IST (GMT+5.5)

இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


தேவ கிருபை


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார். (2 தீமோத்தேயு 1:9,10)

பிதாவாகிய அன்பின் தேவனுடைய, அவர் தம் ஒரே பேரான சொந்த குமாரனாம் அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக நமக்கு வெளிப்படுத்தப்பட்ட மிகப் பெரும் தேவ மகிமையின் மிக முக்கியமான ஒரு சத்தியம் தேவ கிருபை.  இந்த தேவ கிருபையின் மூலமாக நாம் பெற்ற மிகப் பிரதானமான ஒரு அற்புதம், நாம் பெற்ற மிகப் பிரதான பலன் நம்முடைய இரட்சிப்பு, இந்த இரட்சிப்பினால் நாம் பிதாவின் அன்பின் உறவிலே மீண்டும் இணைக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளானதே ஆகும். இதைக்குறித்த பரிசுத்த வேதத்தின் சில வசன விளக்கங்கங்களை இங்கே பார்ப்போம்.

ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, (தீத்து 2:11)

அவருடைய (தேவனுடைய) கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய (இயேசு கிறிஸ்துவினுடைய) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் (இயேசு கிறிஸ்துவுக்குள்) நமக்கு உண்டாயிருக்கிறது. (எபேசியர் 1:7)

ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். (எபிரெயர் 8:12)

அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், (கலாத்தியர் 1:15)

அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; (எபேசியர் 2:5,8)

உங்களுக்குப் புத்திசொல்லும்படிக்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதி, எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன். (1 பேதுரு 5:12)

தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, (தீத்து 3:6)

பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,  அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது; (கொலோசெயர் 1:4,6)

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. (புலம்பல் 3:22)

....ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார். (ஏசாயா 54:8)

அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. (சங்கீதம் 106:1)

நம் தேவனாகிய கர்த்தர் நமக்கு அருளிச் செய்கிற இரட்சிப்பின் பரிபூரணமாம் நித்திய ஜீவனும் தேவ கிருபையே:

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (ரோமர் 6:23)

....உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள். (1 பேதுரு 3:7)


இந்த தேவ கிருபை எப்படி நமக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது?

கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது. (எபேசியர் 4:7)

இந்த தேவ கிருபை நமக்குள்ளே பெருக வேண்டுமா? எப்படி பெருக வேண்டும்?

நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று. (1 தீமோத்தேயு 1:14)

தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது. (2 கொரிந்தியர் 4:15)

ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு. (2 தீமோத்தேயு 2:1)

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென். (2 பேதுரு 3:18)

இந்த தேவ கிருபையை இன்னும் பெற்றுக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். (எபிரெயர் 4:16)

அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. (யாக்கோபு 4:6)

இந்த கிருபையை பெற்று தேவ பிள்ளைகளான நாம் என்ன செய்ய வேண்டும்?

ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். (எபிரெயர் 12:28)

இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (எபேசியர் 3:11)

நாம் இந்த தேவ கிருபையைக் குறித்து ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஈடு இணையில்லாத இந்த தேவ கிருபையை இழந்து போக நேரிடும் என்று பரிசுத்த வேதம் எச்சரிக்கிறது:

பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். ...கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; .... (எபிரெயர் 13:9)

பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள். (யோனா 2:8)

ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது. (யூதா 1:4)

தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். (எபிரெயர் 10:29)

அன்பின் பிதாவாகிய தேவன் தாமே, நம் அருமை இரட்சகர், நம் கர்த்தர், அதி சீக்கிரத்தில் மீண்டும் இந்த உலகத்திற்கு வரப்போகும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்குள் நம்மை தம் பிள்ளைகளாக கிருபையினால் முடிவு வரை காத்து கொள்வாராக. ஆமென்.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். (2 தெசலோனிக்கேயர் 3:18)

நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (2 தெசலோனிக்கேயர் 1:2)

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென். (எபேசியர் 6:24)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email