IST (GMT+5.5)

இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


அன்பே பெரியது


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. (1 கொரிந்தியர் 13:13)

And now abide faith, hope, love, these three; but the greatest of these is love. (1 Corinthians 13:13) NKJV

பரிசுத்த வேதத்தில், தேவ அன்பைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிற மிக விசேஷமான ஒரு வசனமே மேற்கண்ட வசனம்.

இதில், விசுவாசத்தைக் குறித்து பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது? பின்வரும் வசனங்கள் அதைக் குறித்த அடிப்படை சத்தியத்தை விளக்குகிறது. விசுவாசம் என்பது:

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. (எபிரெயர் 11:1)

மட்டுமல்ல, விசுவாசம் என்பது பரிசுத்த ஆவியானவரால் அருளப்படும் ஆவிக்குரிய வரமாகவும், கனியாகவும் இருக்கிறது :

வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், ... (1 கொரிந்தியர் 12:9)

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், .. (கலாத்தியர் 5:22)

நம்பிக்கையை குறித்து பரிசுத்த வேதம் சொல்கிறது: இயேசு கிறிஸ்து கிறிஸ்துவே நம் நம்பிக்கை என்று. மட்டுமல்ல,

...கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். (கொலோசெயர் 1:27)

நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் ... (1 தீமோத்தேயு 1:1)

அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது. (எபிரெயர் 6:19)

... ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம். (1 தீமோத்தேயு 4:10)

பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. (ரோமர் 15:13)

ஆனால், இவை எல்லாவற்றிலும் மேலானாதும், மிக விசேஷமானதும், பெரியதுமானது அன்பே. உலகம் அன்பைக் குறித்து பல விளக்கங்களை, அர்த்தங்களை சொல்கிறது. அதுவும் இந்த கடைசி காலத்தின் கடைசி நாட்களில் அவைகள் நமக்கு அதிர்ச்சியையே அளிக்கிறது. ஆனால், என்றென்றும் மாறாததும், நிலைத்திருப்பதுமான தேவனுடைய வார்த்தையாம் பரிசுத்த வேதம், உண்மையில் அன்பு என்றால் என்ன, அதன் தன்மைகள் என்ன அது எங்கிருந்து தோன்றுகிறது மற்றும் இன்னும் பல சத்தியங்களையும் விளக்குகிறது.

பின்வரும் பரிசுத்த வேத வசனங்களை பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு, மிகுந்த நேரம் எடுத்து தேவ பிரசன்னத்தில் அமர்ந்து தியானித்துப் பாருங்கள். தேவ அன்பே மெய்யென்பதும், அந்த தேவ அன்பே அன்பென்றும், அந்த அன்பின் மகிமை ஈடு இணையே இல்லாததென்றும் விளங்கும்.


... தேவன் அன்பாகவே இருக்கிறார். (1 யோவான் 4:8, 16)

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. (1 யோவான் 4:10)

தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. (1 யோவான் 4:9)

அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். (1 யோவான் 4:19)

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது...... (1 கொரிந்தியர் 13:4-8)

விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். (எபேசியர் 3:17-19)


பிதாவாகிய தேவனுடைய பரிசுத்த பிள்ளையாம் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வெளிப்பட்ட தேவ அன்பினால் நாம் பெற்ற ஈடு இணையில்லா பாக்கியம் ஒன்று உள்ளது. அது ஒன்று போதும் நாம் என்றென்றும் தேவனுடைய பாதம் தொழுது கொள்ள, அவருக்கு நன்றியையும் மகிமையையும் செலுத்தி அவரை ஆராதிக்க. அது :

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; ... (1 யோவான் 3:1)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email