கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. (சங்கீதம் 122:6)

தேவனாகிய கர்த்தர் தம் இரண்டாம் வருகைக்கு உலகிற்கு கொடுத்த கால கடிகாரம் இஸ்ரவேல் தேசம் என்று சொல்லுமளவிற்கு, அங்கு நடக்கும் ஒவ்வொரு அசைவும் பரிசுத்த வேதத்தின் படி முக்கியமானது, அர்த்தமுள்ளது. எனவே தான், இஸ்ரவேல் தேசத்தின் நிகழ்வுகளை நாம் உற்று கவனித்தலும், அதை பரிசுத்த வேத தீர்க்கதரிசனங்களோடு ஒப்பிட்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எவ்வளவு மிக அருகிலிருக்கிறது என்று அறிந்து கொள்வதும் தவிர்க்க முடியாதது. அன்பு சகோ.பால் தினகரன் அவர்களுக்கு 2014 ஏப்ரல் 6 ம் தேதி அன்று பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்திய இந்த தீர்க்கதரிசன வீடியோவை பாருங்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எவ்வளவு சமீபித்து இருக்கிறது என்பதையும், கர்த்தருடைய வருகையின் பரிசுத்த வேதம் உரைக்கும் அடையாளங்கள் நம் கண் முன்னே வெகு வேகமாக, துல்லியமாக நிறைவேறி வருவதையும், இயேசு மகாராஜாவின் நகரமாம் எருசலேம் - நகரத்திற்காக, இஸ்ரவேல் தேசத்திற்காக ஜெபிப்பதின் அவசியத்தையும் (சங்கீதம் 122:6) அறிந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு நாம் ஆயத்தமாவோம், மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம்.

கீழ்காணும்  பரிசுத்த வேதத்தின்  பகுதிகள் எல்லாம் நீங்கள் காணும் இந்த தீர்க்கதரிசனத்திற்கு சில சாட்சிகள்.இன்னும் பல வசனங்கள் பரிசுத்த வேதத்தில் கொடுக்கப்பட்டு இருந்தாலும் சிலவற்றை மாத்திரம் கீழே குறிப்பிட்டுள்ளேன். இந்த பரிசுத்த வேத வசனங்களை எல்லாம் பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு தியானித்துப் பாருங்கள். தேவனுடைய ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்ட இஸ்ரவேல் - எருசலேமைக் குறித்த இந்த காரியங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எவ்வளவு சமீபத்தில் இருக்கிறது என்பதை உங்களுக்கு வெளிப்படுத்தும். நன்றி.

தானியேல் 9:25-27,தானியேல் 11:36,மத்தேயு 24:15-22, லூக்கா 21:24

இந்த தீர்க்கதரிசனம் - தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உள்ளது. வீடியோ Playlist -ஐ கிளிக் செய்து பாருங்கள்.

Print

Joomla SEF URLs by Artio