IST (GMT+5.5)

இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


மனதில்லை


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா? (யோவான் 8:43)

தேவனாகிய கர்த்தருடைய பிரமாணங்களை, கற்பனைகளை, அவருடைய வழிகளை - அதாவது பரிசுத்த வேதமாகிய அவருடைய சத்தியத்தை நாம் அறிந்துகொள்ள முடியாமல் போவதின் காரணத்தை தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே தம் வாயினால் மேற்கண்ட வசனத்தில் கூறியிருக்கிறார்.

ஏன் மெய்வழியை, நித்திய ஜீவனை, சத்தியமாம் இயேசு கிறிஸ்துவை, அவருடைய உபதேசத்தை அறிந்து கொள்ள மனமில்லாமல் போகிறது? பரிசுத்த வேதம் விளக்கும் சில காரியங்களை கீழ்க்கண்ட வசனங்களின் மூலமாய் நாம் அறிந்து கொள்ளலாம்.

1. பரிசுத்த வேத உபதேசம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து,  சர்வ வல்லமையுள்ள கடவுள் அருளியது என்று ஏற்றுக் கொள்ளாத போது அதை அறிந்து கொள்ள மனதில்லை. 

அவருடைய (தேவனுடைய) சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். (யோவான் 7:17)

2. நாம் வாழும் இந்த வாழ்க்கை முழுவதும் இந்த உலகத்தை மட்டுமே மையமாக கொண்டு நம்மை படைத்த மெய் தேவனாம் கர்த்தரை மறந்து, மறுத்து  அதாவது உலக ஆசைகள், இச்சைகள், நோக்கங்கள் என இதற்காக மட்டுமே வாழ்நாள் முழுவதும் செலவிடுவது என்ற உலக, மாம்ச சிந்தை  தேவனாகிய கர்த்தருக்கு விரோதமானது. இப்படிப்பட்ட சிந்தை இருக்கும் போது, தேவ உபதேசத்தை கேட்க மனதிருப்பதில்லை.

...மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். (ரோமர் 8:7-8)

3. மட்டுமல்ல, பரிசுத்த வேத வசனம் சொல்கிறது:

ஒளியானது (இயேசு கிறிஸ்து) உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். (யோவான் 3:19-21)

மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின்படி, ஒளிக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உபதேசத்திற்கும் என்ன சம்மந்தம்?

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். (யோவான் 8:12)

எனவே தான், ஒரு மனிதன் தன் பொல்லாத சிந்தை, செயல்கள், வாழ்க்கை முறைகள், நோக்கங்கள் கண்டிக்கபடாதபடிக்கு ஆண்டவர் இயேசுவினிடத்தில் அவருடைய உபதேசத்தை கேட்க வராதிருக்கிறான் என்று பரிசுத்த வேதம் விளக்குகிறது. இச்சூழ்நிலையிலும் ஆண்டவருடைய உபதேசத்தை கேட்க மனதிருப்பதில்லை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை, அவருடைய உபதேசத்தை கேட்க மனதிருந்து, அவைகளை அறிந்து கொள்ளும் போது என்ன நடக்கிறது?

வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும் (profitable for doctrine), கடிந்துகொள்ளுதலுக்கும் (for reproof), சீர்திருத்தலுக்கும் (for correction), நீதியைப் படிப்பிக்குதலுக்கும் (for instruction in righteousness) பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:16-17)

மட்டுமல்ல,  கர்த்தருடைய பிள்ளைகளுக்கு சகலமும் - அதாவது ஆண்டவர் இயேசுவினுடைய எல்லா நன்மைகளும், ஆசீர்வாதங்களும், ஆலோசனைகளும், தேவ வழிநடத்துதலும் என சகலமும் ஆண்டவருடைய உபதேசத்தில். அவருடைய வார்த்தையாகிய பரிசுத்த வேதத்திலேயே  அடங்கியிருக்கிறது. எனவே, கர்த்தருடைய வசனத்தை, அவருடைய உபதேசத்தை தாகத்தோடு நாடித் தேடி, முழு மனதோடு அதை அறிந்து கொள்ளும் போது, அதின் படி நடக்கும் போது நம் நிலை என்ன என்பதை ஆண்டவர்  இப்படி வாக்கு பண்ணுகிறார்:

துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். (சங்கீதம் 1:1-3)

மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின்பேரில் மகிழுகிறேன். (சங்கீதம் 119:162)

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. (சங்கீதம் 119:165)

...உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. (சங்கீதம் 119:174)

உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன். (சங்கீதம் 119:99)

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. (சங்கீதம் 119:105)

கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை.... (2 தீமோத்தேயு 3:15)

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. (சங்கீதம் 19:7-8)

எனவே தான், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் அவரிடத்தில் சொன்னார்கள்:

...ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. (யோவான் 6:68)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email