (Eternal Judgement / White Throne Judgement)

    தானியேல் / Daniel 12:2
    2 கொரிந்தியர் / 2 Corinthians 5:10
    ரோமர் / Romans 14:10

    7. புதிய வானம், புதிய பூமி, புதிய எருசலேம் (A New Heaven, A New Earth and the Holy City New Jerusalem)

    2 பேதுரு / 2 Peter 3:10
    வெளிப்படுத்தின விசேஷம் / Revelation 21:1-2

     

    நாம் கொண்டாடும் இந்த 2014ம் ஆண்டில், ஒரு உதாரணத்திற்கு அல்லது எளிதாக புரிந்து கொள்வதற்காக - நாம் ஒரு சிறு கணக்கீட்டை செய்து பார்ப்போம். ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் இரண்டாம் வருகை 2025  ஆண்டில் சம்பவிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு முன்பதாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் முதல் மூன்று நிகழ்வுகள் நடந்து முடிய வேண்டும். அதாவது, 2019ம் ஆண்டில் இருந்து 7 வருடங்கள் அந்திக் கிறிஸ்துவின் ஆட்சி (அந்திகிறிஸ்துவின் வருகை, உபத்திரவ காலம் - 3 ½ ஆண்டுகள், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை, மகா உபத்திரவ காலம் - 3 ½ ஆண்டுகள்). அப்படியானால், இந்த உதாரணத்தின் படி இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே நாம் கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாக நமக்கு உள்ளது. அதன் பிறகு, இறுதியான ஒரு சோதனை (வெளிப்படுத்தின விசேஷம் 13:16-18) அந்திகிறிஸ்துவின் நாட்களில் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு உண்டு. அது, என்ன நடந்தாலும் முடிவுவரை - கர்த்தாகிய இயேசுவையே தெய்வமாக வணங்கி அவருடைய பிள்ளையாகவே வாழ்ந்து முடிப்பது (வெளிப்படுத்தின விசேஷம் 14:13) அல்லது சாத்தானை, சாத்தானின் மறு உருவமாகிய அந்திகிறிஸ்துவை வணங்குவது (வெளிப்படுத்தின விசேஷம் 14:9).  இதில் கர்த்தருடைய பிள்ளைகளாய் முடிவரை நிலைத்திருக்கும் போது மட்டுமே நித்திய ஜீவன் - அதாவது பரலோகில் ஆண்டவரோடு என்றென்றும் வாழ்வு. இல்லாவிட்டால், பரிசுத்த வேதத்தில் காண்கிறபடி என்றென்றும் சாத்தானுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் (மத்தேயு 25:41) என உண்டாக்கப்பட்ட நித்திய அக்கினி தண்டனையான நரகம் (வெளிப்படுத்தின விசேஷம் 14:9-11).

    எனவே, கிருபையாக தேவனால் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த காலங்களை பிரயோஜனப்படுத்திக் கொண்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி பணிந்து கொள்வோம். அவர் தம் பிள்ளைகளாகவே முடிவுரை வாழுவோம். பரிசுத்த ஆவியானவர் தாமே நம்மை அப்படியாக காத்து நடத்துவாராக. அப்பொழுது நியாயத்தீர்ப்பின் நாளிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை பார்த்து சொல்வார்:

    அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். (மத்தேயு 25:32-34)


    நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


    Print Email