Written by J.Emmanuel JeevaKumar.

 

இரண்டும் வேறல்ல


இரண்டு விஷயங்கள் -

 

கல்வாரி சிலுவையில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் பிதாவாகிய தேவன் நம்மை (மனுக்குலம் முழுவதையும்) மீண்டும் தம்மோடு ஒப்புரவாக்கிக் கொள்ள ஈடு இணையில்லாத, மாறாத மாசற்ற தம் அன்பினால் நமக்கு அருளின பாவ மன்னிப்பு, இரட்சிப்பு, நித்திய ஜீவனுக்காக நாம் அவருக்கு வேறு என்ன செய்யமுடியும், அவரில் அன்பு கூறுவதை தவிர? நம் அன்பின் உண்மையை அவருக்கு எப்படி காண்பிக்க முடியும், கர்த்தருடைய வார்த்தைகளை கைகொள்வதை தவிர? இதை நாம் உணர்ந்துகொண்டால் கர்த்தருடைய வார்த்தையை கைகொள்வது மிகக்கடினம் என்பது போன்று நம் சிந்தையில் தோன்றும் சத்துருவின் பொய்களையும், உண்மையில் நம்மை கைகொள்ள விடாமல் நம்மோடு போராடுகிற சத்துருவின் வஞ்சனையையும் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு வெல்ல முடியும்.


கீழ்க்கண்ட வசங்களை, வேதத்தை தியானித்து பாருங்கள். சத்தியமான அவருடைய வார்த்தைகளின் ஜீவனும், பெலனும் நம் ஆத்துமாவை நிரப்பும்.

1 யோவான் 3:18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.


1 கொரிந்தியர் 7:19 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.



யோவான் 14:15
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.


யோவான்14:21
என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.



யோவான்14:23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.



யோவான்14:24
என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.


ஜெபமும், வேதமும்: தேவனுக்கு பிரியமான வாழ்க்கை நாம் வாழ, நம் தேவனாகிய கர்த்தரில் அன்பு கூற அடிப்படையும், ஆதரமுமான இரண்டு காரியங்கள். உண்மையில் இவை இரண்டில் ஒன்றுக்கு பதிலாக மற்றொன்றையோ அல்லது இவை இரண்டில் ஏதாவது ஒன்றை செய்வதோ (நாம் செய்யக்) கூடாத காரியம். காரணம், அது ஆவிக்குரிய வாழ்வில் தோல்வியையே கொண்டு வரும்.

கர்த்தருடைய வசனங்களை நம் வாழ்வில் கைகொண்டு அவர் சித்தம் பூமியில் நிறைவேற்றி அவர் உள்ளம் மகிழ்வித்து அவரில் அன்புகூறுவோம். அவர் வருகைக்கு ஆயத்தமாயிருப்போம். பரிசுத்த ஆவியானவரே நமக்கு முற்றும் முடிய நமக்கு உதவி செய்வாராக.

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக சமீபித்திருக்கிறது.

Print

Joomla SEF URLs by Artio