எருசலேம் - இயேசு மகாராஜாவின் நகரம்

... அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35)

 

அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். (சகரியா 14:4)


எருசலேம் - கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் மிக முக்கியமான அடையாளம் - இன்னும் சொல்லப்போனால் எருசலேம் கர்த்தரின் இரண்டாம் வருகைக்கு உலகுக்கு கொடுக்கப்பட்ட ஒரு கால கடிகாரம். இங்கு நடக்கும் ஒவ்வொரு காரியமும் வேத தீர்க்கதரிசனங்களோடும், கர்த்தருடைய வருகையோடும் மிக நெருங்கிய தொடர்புடையது.எருசலேமில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் தற்செயலானது அல்ல - அது அரசியல், வரலாறு என எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி. எனவே, தற்போது நம் கண்ணெதிரே எருசலேமில் நடக்கும், எருசலேமிற்கு விரோதமாக நடக்கும் ஒவ்வொரு காரியத்தையும் வேதத்தின் துணையுடன் உற்று கவனித்தல் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு மிக அவசியமானது.
  
வேதத்தில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கும், எருசலேமிற்கும் உள்ள தொடர்பையும், எருசலேமைப் பற்றிய தீர்க்கதரிசனங்களையும், கடைசி நாட்களில் எருசலேமில் நடக்க இருக்கும் வேதம் சொல்லும் நிகழ்வுகளைப் பற்றியும் 7 பகுதிகளைக் கொண்ட இந்த வீடியோ தொடரில் நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இவை எல்லாம் நீங்கள் சம்பவிக்க காணும் போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நாம் நினைப்பதை விட மிக மிக அருகில் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். கர்த்தருடைய நாளும், நாழிகையும் மட்டுமே நமக்கு தெரியாது. பிதா ஒருவரே அதை அறிவார். அவ்வளவு சமீபம்.
 

நாம் ஆயத்தமாயிருப்போம், மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம்.

Print

Joomla SEF URLs by Artio