___________________________________________________________________________________________________________________________________

கிருபாதார பலிSharon Rose Ministries

தேவ செய்தி - ஏப்ரல் 2019 (Message - April 2019)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்

___________________________________________________________________________________________________________________________________

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

(ரோமர் 3:26) கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.

பாவம் நம்மை விட்டு நீங்க, நம்முடைய பாவங்கள் பரிகரிக்கப்பட பலி வேண்டும், பலியின் இரத்தம் சிந்தப்பட வேண்டும். அந்த இரத்தம் பாவத்தை பரிகரிக்கும். இது பரிசுத்த வேதத்தில் தேவனாகிய கர்த்தர் எழுதிவைத்த  சத்தியம், உண்மையின் உச்சம். மாறாப் பிரமாணம்.

(லேவியராகமம் 17:11) மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.

முழு உலக மனுமக்களின் பாவத்திற்கு பரிகார வழி? எவ்வளவு பலி? எத்தனை இரத்தம்? - அதற்கு ஒரே வழி தேவன் தம்முடைய நீதியை காண்பிக்கும்படி உண்டு பண்ணின கிருபாதார பலி.

(ரோமர் 3:25) தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும்,

(ரோமர் 3:26) கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.

அப்படியானால், கிருபாதார பலியின் விசேஷம் என்ன? முழு மனுக்குலத்திற்கும் என்றைக்கும்  பலிக்கும் ஒரே பலியா? இது சாத்தியமா?  ஆம், இது சாத்தியம் தான், கிறிஸ்து இயேசுவே  அந்த கிருபாதார பலி என்பதே பரிசுத்த வேத சத்தியம். இதை விளக்கும் பரிசுத்த வேத வசனங்களில் சிவற்றை கீழே காண்போம்.

(மத்தேயு 1:21) அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

(மத்தேயு 27:54) நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.

(1 பேதுரு 1:19) குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

(யோவான் 1:29) மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

(யோவான் 1:36) இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.

(யோவான் 8:46) என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.

(யோவான் 14:30) இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.

(யோவான் 19:4) பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான்.

(யோவான் 10:36) பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?

(2 கொரிந்தியர் 5:21) நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

(1 பேதுரு 2:22) அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;

(1 பேதுரு 2:23) அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.

(1 யோவான் 3:5) அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.

(எபிரெயர் 7:26) பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.

(கலாத்தியர் 3:8-9) மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

கிருபாதார பலி - கிரியையினால் அல்ல, தேவ கிருபையினால் பலிக்கும் பலி - இதற்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம் 2019 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்து இயேசு சிலுவையில் உலக மக்களின் பாவத்தை தன் மீது சுமந்து, அப்படி சுமந்ததினால் நமக்காக அவர் பாவமாக்கப்பட்டு சிலுவையில் சிந்தின அவருடைய இரத்தத்தை இன்றும் நாம் நம்பி ஏற்றுக்கொண்டு அதை விசுவாசித்தாலே போதும், கிருபையினால் உண்டான பலியாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம் பாவங்களை நீக்கி நம்மை சுத்திகரித்து, கிருபாதார பலி நமக்கு பலிக்கும். நம்மை பரிசுத்தமாக்கும். இரட்சிக்கப்பட, ஆத்தும மீட்பை பெற இதைத்தவிர நாம் செய்ய வேண்டிய கிரியை வேறொன்றில்லை. அதாவது இந்த கிருபாதார பலியின் பலன்களை, பாவப் பரிகாரத்தை நாம் பெற்று பரிசுத்தமாக வேறு எதையும் செய்ய வேண்டியதில்லை. கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தை பற்றிக்கொள்ளும்  விசுவாசமே ஒரே தேவை. மெய்யாகவே எவ்வளவு எளிய வழி, தேவ கிருபையின் வழி...கிருபாதார பலி. இரட்சிக்கப்பட்ட  பின் ஒவ்வொரு நாளும் பரிசுத்தமாக வாழுவதும், நம் பரிசுத்தத்தை காத்துக் கொள்ள வேண்டியதும் தேவ கட்டளை. இதற்கு பரிசுத்த ஆவியானவரே நமக்கு உதவி செய்கிறவர்.

(எபேசியர் 1:7) அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.

(எபேசியர் 2:8-9) கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

(ரோமர் 4:5) ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.

(1 யோவான் 2:2) நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.

அன்பு உண்டானதே இந்த கிருபாதார பலியாகிய இயேசுகிறிஸ்துவை, தன் சொந்த குமாரனை, தன் ஒரே மகனை பிதாவாகிய தேவன் மனுக்குல மீட்பிற்காக சிலுவைக்கு அனுப்பியதால் தான். அன்பின் ஆதியும் மூலமும் பிதாவாகிய  தேவனே, தேவாதி தேவன் ஒருவரே. நம் உலக வாழ்வின் பல உறவின் வடிவங்களில் நாம் காணும், அனுபவிக்கும் அன்பு அவரால் உண்டானது. இதை கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனம் விளக்குகிறது:

(1 யோவான் 4:10) நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

தேவன் மனுக்குலத்திற்கு உண்டாக்கின மீட்பின் திட்டத்தின் விலை, விலைக்கிரயம் - கிருபாதார பலியின் இரத்தம், விலைமதிக்கவே முடியாதது, ஈடு இணையில்லாதது. இப்பேற்பட்ட ஆத்தும மீட்பை, இரட்சிப்பின் திட்டத்தை விசுவாசித்து ஏற்றுகொள்ள மறுத்தால்,  நிராகரித்தால்,  மறுதலித்தால் அதன் விளைவும் எண்ணிபார்க்க முடியாதது - அது நித்திய ஆக்கினை, அதாவது இந்த உலக வாழ்விற்கு பின் ஆத்துமா என்றென்றும் நரகத்தில்.

(யோவான் 3:17) உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

(யோவான் 3:18) அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

(யோவான் 3:19) ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.

தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

Print

Joomla SEF URLs by Artio